WHERE ARE THE HOUSE SPARROWS?

Are house sparrows being driven away?

Are house sparrows being driven away?
Sparrows are seen as a mascot for ecological conservation but birdwatchers are worried that adverse environmental factors such as shrinking habitat may be driving them into hiding.

http://timesofindia.indiatimes.com/configspace/ads/google_ad_top_17feb2012.html

NEW DELHI: Sparrows are seen as a mascot for ecological conservation but birdwatchers are worried that adverse environmental factors such as shrinking habitat may be driving them into hiding.Ecologists warn these small, highly social birds, that often nest in nooks and niches in and around human settlements, may also go the vultures’ way if enough awareness is not created about them.”Sparrows are amongst the most abundant bird species in urban areas, but we still need to conserve their habitat. Otherwise they too may go the vultures’ way,” Mohammed Dilawar, president of Nature Forever Society, said.

“Earlier, the vultures were amongst the most abundant birds in urban areas but now, due to loss of habitat, they are almost gone. Same could happen with sparrows,” he said.

“In our country, there’s a gap in scientific knowledge. The statistics of species populations are often outdated. So we are launching a bird monitoring system on World Sparrow Day, March 20,” Dilawar added. He however declined to describe the working of the system.

Giving the reasoning behind selecting the common sparrow as a mascot for ecological conservation, he said, “Sparrow is like an umbrella species for all the birds that dwell near human settlements. Also, it is much more recognisable than many other species. People often talk about conserving the tigers or other more glamourous species, but that is sad. All species need equal attention and conservation.”

Surya Prakash, the science officer at Jawaharlal Nehru University(JNU), claimed that numbers of sparrows weren’t a concern. He said that people didn’t know what to look for or where.

“I come across many people who claim that the sparrows are going down but would not know about the situation,” Prakash said.

“Most of the times, these people don’t have any valid statistical data and end up creating false alarms. And then, if you want to find something, you should know where to look. You can’t find a sparrow if you look for it in a mall in Gurgaon,” he added.

Prakash claimed that the sparrows were not dying out but often, due to changes in their living environment, they shift their nesting sites to other locations.

Primarily grain eaters, sparrows also eat insects and scavenge upon anything in small quantities. Amongst the most recognisable wild birds, the common sparrow can often be seen on the window ledges and garden trees, twittering busily.

However, there are still some safe havens for the city dwelling birds, according to the veteran birdwatcher.

“Even here, at JNU, we have a large number of sparrows. Or in old Delhi you can find big flocks of sparrows,” he said.

SOURCE: TIMES OF INDIA ..MARCH  19   2012

GOD EXISTS….

 

God Exists

A wonderful story : “GOD Exists”…

This is one of the best explanations of why GOD allows pain ‘n suffering that I have seen.
A man went to a barbershop to have his hair cut ‘n his beard trimmed. As the barber began to work, they began to have a good conversation.

They talked about so many things ‘n various subjects.
When they eventually touched on the subject of GOD, the barber said: “I don’t believe that GOD exists.”
“Why do you say that?” asked the customer.

“Well, you just have to go out in the street to realize that GOD doesn’t exist. Tell me, if GODexists, would there be so many sick people? would there be abandoned children?

If GOD existed, there would be neither suffering nor pain. I can’t imagine a loving GOD who would allow all of these things.”

The customer thought for a moment, but didn’t respond because he didn’t want to start an argument
The barber finished his job ‘n the customer left the shop.Just after he left the barbershop, he saw a man in the street with long, stringy, dirty hair ‘n an untrimmed beard. He looked ‘n unkempt. The customer turned back ‘n entered the barbershop again ‘n he said to the barber:
“You know what? Barbers do not exist.”
“How can you say that?” asked the surprised barber.
“I am here, ‘n I am a barber. ‘n I just worked on you!”

“No!” the customer exclaimed. “Barbers don’t exist because if they did, there would be no people with dirty long hair ‘n untrimmed beards, like that man outside.”

“Ah, barbers DO exist! What happens is, people do not come to me.
“Exactly!- affirmed the customer. “That’s the point! GOD, too exist!

What happens, is, people don’t go to him ‘n do not look for him. That’s why there is so much pain ‘n suffering in the world.

தோப்புக்கரண மகிமை -தெரியாத உண்மை ……

 

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். 

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

YOUNSTERS SCRIPT A SUCCESS STORY …WORTH COPYING..

