தீபாவளியின் பெருமை !!!

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல்,எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம்.

நரகாசுரனின் நிஜப்பெயர்: நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

தீபாவளியின் பெருமை: ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு, தீபாவளியை இப்படிக் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன? என்ற சந்தேகம் எழுந்தது. உடனே அவர், சிவபெருமானின் சீடரான சனாதன முனிவரிடம் சென்று கேட்டார். முனிவரே, புனிதமான எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மகாலட்சுமி இருக்கிறாள். அரப்புப் பொடியில் சரஸ்வதி வாசம் செய்கிறாள். வாசனை நிறைந்த சந்தனத்தில் பூமா தேவியும்; மஞ்சள் கலந்த குங்குமத்தில் கவுரிதேவியும் நிறைந்திருக்கிறார்கள்.

தீபாவளி நாளில் நீர்நிலைகளில் கங்கையும், புத்தாடை, அணிமணிகளில் மகாவிஷ்ணுவும், தீபாவளி மருந்தில் தன்வந்திரியும் உறைகிறார்கள். இனிப்புப் பலகாரங்களில் அமிர்தம் நிறைகிறது. மலர்களில் யோகினிகள் வசிக்கிறார்கள். தீபத்தின் சுடரில் பரமாத்மாவும், பட்டாசுகளின் தீப்பொறியில் ஜீவாத்மாவும் தோன்றுகிறார்கள். எனவேதான் தீபாவளித் திருநாளில் எல்லா தெய்வங்களின் அருளையும் பெறும் விதமாக, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, மலர்களால் இறைவனை அலங்கரித்து, தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டு, பலகாரங்களை நிவேதனம் செய்து உண்டு, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாட இயலாதபடி வறுமையில் உள்ளவருக்கு, அதனைக் கொண்டாட உதவுவது, கோடானகோடி தான பலன்களுக்கு ஈடானது..! என்று தீபாவளிப் பண்டிகையின் பெருமையினை எடுத்துரைத்தார் சனாதன முனிவர்.

source:::::DINA MALAR…TAMIL DAILY…

Natarajan

இது தெரியுமா உங்களுக்கு ?…மரத்தடி பிள்ளையார் !

அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா? மழை பெய்தாலோ, நல்ல வெயில் அடித்தாலோ குடை வேண்டும். அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவை யும் அவை குடைபிடித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்கு கிறது என்பது ஒரு ரகசியம். பனிக்காலம் இலையுதிர் காலம். அப்போது, இந்த மரங்கள் இலையை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். அதாவது, குடையை மடக்கி விடும் எனலாம். அப்போது, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல, வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். சீதோஷ்ண நிலையால் அவர்களைக் கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற கருணை யுடன் தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டு விட்டனர் என்பது இன்னொரு ரகசியம். மரத்தடியில் ஒதுங்கும் சாக்கிலாவது, அங்கிருக்கும் இறைவனை ஒருதடவையாவது மனிதன் வணங்கிவிட மாட்டானா என்ற மகான்களின் ஆதங்கம், மரத்தடி தெய்வ பிரதிஷ்டையின் மற்றொரு ரகசியம்.

source:::::DinaMalar…Tamil daily

Natarajan

நவராத்திரி ….விஜய தசமி பூஜை ……

source:::::DinaMalar….Tamil Daily….

Natarajan

வெற்றி திருநாளான விஜயதசமி கொண்டாடுவது ஏன்?
Temple images

விஜயதசமி கொண்டாடுவது ஏன்:பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் “மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை “ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது “பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது “மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது “காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது “துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் “தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு “சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.

விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

ஒழுக்கத்திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை “அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

நவராத்திரி …8ம் நாள் சரஸ்வதி பூஜை ….

