வாரம் ஒரு கவிதை ….” மகாத்மா காந்தி “

மகாத்மா காந்தி
++++++++++++++
வாங்கித் தந்தார் தந்தை காந்தி நம்
மண்ணுக்கு விடுதலை ! அப்போதே
சொன்னார் இந்த மண் உன் பூர்விக
சொத்து அல்ல …உன் பிள்ளைக்கு
நீ பட்டிருக்கும் கடன் என்று !
கடனாளி நீ இந்த மண்ணுக்கு சொந்தம்
கொண்டாட முடியுமா ?
உனக்கு என்ன உரிமை கடன் சொத்தை
அழிக்க ? கோடிட்டு காட்டினார் உன்
எல்லை என்ன என்று அன்றே மகாத்மா !
நிலை மறந்து எல்லை தாண்டி விட்டாய்
மனிதா நீ இன்று !
இந்த மண்ணின் வளம் அழிக்க கடனாளி
உனக்கு ஏது உரிமை ?  கேட்கிறார் இன்று
உன் பிள்ளைகள் ! பதில் சொல்லு நீ !
கேள்வி கேட்கும் ஓவ்வொரு பிள்ளையும்
ஒரு மகாத்மா காந்தியே !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 02/10/2019

வாரம் ஒரு கவிதை ….” புத்தரின் புன்னகை “

புத்தரின் புன்னகை
++++++++++++++++++
மாற்றம் ஒன்றே நிரந்தரம் …வாழ்வில்
மற்றவை  நிரந்தரம் அல்ல !
விதை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
அன்றே சொன்னார் புத்தர் ! இன்னும்
அதன் அர்த்தம் தெரியவில்லையே  நமக்கு !
மோனோலிசாவின்  புன்னகை பார்க்க
ஓடும் நமக்கு புத்தர் ஏன் சிரிக்கிறார்
நம்மைப் பார்த்து என்று இன்னும்
புரியவில்லையே !
புத்தரின் சிரிப்பு வெறும் புன்சிரிப்பு
அல்ல …பொருள் பொதிந்த  பொன்
சிரிப்பு !
கந்தசாமி  நடராஜன்
in http://www.dinamani.com dated 25/09/2019