 
 

SOURCE..TIMES OF INDIA ..CHENNAI EDITION..11 MAR 2012

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CHENNAI: When T M Sandeep, 24, gave up his job as a financial analyst at Goldman Sachs last April to launch a startup with his friend K Anand, 26, he only knew he wanted to do something different rather than be at a regular job. He did not expect to taste success within six months and that too from a photocopy. 

The idea of starting Photocopy Inc was to enable students to get a photocopy at 10 paise. Usually, one photocopy costs Re 1, and some shops offer a subsidised rate for bulk orders at 50 paise per copy. Photocopy Inc is able to give awayphotocopies at a 90% discount by selling one side of the sheet as ad space to companies. 

Sandeep, who graduated in commerce in 2004, says they feature colour ads by any company that wants to reach out to a young audience, like motorbikes or fitness centres to meet costs. 

“It took a while convincing firms that this advertising for a niche audience will be better than inserting pamphlets in newspapers. The logic is unmistakable. Nobody’s going to take an old newspaper and read it again. But, with many students taking photocopies of notes taken in class, the ad is sure to stay with them for a minimum of two weeks up to a semester,” says Sandeep. 

The duo partner colleges to supply papers, one side of which has a printed ad, to photocopying kiosks set up in colleges in and around the city. Since August, the company has been able to bag six contracts, including at Loyola College of Arts and Sciences, LICET, NIFT and IIT Madras. A fitness centre whose ad features on the pages they supply to photocopying kiosks told them that they had a few registrations as a result of the ad. Photocopy Inc now has 11 brands advertising with them. 

Both Anand and Sandeep, who are alumni of Loyola College, wanted their startup to be ethical as well. They provide environment-friendly wood-free paper made of bagasse for printing the ads and taking photocopies. They also do not allow students to take photocopies of printed material that could get them into copyright problems. 

“Through our business model we ensure that the photocopier also makes more money than he used to earlier. This way it’s a win-win situation for students, companies that give us ads, the photocopier and for Photocopy Inc,” says Sandeep. 

The entrepreneurs supply an average of 1 lakh papers a month to photocopiers in colleges. Once Photocopy Inc carves out a market for itself in all the top colleges in Chennai, Anand and Sandeep want to take their idea to cities such as Hyderabad, Bangalore and Kochi where there are a lot of educational institutions. 

NEVER QUIT FROM YOUR COMMITMENT…

 

The Fern and the Bamboo


One day I decided to quit…. I quit my job, my relationship, my spirituality….. I wanted to quit my life. I went to the woods to have one last talk with God.


“God”, I said. “Can you give me one good reason not to quit?” 
 
His answer surprised me… 

“Look around”, He said. “Do you see the fern and the bamboo?” 
  
“Yes”, I replied. 
  
“When I planted the fern and the bamboo seeds, I took very good care of them. I gave them light. I gave them water. The fern quickly grew from the earth. Its brilliant green covered the floor. Yet nothing came from the bamboo seed. But I did not quit on the bamboo.”  

In the second year the Fern grew more vibrant and plentiful. And again, nothing came from the bamboo seed. But I did not quit on the bamboo”. 

He said, “In the third year, there was still nothing from the bamboo seed. But I would not quit. In the fourth year, again, there was nothing from the bamboo seed. But I would not quit.” 

He said, “Then in the fifth year a tiny sprout emerged from the earth. Compared to the fern it was seemingly small and insignificant. But just 6 months later the bamboo rose to over 100 feet tall. It had spent the five years growing roots. Those roots made it strong and gave it what it needed to survive. I would not give any of my creations a challenge it could not handle.”  

He said to me, “Did you know, my child, that all this time you have been struggling, you have actually been growing roots. I would not quit on the bamboo. I will never quit on you. Don’t compare yourself to others.”

He said, “The bamboo had a different purpose than the fern, yet, they both make the forest beautiful.” 

“Your time will come,” God said to me. “You will rise high!”  

“How high should I rise?” I asked.  

“How high will the bamboo rise?”,He asked in return. 

“As high as it can?” I questioned. 

Yes.” He said, “Give me glory by rising as high as you can.” 

I left the forest and brought back this story. 

I hope these words can help you see that God will never give up on you……..  

Never regret a day in your life.


Good days give you Happiness. 
 
Bad days give you Experiences.  

Both are essential to life.


