புரிஞ்சது ….ஆனா புரியலை !!!!!!

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”       –    நியாயமான ஒரு கேள்வி 
–
“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
–
“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.

“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.“சரி” 
–
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants. …”.

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.

அப்பா : “இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”? “MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

அப்பா : “முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?” –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. 

அப்பா : “சரி இவங்க போய் பேசின உடனே client projectகொடுத்துடுவானா?” 

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”

அப்பா : “500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?” “இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்கdeliver பண்ணுவோம். அத பாத்துட்டு “ஐயோ நாங்க கேட்டது இதுல்ல,எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.

“அப்புறம்?” – அப்பா ஆர்வமானார். 
–
“இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே “இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்”னு சொல்லுவோம்.
–
அப்பா : “CR-னா?” 
–
“Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்”னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”
–
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

 அப்பா : “இதுக்கு அவன் ஒத்துபானா?”
–
“ஒத்துகிட்டு தான் ஆகணும்.முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?”

அப்பா : “சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”

“முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”
அப்பா : “அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.” 

“அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது.”

அப்பா : “அப்போ இவருக்கு என்னதான் வேலை?” – 
–
அப்பா குழம்பினார். “நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை.”
–
“பாவம்பா” 

“ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.”

அப்பா : “எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?” 

“ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.”
–
அப்பா : “நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!”

“இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.”
–
அப்பா : “இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?” “வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க… டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு” சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.”

அப்பா : “அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?”

“இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கறது மாதிரி.”
“
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?“அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”

அப்பா:  “கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?” “கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.”
–
அப்பா : “எப்படி?” 

“நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.” இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்”.

அப்பா : “சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?” 

“அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.”

“அப்புறம்?” 

“ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.”
–
“அப்புறம்?” 

“அவனே பயந்து போய்,
“எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு”
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.”

இதுக்கு பேரு “Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

“ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு” இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

அப்பா  :  “எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா  

தமிழ் பஞ்சாங்கம் …..

 

 

Tamil Panchangam goes Electronic!!






Dear All,

Sourced from Andavan group. Thanks to the original uploader.

*This will be very helpful. Keep this link as your favourite.

*Tamil Panchangam goes Electronic!!

*For those interested in daily tear-off kind of panchhangam, the following
link gives day-by-day details.Point your mouse on the chosen day and you’ll
get the day’s details like Star, good times, raaghu kaalam etc.
*

Link: http://tamilpanchangam.org/daily_calendar.php?mode=d&d=22&m=11&y=2011


Best Regards,





ஜலதோஷம் ஒரு கடும் தோஷம் ….

 

செவ்வாய்   தோஷத்துக்கும்  உண்டு ஒரு பரிகாரம் …. ஆனால்  இந்த

ஜலதோஷத்துக்கு   இல்லை ஒரு நிவாரணம் !!!!!

கண்ணும் மூக்கும்  சிவக்கவைக்கும்  இந்த ஜலதோஷம் -நம்மை 

விட்டு விட்டால் சந்தோஷம் சந்தோஷமே !!!!!!!!

 

ஜலதோஷத்தால்  அவதி ப் படும்  ஒரு அன்பரின் புலம்பல் !!!!!!!!!!!!

SOME TIDBITS… FOR A HEARTY LAUGH!!!!!

 


subject:
 சில சுவாரசியமான தகவல்கள்

பெல்ட்

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,”நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,”ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,”உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,”முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,”தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.”

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,”என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,”என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,”உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,”என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,”என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.”

ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,”ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?”ஷா சொன்னார்,”என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!”

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,”ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,”நேதாஜி சொன்னார்,”உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.”

இயல்புதானே?

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,”எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,”என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,”இயல்பாக என்ன இப்போது நடந்தது?”என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,”எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?”ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.

திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,”நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?”என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,”யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.”என்றார். ஹிட்லர் உடனே,”யூதர்களின் திருநாள் எப்போது வரும்?”என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,”தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.”ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?

பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,”ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்…..”என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,”எனக்குப் பிடித்த மதம் தாமதம்,”என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.

வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,”என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,” என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,”அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?”என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.

