
Sunshine through Tree…

On a Rainy Day at Chennai…

Sunrise at Chennai…

Peacocks at Sunset….

Peacock Walk….

BeautifulPeacock….

Golden sunset….

Solitary Sparrow…

வாரம் ஒரு கவிதை …மௌன சிறை 2
மௌன சிறை
++++++++++++++
உனக்கு என்று ஒரு கடமையும் உண்டு
உரிமையும் உண்டு தம்பி !
உன் உரிமை பறிக்கப் படும் போது
ஏன் எதற்கு என்று தட்டிக் கேட்க வேண்டும்
நீ தம்பி !
உண்மை விலை பேசப்படும் போதும்
சும்மா இருக்காமல் நீ கேள்வி கேட்க வேண்டும்
தம்பி !
கண் முன்னால் அநீதி உனக்கு மட்டும் அல்ல
வேறு யாருக்கு இழைக்கப்பட்டாலும் அநியாயம்
அநியாயமே !தட்டிக் கேட்க வேண்டிய நீ வாய் மூடி
மௌனம் காத்தால் அந்த மௌனமே உனக்கு
சிறை தண்டனை !
தேவையா உனக்கு மௌன சிறைவாசம்
வேறு ஒருவர் செய்யும் தவறுக்கு ?
கந்தசாமி நடராஜன்
30/11/2019