Keep going…   

Happiness keeps you Sweet, 
 
Trials keep you Strong, 

Sorrows keep you Human, 

Failures keep you Humble, 
  
Success keeps You Glowing, 

But Only God keeps You Going!  

Have a great day! The Sun is shining!!

STRANGE ..BUT TRUE…

Only in America can this happen!  Good one.

This took place in Charlotte, North Carolina.
A lawyer purchased a box of very rare and expensive cigars then insured them against, among other things, “FIRE” !!
Within a month, having smoked his entire stockpile of these great cigars, the lawyer filed a claim against the insurance company.
In his claim, the lawyer stated the cigars were “lost in a series of small fires’.
The insurance company refused to pay, citing the obvious reason, that the man had consumed the cigars in the normal fashion.
The lawyer sued and WON !!!
Delivering the ruling, the judge agreed with the insurance company that the claim was frivolous but he stated nevertheless, that the lawyer held a policy from the company, in which it had warranted that the cigars were insurable and also guaranteed that it would insure them against fire, without defining what is considered to be acceptable explanation of the term ‘fire’ (as in the act of actually smoking the cigar) and was obligated to pay the claim.
Rather than endure lengthy and costly appeal process, the insurance company accepted the ruling and paid $15,000 to the lawyer for his loss of the cigars that were “lost in a series of small fires’.
NOW FOR THE BEST PART…
After the lawyer cashed the check, the insurance company had him arrested on 24 counts of ARSON !!!
With evidence of his own insurance claim and testimony from the case being used against him, the lawyer was convicted of intentionally burning his insured property and was sentenced to 24 months in jail and a $24,000 fine !!!
This true story won First Place in the “Criminal Lawyers Award” contest in the following year.

இப்படியும் ஒரு பள்ளிக்கூடம் ….

 

படித்து முடித்த பிறகு, பெருமிதத்தில் உங்கள் நெஞ்சம் விம்மும் என நம்புகிறேன்….
நீங்கள் மனது வைத்தால் , இன்னும் எவ்வளவோ பேரை இந்த கட்டுரையை சென்றடைய வைக்கலாம்… அதன் மூலம் ஒரே ஒரு பொறி எங்கு இருந்தோ கிளம்பினாலும், அது பல சாதனைகளை நிகழ்த்த வைக்கும்.


 என்னைப் போலவே , உங்களிலும் பெரும்பாலோர் சிறிய கிராமத்தில் இருந்து படித்து வந்தவர்களாக இருக்கக் கூடும். நீங்கள் படித்த பள்ளிக்கு , ஒரு சிறிய உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் , அதுவே இந்த கட்டுரையாளருக்கு கிடைத்த வெற்றி.

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், ஊர் மக்களையும் ,இணைத்துக் கொண்டால் – இந்த காரியம் என்று இல்லை, எந்த ஒரு காரியமும் சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்ல இயலும்….

பிறந்தேன், வளர்ந்தேன் என்று ஓய்ந்துவிடவா நாம் இருக்கிறோம்..? இந்த உலகத்தை புரட்டிப் போடும் நெம்புகோல் தனி மனிதர்களிடம் இல்லை என்று யார் சொன்னது? நம்மைப் போன்ற ஆட்கள் கரம் கோர்க்கும்போது , இன்னும் வலிமை உரம் பெறும்..!
இன்னும் நிறைய சிந்திப்போம்… சாதிப்போம்….!

ஓவர் டு யுவா…. (யுவ கிருஷ்ணா – புதிய தலைமுறைக்காக)
==============================================
தலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம்.

இங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தனியார் பள்ளியை நாடி மக்கள் செல்வதை இவர்கள் கவலையோடு பார்த்தார்கள்.

பெரிய மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால், வைரவிழா கண்ட பள்ளியின் நிலை கவலைக்கிடமாகி விடும். அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் அவ்வூர் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்குள் விதைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஆசிரியர் பணி என்பது வெறுமனே போதித்தல் மட்டும்தானா என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்கள் பணி தாண்டி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். அரசின் கீழ் பணிபுரியும் நாம், இந்தப் பள்ளியை மேன்மையான நிலைக்கு கொண்டு வந்தால் என்ன?