மும்மணிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,”இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,”என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,”வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,”என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.

பேசும் எந்திரம்

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,”பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,”என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,”நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.”

சீனிவாசன்

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,”திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!”என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,”அடடே,எறும்பு இருக்கிறது,”என்றார். செட்டியார் சொன்னார்,”எறும்பு சீனியில்  வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்”என்றார்.

உபயோகம்

1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,”சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.”என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான  மகாவீர் தியாகி எழுந்து  ,”இதோ,என் தலையைப் பாருங்கள்,”என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,”என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?”நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.

சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,”ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.”என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,”நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்  தான்  சொல்கிறேன் .”

அறிஞர்

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,”வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?”வாலி சொன்னார்,”ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.”அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,”அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?”  வாலி  சிரித்துக் கொண்டே,”நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!”என்றார்.

தெரியுமா?

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு  சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
இப்படிக்கு.
ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? ‘பசுவே நான் போய் வருகிறேன்’ என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,”நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!”என்று பதில் சொல்லியதாம்.
இப்படிக்கு
ஆர்ச் பிஷப்

உடைமை

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,”நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?” என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன்  ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,”தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு  உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?”நண்பர் வாயைத் திறக்கவில்லை.

எந்த கட்சி?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக்  கட்சிக்காக  தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,”நான் ஜனநாயகக் கட்சியை  சேர்ந்தவன்,”என்று கூச்சலிட்டான்.  ”நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?”என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,”என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.”ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,”உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்? அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,”கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.”

கெளரவம்

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,”சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.”என்றார்.உடனே எட்வர்ட்,”என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?”என்று சந்தேகம் கேட்டார்.”ஆமாம்.”என்று ஆசிரியர் கூறினார்.”அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.”என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.

சோம்பேறி

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,”நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.”மார்க் ட்வைன் உடனே சொன்னார்,”நீங்கள் தான் சரியான சோம்பேறி.”மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.’;நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.”

மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,”யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.”என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,”என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?”என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,”டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள் நீ. பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு .”

TEACHER MAKES ALL PROFESSIONALS ..CAN ANYBODY DENY THIS?

Who is a teacher? Or what a Teacher should be? 

 

 

From a School Principal’s speech at a graduation.. He said,

“Doctor wants his child to become a doctor…..
Engineer wants his child to become engineer…..
Businessman wants his ward to become CEO….
BUT a teacher also wants his child to become one of them….
“Nobody wants to become a teacher BY CHOICE”
Very sad but that’s true…

But, is that really the truth ? Look at what another teacher has to say.

At a dinner, guests were sitting around the table discussing life.

One man, a successful businessman, decided to explain the problem with being into education. He argued, “What’s a kid going to learn from someone who decided his best option in life was to become a teacher?”

To stress his point he said to another guest, “You’re a teacher, Bonnie. Be honest. What do you make?”

Teacher Bonnie, who had a reputation for honesty and frankness replied,

“You want to know what I make?”  She paused for a second, then began…

“Well, I 
make kids work harder than they ever thought they could.

I make a C+ feel like the Congressional Medal of Honor winner.

I make kids sit through 40 minutes of class time when their parents can’t make them sit for 5 min. without an I Pod, Game Cube or movie rental.

You want to know what I make?

She paused again and looked at each and every person at the table and continued,

“I make kids wonder.

I make them question.

I make them apologize and mean it.

I make them have respect and take responsibility for their actions.

I teach them how to write and then I make them write. Keyboarding isn’t everything.

I make them read, read, read.

I make them show all their work in math.  They use their God given brain, not the man-made calculator.

I make my students from other countries learn everything they need to know about English while preserving their unique cultural identity.

I make my classroom a place where all my students feel safe.

Finally, I make them understand that if they use the gifts they were given, work hard, and follow their hearts, they can succeed in life.”

Bonnie paused one last time and then continued,

“Then, when people try to judge me by what I make, with me knowing money isn’t everything, I can hold my head up high and pay no attention because they are ignorant.”

You want to know what I make?