Temple images

நவராத்திரி எட்டாம் நாள் (அக்.23) சரஸ்வதி பூஜை. அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமரவைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். “சியாமளா என்றும், “ராஜமாதங்கி என்றும் இவளை அழைப்பர். இவளை வழிபட அறிவுவளர்ச்சி, ஞானம் உண்டாகும். மதுரை மீனாட்சியம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தருகிறாள். மதுரையில், அம்பாளை சுவாமியை விட உயர்ந்தவளாகக் காட்டுவதுண்டு. ஒரு கணவன் தன்மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, அவளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டால், அவள் கணவனைத் தெய்வமெனக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் தத்துவம் இதில் வெளிப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப்பொங்கல், சுண்டல், அவல், பொரி.
தூவவேண்டிய மலர்: வெள்ளைத்தாமரை,மருதாணி இலை.

பாட வேண்டிய பாடல்
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாயிருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

 

source::::::Dina Malar…Tamil Daily

Natarajan

 

நவராத்திரி 6ம் நாள் வழிபாடு………

 
நவராத்திரி ஆறாம் நாள்: வழிபடும் முறை

SOURCE::::DINAMALAR…TAMIL DAILY
Natarajan
Temple images

அக்.21ல் அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபடவேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு உண்டாகும். நாளை மதுரை மீனாட்சியம்மன், சிவசக்தி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. கயிலையில் சிவனும், அம்பிகையும் இருந்த போது, பிருங்கி முனிவர், தீவிர சிவபக்தரான இவர், அம்பாளை வலம் வராமல் சிவனை மட்டும் வணங்கினார். அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன், தேவியை நெருங்கி அமர்ந்தார். ஆனால், முனிவர் வண்டாக உருவெடுத்து இருவருக்கும் நடுவில் புகுந்து, இறைவனை மட்டும் வலம் வந்தார். இதையடுத்து அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன் பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். சிவசக்தியின் மகிமையை உணர்ந்த பிருங்கி அர்த்தநாரியை வலம் வந்து ஆசிபெற்றார். இக்கோலத்தைத் தரிசித்தால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும்.

நைவேத்யம்: வெண்பொங்கல்
தூவ வேண்டிய மலர்: பிச்சி, செவ்வந்தி

பாட வேண்டிய பாடல் :
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

நவராத்திரி 5ம் நாள் வழிபாடு …..

SOURCE::::DINA MALAR  Tamil daily…
Natarajan
Temple images

நாளை(அக்.20ல்) அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வவளம் பெருகும். நாளை மதுரை மீனாட்சியம்மன் “மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். மலையத்துவஜ பாண்டியனும், அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திரபாக்கியம் இல்லாமல் வருந்தினார். அந்தணர்களை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தின் பயனாக உமையவளே யாகத்தீயில் தோன்றினாள். அவளுக்கு தடாதகை என பெயர் சூட்டினர். அவளது கண்கள் மீன் போல் இருந்ததால், மீனாட்சி எனப்பட்டாள். அவளுக்கு வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் தந்து இளவரசியாக்கினார். அவள் அஷ்டதிக்குகளும் நடுங்கும்படியாகப் போருக்குப் புறப்பட்டாள். மீனாட்சியின் வீரத்தைக் கண்டு மன்னர்கள் அஞ்சினர். எல்லாரையும் வென்றபிறகு, ஈசன் ஆளும் கயிலாயமலையையும் பிடிக்கச் சென்றாள். தேவியின் பராக்கிரமத்தைக் கண்ட நந்தியம்பெருமான் பயந்துபோய் சிவபெருமானை துணைக்கு அழைத்தார். அஷ்டதிக்குகளையும் வென்ற உமையவள், ஈசனைக் கண்டதுமே பெண்மைக்கே உரிய நாணம் கொண்டாள். வீரத்தால் உலகை வென்ற அம்பிகை, நாணத்தால் உலகாளும் ஈசனை வென்றாள். நாமும் அனைத்து செயல்களிலும் வெற்றிவாகை சூடி முதலிடம் பிடிக்க அம்பாளை வணங்கி வருவோம்.