56 வயதாகும் தலைமையாசிரியர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறப்போகிறார். துணை ஆசிரியரோ 35 வயது இளைஞர். தலைமுறை இடைவெளி இவர்களை விலக்கிடவில்லை. மாறாக தலைமை ஆசிரியரின் நீண்டகால கல்வி அனுபவமும், உதவி ஆசிரியரின் சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியும் இன்று இராமம்பாளையம் பள்ளியை சர்வதேசத் தரம் கொண்ட பள்ளியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை இயங்கும் இராமப்பாளையம் ஊராட்சி ஒன்றிட்யத் தொடக்கப் பள்ளியில் தற்போது 34 குழந்தைகள் படிக்கிறார்கள்.

“நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியையையே முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கிவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ஆலோசித்தோம். அதுதான் ஆரம்பப் புள்ளி” என்கிறார் தலைமையாசிரியர் சரஸ்வதி.

எங்கே ஆரம்பித்தார்கள்?

தங்களுடைய ‘சீக்ரட் ஆஃப் சக்ஸஸை’ வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின்.

“முதலில் இந்தப் பள்ளியில் ஒரு மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முடிவெடுத்தோம். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிவரும் பள்ளி என்றாலும், இங்கே ஆண்டுவிழா நடந்ததே இல்லை.

2009ல் முதன்முதலாக ஊர் பொதுமக்களை கூட்டி ஆண்டுவிழா நடத்தினோம். தங்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டவர்களுக்கு நம் குழந்தைகள் இத்தனை திறமையானவர்களா என்று ஆச்சரியம். வெளியூர்களிலிருந்து தன்முனைப்பு பேச்சாளர்களை அழைத்துவந்து அந்நிகழ்ச்சியில் பேசவும் வைத்தோம்.

முதன்முறையாக பள்ளி சார்பாக இப்படி ஒரு விழா நடந்ததை கண்ட மக்கள், ‘என்னப்பா விஷயம்?’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே? செஞ்சுடலாம்’ என்றார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமக் கல்விக்குழு உண்டு. அவர்களும் எங்களோடு கைக்கோர்க்க, அனுமதிக்கு போய் நிற்கும்போதெல்லாம் தொடக்கக் கல்வி அலுவலர் ஊக்குவிக்க, இன்று எல்லோரும் அதிசயப்படும் பள்ளியை ஊர்கூடி அமைத்திருக்கிறோம்”

நாலு பாராவில் பிராங்க்ளின் சொல்லிவிட்டாலும் ஆசிரியர்களின் இரண்டாண்டு கடினமான திட்டமிடுதலும், உழைப்பும், கல்விக்குழு மற்றும் கிராமமக்களின் பங்களிப்பும் இவ்வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது.

பளிச்சென்று சர்வதேசத் தரத்துக்கு ஒப்பாக இருக்கும் வகுப்பறை, கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப் படுத்துதல் என்று போதிப்புத் தரத்தில் அயல்நாட்டுப் பள்ளிகளோடு போட்டிப்போடும் கல்வித் தரத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், கழுத்தணி (tie), காலணி (shoe), பெல்ட், அடையாள அட்டை, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இணைப்புக் கையேடு (Dairy) அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.

இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டும் பணி இன்னும் பாக்கியிருக்கிறது. மேலும் கொஞ்சம் நிதி சேர்ந்தால், இன்னும் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

பல லட்சம் செலவாகியிருக்குமே, இவற்றுக்கெல்லாம் ஆன செலவை எப்படி சமாளித்தார்கள்?

முதல் பங்களிப்பை ஆசிரியர்கள் இருவருமே செலுத்த, கல்விக்குழுவின் ஒத்துழைப்போடு ஊர் மக்கள் செலவினை பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த முன்மாதிரிப் பள்ளியை உருவாக்க இதுவரை ஆன செலவு தோராயமாக இரண்டரை லட்சம் மட்டும் தானாம்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி பணிகள் முடிந்து திறப்புவிழா எளிமையாக நடந்தது. இது ஒரு சாதனை என்கிற நினைப்பு அங்கே யாருக்குமே இல்லை. வெளியே தெரிந்தால், அனைவரும் கண்காட்சி போல பள்ளியைக் காண வந்துவிடுவார்களோ, அதனால் குழந்தைகளின் கவனம் சிதறுமோ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.

சரி, இந்த மாற்றங்களால் என்ன பலன்?