I  MAKE A DIFFERENCE IN ALL YOUR LIVES, EDUCATING KIDS AND PREPARING THEM TO BECOME SUCCESSFUL BUSINESSMAN AND DOCTORS AND ENGINEERS………

Now, tell me what do you make Mr. Businessman? “

The Businessman‘s jaw dropped; he went silent.

 

 

நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று …

Dear all,
Please go through this patiently .We will realise what mistakes we  do and unable to over come.Mankind itself could not over come these mistakes after thousands of years. If we avoid them peace and happiness are guaranteed.

Marcus Tullius Cicero

இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் முன்பு ரோமாபுரியில் வாழ்ந்த மார்கஸ் டுல்லியஸ் சிசரோ (Marcus
Tullius Cicero) (கி.மு106 –43) ஒரு மிகச்சிறந்த பேச்சாளர், வக்கீல்,
அரசியலறிஞர், எழுத்தாளர், கவிஞர், தத்துவஞானி மற்றும் விமரிசகர். அவர் அன்றைய
மனிதர்களின் ஆறு தவறுகளை முட்டாள்தனமானவை என்று கூறியிருக்கிறார். கால
ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த
தவறுகள் அகற்றப்படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த
தவறுகளைப் பார்க்க முடிகிறது என்பது வருத்தத்திற்குரியது தான்.

சிசரோ அவருடைய கூர்மையான அறிவால் அன்று கண்டுணர்ந்து இன்றும் நம்மிடையே
இருக்கின்ற அந்த தவறுகள் இவை தான்:

1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும்
என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது:
இது குறுகிய காலத்திற்குப் பலன் தருவது போலத் தோன்றினாலும் நீண்ட காலத்திற்கு
சிறிதும் உதவாத ஒரு வழியாகும். இயல்பாக நியாயமான வழிகளில் நாம் முன்னேறும் போது
மற்றவர்களை முந்திக் கொண்டு செல்வது நேர்வழி மட்டுமல்ல நம் வளர்ச்சியும் இந்த
வழியில் நிச்சயமானதாக இருக்கிறது. அதற்குப் பதிலாக மற்றவர்களைப் பின்னுக்குத்
தள்ளியும், அழித்தும் முந்தி நிற்க முயன்றால் அதற்கே நம்முடைய காலமும்,
சக்தியும் முழுவதும் செலவாகும். நாம் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டி
வரும். மேலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளுவதோ, முன்னேற விடாது தடுப்பதோ
நீண்ட காலத்திற்கு முடிகிற விஷயம் அல்ல. எந்தத் துறையிலும், வாழ்க்கையிலும்
வெற்றி பெற விரும்புவோர் இந்தத் தவறான கருத்தை விட்டு விடுவது
புத்திசாலித்தனம்.

2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது:
ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்கள்
கண்டிப்பாக இருக்கவே செய்கின்றன. அதற்கெல்லாம் கவலைப்படுவதும், கண்ணீர்
விடுவதும் எந்த விதத்திலும் நமக்கு உதவப்போவதில்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு
எதுவும் மாறி விடப் போவதில்லை. மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் அளவு
மனம் இல்லா விட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் அளவாவது பக்குவத்தை நாம்
வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை முடிவில்லாத கவலையாகவே
இருந்து விடும்.

3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது:
நம் அறிவுக்கும் சக்திக்கும் எட்டாத விஷயங்கள் ஏராளமாகவே இருக்கின்றன. இன்று
இருக்கும் எத்தனையோ அறிவியல் அற்புதங்கள் ஒரு காலத்தில் மனிதனால் கற்பனையாலும்
கூட நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்திருக்கின்றன. சிசரோவின் காலத்தில்
ரேடியோ, தொலைபேசி, விமானம், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை
மனிதர்களுக்கு விந்தையிலும் விந்தையாக இருந்திருக்கும். அது போல இக்காலத்தில்
நினைத்துப் பார்க்கவும் முடியாத எத்தனையோ அற்புதங்கள் எதிர்காலத்தில் சாதாரண
சமாச்சாரங்கள் ஆகி விட முடியும். அப்படி இருக்கையில் தனி மனிதர்களான நாம்
நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது என்று நினைப்பது கற்பனையான
கர்வமாகவும், அறிவின் குறைபாடாகவே தான் இருந்து விட முடியும்.