 நைவேத்யம்: கல்கண்டு சாதம்
தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ

பாட வேண்டிய பாடல்:

அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே!
ஆலவாய் ÷க்ஷத்ர ஒளியே உமையே!
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே!
வைகைத் தலைவியே சரணம் தாயே!

நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு …..

source:::::DINA MALAR…Tamil Daily..
Natarajan
Temple images

நாளை (அக்.19ல்) அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். அருளாளரான குமர குருபரர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்பது வயது வரையுள்ள பாலபருவ விளையாட்டு பாடல்கள் நூறு உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து ஆட்டி மகிழ்வர். இதனை “ஊசல் பருவம் என்பர். அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான நாளை, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை சேயாக மாறி ஊஞ்சலில் ஆடுவதை நாளை காண்போமா!

 நைவேத்யம்: புளியோதரை
தூவ வேண்டிய மலர்கள்: செந்தாமரை, ரோஜா

பாட வேண்டிய பாடல்:

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே!
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்!
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே!
உத்தமி பைரவி ஆடுகவே!
வழிபடும் எங்கள் வாழ்வினிலே
வழித்துணையாய் வந்து ஆடுகவே!

ஓதி மலை முருகன் …ஒரு பக்தரின் அனுபவம் !!!!!

source:::: input from one of my contacts….

Natarajan

“ஓதி மலை முருகனின் அற்புதம்”

