வாரம் ஒரு கவிதை …” மீண்டும் சந்திப்போம் “

மீண்டும் சந்திப்போம்
+++++++++++++++++++
பிரிவின் முடிவில் சொல்லும் வார்த்தை
மீண்டும் சந்திப்போம் !
நம்பிக்கை அது …எதுவும் நம் கையில்
இல்லா விட்டாலும் !
பள்ளி வாழ்க்கை …கல்லூரி வாழ்க்கை
பிரிந்தோம் அன்று!
மீண்டும் சந்திப்போம்  என்ற நம்பிக்கையுடன் !
நம்பிக்கையும் பொய்க்கவில்லை  நம் வாழ்வில் !
மீண்டும் சந்தித்தோம் நாம் மலரும் நினைவுகளுடன் !
பொன் விழா சந்திப்பு ஒரு நல்ல ஆரம்பமே
மீண்டும் சந்திப்போம் என்று சொல்லித்தானே
விடை பெற்றோம் அன்றும் !
சிந்திப்போமா எங்கே எப்படி என்று மீண்டும்
சந்திப்பு என்று !
மீண்டும் சந்திப்போம் விரைவில் !
கந்தசாமி  நடராஜன்
14/12/2019

வாரம் ஒரு கவிதை …” அப்பாவின் நாற்காலி “

அப்பாவின் நாற்காலி
++++++++++++++++++++++
எனக்கு அது வேண்டும் …எனக்கு இது வேண்டும்
அப்பாவின் நினைவாக ….பிள்ளைகள் கேட்கின்றார்கள்
அப்பாவின் ஆஸ்தி ஒவ் வொன்றாக   …அப்பாவின்
அஸ்தி கடலில் கரைத்தவுடன் !
ஓரு பிள்ளை மட்டும் கேட்டான் அப்பாவின் நாற்காலி
மட்டும் போதும் தனக்கு என்று !
அவனுக்குத் தெரியும் அவன் அப்பாவின் கட்சிப்
பதவி நாற்காலியின் மதிப்பு என்ன என்று !
kandasami natarajan
in http://www.dinamni.com dated  11/12/2019

வாரம் ஒரு கவிதை ….” அப்பாவின் நாற்காலி “‘

அப்பாவின் நாற்காலி
+++++++++++++++++++++
அப்பா இல்லை இப்போது அவர் நாற்காலி
மட்டும் வீட்டில் !
நடக்க முடியாமல் இருந்தவருக்கு அவர்
நாற்காலிதான் அலுவலகம் !
வீட்டில் இருந்தபடியே எல்லா வேலையும்
செய்து முடிப்பார் எல்லோருக்கும் !
அது அவர் தனித்துவம் !
எல்லோருக்கும் இரண்டு கால் என்றால்
அப்பாவுக்கு நாலு கால் !
அப்பாவின் நாற்காலி கேட்கிறது இன்று
நான் என் கால் இழந்து நிற்கிறேன்
எங்கே என் சொந்தக்காரர் என்று ?
Kandasami Natarajan
in http://www.dinamani.com dated 11/12/2019