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் இந்தப் பள்ளிக்கு வருகிறார்கள். “எல்லாமே முற்றிலும் இலவசமா, தனியார் பள்ளியை விட தரமான கல்வி இங்கே கிடைக்கிறப்போ, நாங்க எதுக்கு தனியாருக்கு போகணும்? நாலாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷனில் படிச்ச என் பொண்ணு யாழினையை, ஐந்தாவதுக்கு இங்கேதான் சேர்த்திருக்கேன்” என்கிறார் சரஸ்வதி வடிவேலு. வேறென்ன வேண்டும்?

தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தெரியவந்திருக்கிறது. அவர் ‘திடீர் விசிட்’ அடித்து பள்ளியை சுற்றிப் பார்த்து பாராட்டியிருக்கிறார். “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறாருன்னா, நிஜமாவே நாங்க நல்ல விஷயம்தான் பண்ணியிருக்கோமுன்னு புரியுது” என்கிறார்கள் கிராம மக்கள்.

“ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். முன்பெல்லாம் பள்ளியில் என்ன நடந்தாலும், அதைப்பற்றி மக்களுக்கு பெரிய அக்கறை இருந்ததில்லை. இப்போது சுவரில் யாராவது கிறுக்கினாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்களை மக்களே தட்டிக் கேட்கிறார்கள். எங்கள் மக்களுக்கு கிடைத்த இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவவேண்டும். அடுத்து வரும் ஆசிரியர்களிடமும் இதே அர்ப்பணிப்பை நாங்கள் உரிமையாக தட்டிக் கேட்போம்” என்கிறார் கல்விக்குழு உறுப்பினரான ஆர்.மகேஷ்.
தமிழகத்தின் எல்லாக் கிராம ஆரம்பப் பள்ளிகளையும் இதேபோல செய்ய முடியாதா?

“தாராளமாக செய்யலாம். அந்தந்த கிராம மக்கள், கல்விக்குழு, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் செய்யலாம். இராமம்பாளையம் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு இப்போதே பணியை ஆரம்பித்தால் கூட, அடுத்த ஆண்டு தமிழகம் முழுக்க 40 சதவிகிதப் பள்ளிகளை இந்த தரத்தை எட்டச் செய்யலாம்” என்கிறார் காரமடை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன்.

இதே தரத்தை தொடர்ச்சியாக பரமாரிக்க, கணிசமான நிதி தேவைப்படும். பள்ளியின் தரம் உயர, உயர மாணவர் சேர்க்கை அதிகமாகும். கூடுதல் செலவுகள் ஏற்படும். அதற்கு என்ன ‘ஐடியா’ வைத்திருக்கிறார்கள்?

“ரொம்ப சுலபம். இந்த ஊரில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகளில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று குறைந்தது நூறு பேரை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். இவர்களை வைத்து ‘இராமம்பாளையம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு’ ஒன்றினை உருவாக்க உத்தேசித்திருக்கிறோம். இவர்களிடம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாகப் பெறுவது சுலபம். இதன் மூலம் வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போதிருக்கும் தரத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள இந்த தொகையே மிக அதிகம்” என்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின். நல்ல ஐடியாதான்.

ஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், இதுபோல ஒரு பள்ளியை உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் ஊர் பெயரை உலகம் பேசுமே?

பள்ளியில் என்னென்ன வசதிகள்?

• மாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடம் கற்க வட்ட மேசைகள்
• புத்தகங்கள் வைக்க இடவசதியோடு கூடிய நாற்காலிகள்
• தமிழ் – ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
• டி.வி.டிகள் அடங்கிய டிஜிட்டல் நூலகம்
• கம்ப்யூட்டர்
• தொலைக்காட்சி – டிவிடி ப்ளேயருடன்
• அறிவியல் ஆய்வு மற்றும் கணிதம் தொடர்பான உபகரணங்கள்
• செயல்வழி கற்றல் அட்டைகளை வாசிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்
• ஒலி-ஒளி அமைப்புகள்
• மாணவர்கள் எழுதிப்பலக கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை
• படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்பலகை
• சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி
• காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கண்ணாடி சன்னல்கள்
• குழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்கள்
• உயர்தர தள கட்டமைப்பு
• ஒலிபெருக்கியோடு கூடிய உட்கூரை
• வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்
• அவசரக்கால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி

=================================================

இந்த உன்னதமான பணியை மேற்கொண்ட இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க நினைத்தால் – தொடர்பு கொள்ள :
தலைமை ஆசிரியர் சரஸ்வதி : 9952164582
உதவி ஆசிரியர் பிராங்க்ளின் : 9942472672

will our technocrats wake up now ?