  
 சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம் ஓதி மலை, இங்கே முருகன் கோவில் அமைந்துள்ளது. வறட்சியான பகுதி, மரங்கள் அதிகம் இருக்காது, இருக்கும் பெரும்பாலான மரங்களும் முள் மரங்களே. கோவில் 1650+100 செங்குத்தான படிக்கட்டுகளை கொண்டது, நகரத்து வயதானவர்கள் ஏற முடியாது, வயது குறைந்தவர்களே இதில் ஏற திணறி விடுவார்கள், உண்மையிலேயே மிக சிரமம் முதல் முறை எங்கும் உட்காராமல் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் நாக்கு தள்ளி முக்கால்வாசி முக்கி முக்கி போயும் வேறு வழி இல்லாமல் உட்கார்ந்துவிட்டேன். கொஞ்சம் மறந்து பின்னால் சாய்ந்தாலும் பல்டி போட்டு விடுவோம், அவ்வளோ செங்குத்தான பகுதி. மிகைப்படுத்தி கூறவில்லை. நான் சபரி மலை சென்ற போது கூட இவ்வளோ சிரம படவில்லை. இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே போக முடியும்,வாகன பாதை கிடையாது.
கோவில் மிக எளிமையாக இருக்கும்,எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல். இந்த கோவிலுக்கு வரும் ஐயர் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருவார் (படி ஏறி படி ஏறி திடமாக இருக்கிறார்) ஒரு சில நாட்கள் கோவிலிலேயே தங்கி விடுவார். அவர் எப்படி தான் ஏறி போய் பூசை செய்கிறாரோ !! நினைத்தாலே கண்ணை கட்டுது.எந்த வித ஆடம்பர அலங்காரமும் இல்லாமல் எளிமையான முருகன் சிலை, பார்க்கவே அற்புதம். இத்தனை உயர மலையிலும் ஒரு கிணறு உள்ளது. கஷ்டப்பட்டு நடந்து வந்தாலும் மேலே வந்ததும் ஒரு நிம்மதி கிடைக்கிறது.
விசயத்துக்கு வருகிறேன், என்னுடைய அக்கா இந்த கோவில் முருகன் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள், இங்கே சென்று வேண்டினால் நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பிக்கை, அதை உண்மை ஆக்கும் வகையில் ஒரு சில சம்பவங்கள் நடந்தன, எனவே எனக்கும் மிக ஆச்சர்யம். நமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது என்பதை நான் முழுமையாக நம்புபவன். கடவுள் மீது நம்பிக்கை உண்டு ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. நடந்த ஒரு சில விஷயங்கள் என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
என் அக்காவின் கணவர் உறவினர் 4 பேருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கும் இந்த கோவில் சென்ற வந்த பிறகு குழந்தை பிறந்தது (நீண்ட காலமாக குழந்தை இல்லாமல்) மூவரின் நிலை எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் உண்மை. எனக்கு தெரிந்த மீதி இருவர் பற்றி கூறுகிறேன்
ஒரு தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, பல மருத்துவர்களிடம் காண்பித்து விட்டார்கள் மருத்துவர்களும் ஆணின் விந்தணுவில் சரியான அளவு உயிரணு இல்லை,எனவே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார்கள், திருமணம் ஆகி 5 வருடம் ஆகி விட்டது. அனைவரும் கை விட்ட பிறகு அனைவருக்கும் நினைவு வருவது கடவுள் தானே. எனவே என் அக்காவின் விருப்பத்திற்காக இதையும் முயற்சி பண்ணலாமே என்று அவர்கள் கோவில் சென்று முருகனை வேண்டி வந்தார்கள், அடுத்த மாதமே அவர்கள் கருவுற்றார்கள், தற்போது குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள். இது நம்பவே முடியாத அதிசயம்.
இன்னொரு தம்பதி எனக்கு மிக நெருங்கிய உறவினர் திருமணம் ஆகி 20 வருடம் ஆகி விட்டது ஒரு முறை கருத்தரித்து அழிந்து விட்டது. பிறகு கருவுறவே இல்லை, அவரின் (ஆணின்) விந்தணுவில் உயிரணு இல்லை என்று கூறி விட்டார்கள். இவரும் இந்த கோவில் வந்து வேண்டி கொண்டார், இதற்காக பல விரதங்கள் பல வேண்டுதல்கள் என்று பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. பிறகு என் அக்காவின் ஆலோசனை படி (என் அக்கா மருத்துவர்) சென்னை கமலா மருத்தவரிடம் ஆலோசனை பெற்று செயற்கை முறையில் தற்போது கருத்தரித்துள்ளார்கள்.
இது அறிவியல் தான் இங்கே எங்கே கடவுள் வந்தார் என்றால் என்னிடம் பதில் இல்லை. 20 வருடம் குழந்தை இல்லாமல் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி பல நாட்கள் அழுது, மற்றவர்களின் பேச்சுகளை சமாளித்து இந்த நிலையை அடைந்தவர்களிடம் போய் இது கடவுள் செயல் அல்ல அறிவியல் என்று கூறினால் நம்மை அவர் என்ன கூறுவார் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. வெளியே இருந்து கூறுகிறவர்கள் என்ன வேண்டும் என்றாலும் கூறலாம், கஷ்டபடுகிறவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். தற்போது கருவுற்று இருக்கிறார்கள், இன்னும் குழந்தை பிறக்கவில்லை, அவர்கள் நலமுடன் குழந்தை பெற அந்த முருகன் ஆசிவர்த்திப்பானாக (Updated: இவருக்கு குழந்தை பிறந்து நலமுடன் இருக்கிறார்கள்).
