வாரம் ஒரு கவிதை …” இந்த நாள் இனிய நாள் “

இந்த நாள் இனிய நாள்
+++++++++++++++++++++
இந்த நாள் இனிய நாள் …நாம்
வந்த  நாள் முதல் எந்த நாளும்
இனிய நாளே ! மனதில் மகிழ்ச்சி
இருக்கும் நாள் இனிய நாள் ! மனதை
இறுக்கும் உணர்வு  இருக்கும் ஒரு
நாள் இனிய நாள் இல்லை   நமக்கு !
நாள் என்றும் ஒன்றுதான் !…இனிப்பும்
கசப்பும் நம் மனநிலை சார்ந்ததே !
இன்பமும் துன்பமும் சேர்ந்தே வாழ்க்கை !
இந்த நாள் மிக நல்ல நாள் …நாளை
இதை விட நல்ல நாள் என மனதில்
கொண்டால்  வாழ்வில் இந்த நாள்
மட்டுமல்ல எந்த நாளும் ஒரு இனிய நாளே !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 06/11/2019

வாரம் ஓரு கவிதை …”தீபம் “

தீபம்
+++++
இருள்  அகற்ற ஒரு தீபம் போதும்
பல தீபம் ஏற்றிட பொங்கிடும் ஒளி
வெள்ளம் ! தீபத்தின் ஒளியில்
ஒளிரும்  தீபாவளி !
அகத்தின் இருள் நீக்கிட தேவை
ஒரே ஒரு தீபம் ! ” நான் ” எனது “
என்னும் அகந்தை அழிய ஒரு சிறு
தீபம் ! உன்னை நீ யார் என்று புரிய
வைக்கும் ஆன்மிக தீபம் !
அகத்தின் இருள் மறைந்தால் இந்த
ஜெகமே மிளிரும்  ஒரே ஒரு தீப
ஒளியால் !
அகந்தைப் பிசாசை அழித்து ஒழிக்க
அகத்தில் ஏற்றுவோம் ஆன்மிக தீபம் முதலில் !
அதுவே உண்மையில் தீபாவளி நம் வாழ்வில் !
K.Natarajan
27/10/2019