பொறியியல் கல்வி படும்பாடு:………………………………
க.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்


தமிழகத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து, உதகமண்டலம் வரை செல்லும் மலை ரயில், மாதம் முப்பது நாட்களில், இருபது நாட்களுக்கு மேல் பழுதாகி, நடுவே நின்றுவிடும். அங்கிருந்து பயணிகள், பஸ்கள் மூலம் பயணிப்பர். ஐநூறுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளையும், ஐந்து அண்ணா பல்கலைக்கழகங்களையும், தனியார் நடத்தும் பத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில், பழுதடையாத ஒரு மலை ரயிலைக் கூட உருவாக்க முடியவில்லை என்று சொன்னால், நம் பொறியியல் கல்வியை என்னவென்பது?அண்மையில் வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியின்படி, நம் பல்கலைக்கழகங்களிலிருந்தும் கல்லூரிகளில் இருந்தும் வெளிவரும் நூறு பொறியியல் பட்டதாரிகளில், இரண்டு பட்டதாரிகள் மட்டுமே, அவர்கள் படித்து வெற்றி பெற்ற பாடத்தில், வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். இச்செய்தி, நம் நாட்டில் உள்ள பொறியியல் கல்வித் தரம் பற்றிய ஐயத்தை பன்மடங்கு ஆக்குகிறது.பொறியியல் கல்வியை தனியார் வசமும், தனியார் வணிக வசமும், நம் மேதகு அரசுகள் ஒப்படைத்தன. அதன் பிறகே, ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், ஆங்காங்கே தோன்றின. இக்கல்லூரியின் தரம் பற்றி ஆராய, சில ஆண்டுகளுக்கு முன், ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையில், “60 சதவீத பொறியியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என்ற பெயருக்கே தகுதியில்லாதவை. போதிய அளவு சோதனைச்சாலைகள் இல்லை, வகுப்பறைகள் இல்லை.பணியாற்றும் ஆசிரியர்கள், மிகத் தகுதி குறைவானவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. பெரும்பாலானோர் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்’ என, தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில், கடந்த அரசிலும், அதற்கு முன் இருந்த அரசிலும் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கணிசமானோருக்கு, பொறியியல் கல்லூரிகள் சொந்தமாக இருக்கின்றன. இவை அமைச்சர்களாலும், செல்வந்தர்களாலும், வணிகர்களாலும் நடத்தப்படுவதற்கு அடிப்படை காரணம், பணம் காய்ச்சி மரங்களாக இக்கல்லூரிகள் இருப்பது தான். இந்தக் கல்வி ஆண்டில் தான், பொறியியல் கல்லூரிக்கு வரும் விண்ணப்பங்களின் பெருகிய எண்ணிக்கை குறைந்திருக்கிறது.பல நிறுவனங்கள், பெறும் பணத்திற்கு ரசீதும் கொடுப்பதில்லை. பல கல்வி நிறுவனங்கள், காசோலையாகவோ, டி.டி.,யாகவோ கட்டணத்தைப் பெறுவதில்லை. “ரொக்கமாக கொடுக்க வேண்டும்’ என, நிபந்தனை போடுகின்றன. கணக்குக் காட்டுவதிலிருந்து தப்புவதற்கு இந்த ஏற்பாடு.சரி, தமிழகத்தில், பொறியியல் கல்வி பெருகினால் நல்லது தானே என்று நினைக்கலாம். பெரும்பான்மையான பாடத் திட்டங்களும், அமெரிக்க வேலைவாய்ப்பை நம்பியே அமைக்கப்படுகின்றன. அதாவது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, இங்கே கல்வி உற்பத்தி நடக்கிறது.சரியான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்? அந்த மண்ணுக்குரிய, அந்தந்தப் பகுதி மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். இங்குள்ள ஊட்டி ரயிலுக்கு பதில் சொல்ல முடியாத பொறியியல் பல்கலைக்கழகங்களால் பயன் என்ன?

தமிழகத்தை ஒட்டி, பொறியியல் கல்வி செய்ய வேண்டிய பணிகள், கண்டுபிடிப்புகள், சவால்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றை மட்டும் பட்டியலிடுவோம்.