4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும்
தள்ளி வைக்க முடியாதது:
உலகையே உலுக்கும் சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. சமீபத்திய ஜப்பானில் ஏற்பட்ட
நில நடுக்கம், சுனாமி போன்றவற்றினால் லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து, உற்றார்
உறவினர்களை இழந்து, சில நொடிகளில் தங்கள் வாழ்வின் பல கால உழைப்பின் செல்வத்தை
இழந்து நின்று அவல நிலைக்கு வந்ததைப் பார்த்தோம். மனித வாழ்க்கையின் நிலைமை
அந்த அளவு நிச்சயமற்றதாக இருக்கையில் நான் சொன்னது போல் அவன் நடக்கவில்லை, இவன்
என்னை மதிக்கவில்லை, என்னிடம் விலை உயர்ந்த கார் இல்லை, என்னை அனாவசியமாக சிலர்
விமரிசிக்கிறார்கள், சொன்ன நேரத்தில் வேலை நடக்கவில்லை என்ற சில்லறை
விஷயங்களில் மனம் கொதிக்கிற அல்லது வெம்புகிற மனோபாவம் நகைக்கப்பட வேண்டியதே
அல்லவா? நான் பெரியவன், அதை எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும், என்னைக் கவனிக்க
வேண்டும், என் விருப்பப்படி அனைத்தும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணங்களை
ஒதுக்கி வைக்க முடியாதது குறுகிய மனங்களின் சாபக்கேடு. எந்தப் பெரிய பிரச்னைகள்
இல்லா விட்டாலும் இந்த மனோபாவம் இருந்து விட்டால் அது போகும் சுகவாழ்வையும்
நரகமாக மாற்றுவதற்கு.

5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல
நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது:
வாழ்க்கையில் சௌகரியங்களையும் செல்வத்தையும் அதிகரித்துக் கொள்ள மனிதன் தன்
வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். ஏனென்றால் அதை அளக்க முடிகிறது.
மற்றவர்கள் அதை வைத்துத் தான் மதிக்கிறார்கள் என்ற சிந்தனையையும் பொதுவாக
எல்லோரிடமும் பார்க்க முடிகிறது. ஆனால் மனம் அந்த அளவு வெளிப்படையாகத்
தெரிவதில்லை என்பதால் அதைப் பண்படுத்திக் கொள்ளவோ பக்குவப்படுத்திக் கொள்ளவோ
பெரும்பாலான மனிதர்கள் பெரிதாக முயற்சி மேற்கொள்வதில்லை. ஆனால் உண்மையில் தனி
மனித நிம்மதியும், மகிழ்ச்சியும் அவன் மனதின் பக்குவத்தை மட்டுமே பொருத்தது.
சேர்த்த செல்வமும், அடைந்த புகழும் அடுத்தவர்கள் கண்களுக்கு பிரமிப்பை
ஏற்படுத்தலாமே ஒழிய மனதை அவை எல்லாம் நிரப்பி விடுவதில்லை. கல்வியும்
பெரும்பாலான மக்களுக்குக் கல்லூரிகளோடு முடிந்து விடுகிறது. நல்ல தரமான நூல்களை
அதற்குப் பிறகும் படித்து அறிவையும், பண்பாட்டையும் வளர்த்துக் கொள்ளும்
பழக்கம் குறைவான மக்களிடத்திலேயே இன்றும் உள்ளது. சிசரோ அன்று ரோமானியர்களிடம்
கண்ட இந்தக் குறை ரோமாபுரியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது
என்பதை வரலாறு சொல்கிறது. எனவே வீழ்ச்சியை விரும்பாத மனிதன் எல்லா விதங்களிலும்
மனதைப் பண்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.