இன்னொரு பெண், இவருக்கு திருமணமே ஆகவில்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் சரியான வரன் கிடைக்கவில்லை. என் திருமணத்திற்கு முன்பு இருந்து பார்க்கிறார்கள். தற்போது என் அக்கா கோவிலுக்கு சென்று வர கூறி, போய் வந்த பிறகு தற்போது நல்ல இடத்தில் வரன் கிடைத்துள்ளது.
கோவிலுக்கு போகாமல் இருந்தால் கடவுள் வரன் கொடுக்க வில்லை என்றால், அது என்ன கடவுள் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. திருமணம் ஆகாமல் தள்ளி போவது எவ்வளோ பெரிய கொடுமை என்று அந்த நிலையில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் அதுவும் குறிப்பாக பெண்கள். அந்த நிலையில் இருப்பவர்கள் கடவுளிடம் உன்னை தேடி வந்தால் தான் கொடுப்பாயா என்றெல்லாம் கேக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.
நான் மூன்று முறை இதோடு சென்று வந்துள்ளேன் எனக்கும் பல நன்மைகள் நடந்ததாகவே கருதுகிறேன். என் பகுதியை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஏன் கூறினேன் என்றால் இதை போல கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள், பல முயற்சிகளை செய்து இருப்பார்கள், கடைசியாக இதையும் ஏன் முடிந்தால் முயற்சித்து பார்க்க கூடாது, நல்லது நடக்கவில்லை என்றாலும், கெட்டது நடக்க வாய்ப்பில்லையே. நம்பிக்கையோடு எதை செய்தாலும் அதற்க்கு பலன் உண்டு, அது கடவுளுக்கு எனும் போது கொஞ்சம் கூடுதல் சக்தி இருப்பதாகவே உணருகிறேன்.
கடவுள் நம்பிக்கை பற்றி பேசும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது நமது பதிவர் அனுராதா அவர்கள் கூறியது தான். “நான்கு பக்கமும் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்”
 ஓதி மலை முருகனின் அற்புதம்
தூரத்தில் இருந்து ஒரு கிளிக்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
பார்க்குறதுக்கு சின்ன மலையா இருக்கேன்னு தப்பு கணக்கு போட்டுடாதீங்க, ஏறும் போது தான் அதன் கஷ்டம் தெரியும்.
 ஓதி மலை முருகனின் அற்புதம்
மலையின் ஆரம்பம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
ஒவ்வொரு 300 படிக்கட்டிற்கும் ஒரு இளைப்பாறும் மண்டபம் இருக்கும் (850 படிக்கட்டு வரை)
 ஓதி மலை முருகனின் அற்புதம்
சமதரையே கிடையாது முழுவதும் படிக்கட்டே தான்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
850 வது படிக்கட்டு அருகே ஒரு சிறு கோவில்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
இதன் பிறகு இளைப்பாறும் மண்டபம் கிடையாது
 ஓதி மலை முருகனின் அற்புதம்
உயரத்தில் இருந்து ஒரு கிளிக்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
கோவிலை அடைந்த பிறகு கோவிலின் முகப்பு பகுதி
 ஓதி மலை முருகனின் அற்புதம்
கடைசி 100 படிக்கட்டு இங்கே தான்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கோபுரம் மட்டுமே எடுத்தேன்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
தூரத்தில் தெரிவது பவானி சாகர் அணையின் தண்ணீர்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
 ஓதி மலை முருகனின் அற்புதம்
மேக மூட்டம் ஒரு சில இடங்களில் இருப்பது மேலே இருந்து பார்க்கும் போது அழகாக தெரிந்தது
 ஓதி மலை முருகனின் அற்புதம்
வெய்யில் நேரத்தில் காலில் செருப்பு இல்லாமல் ஏற இறங்க முடியாது, ஒரு முறை என் அக்கா இருவர் கோவிலுக்கு போகும் போது வெய்யில் இல்லாததால் செருப்பு போடாமல் சென்று விட்டு வரும் போது வெய்யில் கொளுத்தி, நடக்க முடியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது தனி கதை. கருங்கல் என்பதால் சூடு தாறுமாறாக இருக்கும்.
ஓதி மலை  செல்க முருகன் அருள் பெருக
Happy moments, praise God. Difficult moments, seek God. Quiet moments, worship God. Painful moments, trust God. Every moment, thank God
                                         Best regards, Govindan