1. உணவின் ஒரு பகுதியாக இருப்பது தண்ணீர். வேளாண் தொழிலுக்கு வேண்டிய தண்ணீர், பருகுவதற்கு வேண்டிய தண்ணீர். நம் நாடு, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளைப் போல, ஆண்டு முழுவதும் மழை பொழியும் நாடு அல்ல. குளம், குட்டை, கிணறு, ஏரி முதலானவற்றில் தண்ணீர் தேக்கி வைப்பதைப் பற்றி, விரிவாக சிந்திக்க வேண்டும். இவற்றை தூர்வாருதலுக்கு எளிய வழிகளையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். இவற்றில் தேங்கியிருக்கும் நீர், வெயிலில் எளிதாக ஆவியாகாதவாறு, ஏதேனும் யுக்திகள் இருக்கின்றனவா என்று ஆராயப்பட வேண்டும்.
இன்னொரு வகையில் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கடல் நீர் ஒரு பெரும் பேறாகும். கன்னியாகுமரியில் இருந்து, தமிழக வட எல்லை வரை, வங்காள விரிகுடா விரிந்து கிடக்கிறது. இந்த தண்ணீரை, குடிநீராக வேதியியல் மாற்றம் செய்வது பற்றி, வேதியியல் பொறியியல் அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா, செயல்படுத்த வேண்டாமா? தமிழக ஆறுகளில் தண்ணீர் இல்லாத காலங்களில், பனிரெண்டு மாதமும் ஓடும் கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா முதலான ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றி திட்டங்கள் தீட்ட வேண்டாமா?

2. தமிழகத்தில் வாழக்கூடிய ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்களில், எல்லாருக்கும் போதிய உடை கிடைத்தபாடில்லை. அத்தனை பேருக்கும் உடை கிடைக்கும் வண்ணம், குறைந்த செலவில், எந்தெந்த மூலப்பொருளை வைத்து சட்டை, வேட்டி, பேன்ட், சேலை முதலானவற்றை நெய்யலாம் என்பது பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டியவர்கள் பொறியியலாளர்கள் தானே?

3. நம் சுகாதாரக்கேட்டின் உச்சம், கிராமங்களிலும், நகர சேரிப்பகுதிகளிலும், போதிய கழிப்பறைகள் இல்லாததுதான். பல நோய்கள், தொற்று நோய்களாக பெருகுவதற்கு, இது பெரும் காரணம். மலிவு கழிப்பறை பற்றி இவர்கள் சிந்திக்க வேண்டாமா?

4. கணினி, இன்று இன்றியமையாத பொருளாகி விட்டது. கணினியை, இன்னும் குறைந்த விலையில் உற்பத்தி செய்வது பற்றி ஆராய வேண்டாமா?

5. சிவில் இன்ஜினியர்கள், வீடு கட்டுவதற்கு உரிய புதிய மூலப்பொருட்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.செங்கல் தொழிலும் தற்போது அறைகூவலாகி விட்டது. மாற்றாக, சிமென்ட் கற்கள் வந்துள்ளன. தக்கைக் கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் பற்றி சிந்திக்கவேண்டும்.

6. தமிழகத்தில் மிகப்பெரிய அறைகூவலாக இருப்பது மின்சக்தி. சோவியத் புரட்சியைச் சாதித்த மாவீரர் லெனின் புரட்சி நடந்து முடிந்து, தான் தலைமை ஏற்ற உடனே செய்த முதல் வேலை, சோவியத் ஒன்றியம் முழுவதும் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றது தான். மின் விளக்குகள், ரஷ்ய மொழியில், “விளாதிமிர் லெனின்’ என்றே அழைக்கப்படுகின்றன. மின்சக்தி அனைவருக்கும் கிடைத்தல் அத்தனை முதன்மையானது என்பதை அவர் கண்டுகொண்டிருந்தார். 21ம் நூற்றாண்டு வந்த பிறகும், நாம் இன்னும் மின்சக்தியை முழுமையான தேவைக்கு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு உள்ள வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியவர்கள் பொறியாளர்கள் தானே?ஆக, நம் நாட்டுத் தேவைகள் நூற்றுக்கணக்கில் நமக்கு முன்னே மண்டிக்கிடக்க, வெறும் பேப்பர் பட்டங்களைப் பெற்று வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞர்களை உருவாக்குவதுதான் நம் பொறியியல் கல்வியின் நோக்கமா? அதற்காக எவ்வளவு பணம், எத்தனை இளைஞர்களின் உழைப்பு? நியாயமா…? சிந்தித்துப் பார்ப்போம்!