வாரம் ஒரு கவிதை …” தூரத்து உறவுகள் “

தூரத்து உறவுகள்
++++++++++++++++++
உறவுகள் என்றும் உறவுகளே
பக்கத்து உறவுகள் என்ன
தூரத்து உறவுகள் என்ன !
தொலைக்காத உறவு எல்லாம்
நெருங்கிய உறவுகள்தான் !
நடைமுறையில் இன்று  பேரன் பேத்திகள்
தாத்தா பாட்டி  பக்கத்திலா உள்ளார்கள் ?
சொந்த தாத்தா பாட்டியே  இன்று தூரத்து
சொந்தம் என்று மாறும் நிலைமை !
இனி வரும் நாளில்  பக்கத்து சொந்தம்
தூரத்து சொந்தம் இரண்டுக்கும் ஒரு
புது அர்த்தம் தேட வேண்டிய கட்டாயம்
ஒன்று நிச்சயம் உருவாகும் !
பக்கத்தில் இருந்தால் மட்டும் சொந்தம் என்று
இல்லை !  தூரத்தில் இருந்தாலும் தாத்தா
பாட்டி தூரத்து சொந்தம் இல்லை என்று
பிள்ளைகளுக்கு சொல்லும் ஓர் காலம் வரும்
கண்டிப்பாக !
கந்தசாமி  நடராஜன்
 in http://www.dinamani.com  dated   20/11/2019

வாரம் ஒரு கவிதை …” பெண்ணென்று சொல்வேன் …”

பெண்ணென்று சொல்வேன்
+++++++++++++++++++++++++
எந்த பதவியில் இல்லை இன்று ஒரு பெண் ?
மண்ணில் மட்டும் அல்ல விண்ணிலும்
பறந்து வெற்றிக்கொடி நாட்டி அவள் பிறந்த
மண்ணுக்கு பெருமை தேடி தரவில்லையா பெண் ?
எல்லை காக்கும் புனிதப் பணியிலும் சரி ,
காவல் பணியிலும் சரி, தீ அணைப்பு பணியிலும்
சரி …எதில் இல்லை நம் பெண்கள் இன்று ?
யாருக்கும்  சளைத்தவர்கள் இல்லை நம் பெண்கள் !
இந்த நேரத்தில் முதன்மையாய்  நிற்கும் பெண்கள்
பின்னால் தெரியுது அவர்கள் அம்மாவின் முகம் !
நிலைக்கண்ணாடியில் உங்கள் முகம் பார்க்கும்
நேரம் உங்கள் அம்மாவின் முகத்தையும் பாருங்கள்
பெண்களே !  புரியும் உங்களுக்கு தன்னால்
உங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் என்று !
பெண்ணே  நீ வெற்றிப்  பெண்  என்றால்
உன் அம்மா உன்னைப் பெற்ற அதிசயப்
பெண்ணென்று நான் சொல்வேன் !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 13/011/2019