6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது:
’நான் நினைப்பது தான் சரி, என்னுடைய வழிமுறைகள் தான் சிறந்தவை’ என்று நினைப்பது
மிகப்பெரிய தவறு. அப்படி நினைப்பதோடு நின்று விடாமல் அடுத்தவர்களையும் அப்படியே
நினைக்கவும், நடந்து கொள்ளவும் எதிர்பார்ப்பதும் கட்டாயப்படுத்துவதும்
மிகப்பெரிய குற்றம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நிறைய மனிதர்களிடம் இந்தக்
குற்றமுள்ள போக்கை நாம் காணமுடிகிறது. நம் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும்
சுதந்திரம் நமக்கு உள்ளது. ஆனால் அடுத்தவர்கள் எண்ணங்களும், கொள்கைகளும்,
வாழ்க்கை முறைகளும் நம்முடையதைப் போலவே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது
கிட்டத் தட்ட அவர்களை அடிமைப்படுத்த நினைக்கும் முனைப்பே. நம் வழி உண்மையாகவே
சிறந்ததாகவே உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அதை அடுத்தவரிடம் பலவந்தமாகத்
திணிக்க முடியாது. அப்படித் திணிப்பது வெற்றியையும் தராது. நம்முடைய நகலாக
உலகம் இருக்க முடியாது, இருக்கவும் தேவையில்லை என்று உணர்வது மிக முக்கியம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் தாக்குப்பிடித்து வந்துள்ள இந்தத் தவறுகள்
நம்மிடம் இருக்கிறதா என்று நேர்மையுடன் சோதித்துப் பார்ப்பது நல்லது. இருந்தால்
அவற்றை நம்மிடம் இருந்து நீக்கிப் பயனடைந்து மற்றவர்களும் அப்படி நீக்கிக்
கொள்ள விரும்பும்படி நல்ல முன் உதாரணமாக வாழ்ந்தால் அது வாழ்க்கையின்
மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

நன்றி – …….நடராசன் …

FEB 16 2012.

— 

அப்பா–எங்கே உங்கள் அஞ்சல் அட்டை ?

ஆயிரம் பிறை கண்டு –ஆண்டு ஒன்று  நிறைவாகும் தருணம் ….அப்பா   நீங்க

ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்ட மாயமென்ன …

காயமே இது  பொய்யடா–இது வெறும் காற்றடைத்த  பையடா–என்று

சொல்லாமல் சொன்ன உண்மையா !!!!

எல்லோருக்கும் எப்போதும் ஒரு கடிதம் –தன் கைப்பட —

வாழ்த்து கடிதம் முதல் இரங்கல் வெண்பா  வரை –அது

உங்கள் அடையாள சின்னம் !!!!

மின் அஞ்சலையும் மீறி உங்கள் அஞ்சல்  அட்டை –அடையாளம்

காட்டும் உங்களை பலருக்கும் !!!!

ஒரு வேளை  இதுதானோ  PERSONAL TOUCH  என்பது !!!!

மின் அஞ்சல் அடையாளம்  உங்களுக்கு  வேண்டாத ஒன்று !!!!

எனக்கு ஒரு முகவரி தந்த உங்களிடம் இப்போதும் உள்ளதே –என்

முகவரி ….பின்  என்னப்பா தயக்கம் ??? —தாமதம் ???

வரவேண்டும்  ஒரு அஞ்சல் அட்டை உங்களிடமிருந்து  மீண்டும்  எனக்கு –

தர வேண்டும்  அது  புத்துணர்ச்சி  என்றும்  எனக்கு !!!!!!

நடராசன் ….. kavithanjali  on date 10 june 2007

எங்கே என் அம்மா ?

அம்மா என்ற சொல் மறந்து ஆண்டு ஒன்று இன்று எனக்கு –சொல்லு

அம்மா …. ஒன்றுமே  சொல்லாமல் நீ சென்று விட்டது ஏனம்மா ?

அம்மா அம்மா என்று என் பிள்ளை  தன்  அம்மாவை   கூப்பிட்டால் –நான்

அம்மா  எங்கே  எங்கே  என்று    உன்னைத்தானே  தேடுகிறேன் ….

 

 

….என் அம்மாவின் முதல் நினைவு நாள் அன்று  வடிக்கப்பட்ட கவி மாலை ..

நடராசன்

11 feb 2012

ஏசையனுர் பாட்டி —

 

காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள்.
இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.

எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.

“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.

“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.

“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.

காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.

பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.

“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.

சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்.



—



—