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாடு ….

Temple images

நாளை (அக்.18ல்) அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

 நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

 

source:::: DINAMALAR ….Tamil Daily

Natarajan

 

Othi Malai Murugan Koil…..

Source:::input from one of my contacts…..an interesting read for all….

Natarajan

ஓதி மலை முருகனின் அற்புதம்
 

OTHI MALAI

Name : OthiMalai Aandavar Temple
Location : This is near to Punjai Puliam Patti, Sathyamangalam(Tk), Erode(Dt).No of Steps : 2000This the one of the famous Temple of Lord Muruga. Bus: Mini Bus from Puliam Patti & Bus from Mettupalaya to Puliam Patti Town Buses and Private bus. Bus stop Name is “Irumbarai”Specialty of the Temple: Lord Muruga having “Eight (8)” hands and “Five (5)” faces. It’s so nice place and a loveable atmosphere.
Sri Kumara Subramanyar temple

Murugar Temple at Odhimalai, near Kovai, Tamilnadu

  
The Sri Kumara Subramanyar temple is situated at Odhi malai (hill) near Sirumugai, Mettupaalayam, Kovai. 

Lord Muruga is said to reside on hills and it is believed that this hill is the highest.  The Lord gives darshan with 5 faces and eight arms.  The five faces indicate that he is identical with Siva.  The Lord of this temple is hence also known as Sivakumaran and Kumarasivam.

Why the hill is known as “Odhi Malai”  There is a belief that Lord Muruga revealed, recited (odhinaar) the meaning of the Pranavam “OM” to his father Lord Siva on this hill & hence the name “Odhi Malai”.  Among the arupadai veedus of Muruga, Swamimalai is said to be the sthalam where Lord Muruga revealed the meaning of Pranavam to his father.  But, there are locations near Odhimalai, which makes the locals believe this story.  

Once Lord Brahma, the God of Creation walked past Lord Muruga without greeting him. The angered Muruga wanted to teach Brahma a lesson & asked him to tell him the secret of Creation & when Brahma answered that the Pranavam “OM” was the basis for all creation, Muruga asked him to explain the meaning of “OM”.  The angry Muruga gave a knock on Brahma’s head & put him in a prison at Irumbarai.  Irumbarai is about 3kms from Odhimalai.  (Irumbu + arai means an iron room).  Lord Siva pacified Muruga & released Brahma from the prison.  There is a temple for Lord Siva at Irumbarai, where He gives darshan as Kailasanathar.  

The reason for the 5 faces & 8 arms  Originally Lord Muruga at Odhimalai is said to have had 6 faces & 12 arms.  Bhogar, one of the 18 siddhars was performing yagna at a location about 1 km from Odhimalai.  Lord Muruga gave darshan to Bhogar after he had completed three yagas.  Bhogar wanted to reach Pazhani but was not sure of the way.  Muruga took a form with one face & four arms and led Bhogar towards Pazhani.  He stopped at a place about 4kms from Odhimalai & gave further directions to Bhogar to reach Pazhani and vanished from the scene.  This location is Kumaarapaalayam.  The Murugar idol in this temple at Kumarapalayam is seen with 1 face & 4 arms. And the Lord resides at Odhimalai with the remaining 5 faces & eight arms.

The Odhimalai temple  There are around 1,880 steps to reach the temple situated on the hill. Vehicles cannot go up to the temple.  Along the way is a sannadhi for Lord Ganesha.  There are also separate sannadhis for Naagar, Idumban, Viswanathar, Visalakshi, Rajarajeswari, Sapthamathas.  Lord Muruga gives darshan in standing posture with 5 faces & 8 arms facing east.  Since Muruga of this temple is a young lad before the Soorasamharam, the vahanam behind the idol is considered to be Indran in the form of the peacock. (After the Soorasamharam, Lord Muruga transformed a portion of Suran into his vahanam, the peacock and another portion into the cock on his flag.)  He has one foot forward, as if he is ready to rush to assist his devotees.  The right lower arm is in abhaya mudra & the left lower arm is in varada mudra.  In his right upper arms he holds the sword, arrow and vajram.  In this left upper arms he holds the shield, bow and paasam.    There are buses from Kovai, Mettupalayam, Tiruppur and Avinasi to Annur.  Kovai to Annur is around 35kms.  Odhimali is situated around 16kms from Annur. The temple is open for darshan only on Mondays, Fridays, full moon & new moon days, Krithigai and on other special pooja days.  

There is another hill by the name Odhi malai near Sholingar.  The Odhimalai mentioned by Arunagirinathar in his Thirupugazh is the hill – Gnanamalai near Sholingar.