மழை இரவு …
—————
மழை வருமா வராதா …எல்லோர்
மனதிலும் இந்த கேள்வி ஒன்றுதான் !
அந்திக் கருக்கலில் கொட்டியது மழை !
பட்டென கேட்டார் எல்லோரும்
“என்ன மழை இது …வீட்டுக்கு நான்
எப்படி செல்ல ?”
இந்த மழை இரவில் பொழியக் கூடாதா ?
இரவு முழுதும் மழை ….காலையில்
வெய்யில் என்று இருக்கக் கூடாதா ?
மழை நான் கேட்கிறேன் .. மனிதா உன் வீட்டுக்கு
எப்படி செல்வது மழை என்னுடன் பயணித்து என
நீ கேட்கிறாய் !
வீடு என்று ஒன்று இல்லாத நடைபாதை வாசிகள்
மழை இரவிலும் “இரவில் மழை ஏன்” என்று இதுவரை
என்னைக் கேட்டது இல்லையே !
என் வரவுக்கு இறைஞ்சும் நீ… நீ சொல்லும்
நேரம் மட்டும் நான் வர வேண்டும் என்று
நினைப்பது என்ன நியாயம் ?
K.Natarajan
16th July 2018
Virga is rain that doesn’t reach the ground
வாரம் ஒரு கவிதை ….” பிரியும் தருணத்தில் ” …
பிரியும் தருணத்தில் …
——————-
இவர் போல வேறு யாரும் இருக்க முடியாது
இனிமேலும் இவர் போல வேறு ஒருவர்
பணி ஆற்ற முடியாது இந்த அலுவலகத்தில் !
என் ஒய்வு நாள் பிரிவு உபசார விழாவில்
நான் கேட்கும் நல்ல வார்த்தைகள் இவை !
என் வாழ்க்கையில் பாதி நாள் இந்த
அலுவலகப் பணியில் கழித்து விட்ட
நானும் சொல்கிறேன் ” உங்களையும்
இந்த அலுவலகத்தையும் பிரிய மனமில்லை
எனக்கு ” என்று !
பணியில் இருந்த நாளில் ” என்ன வேலை
இது …எப்போது விடுதலை நமக்கு இந்த
பணியில் இருந்து ” என்ற எண்ணம் தான்
என் மனதில் உண்மையில் !
நினைத்துப் பார்க்கிறேன் நான் .. பணியில்
இருந்த நாளில் பரஸ்பரம் இந்த ஒரு பரிவும்
பாசமும் உடன் உழைத்த நண்பர்களிடம் நேசமும்
இருந்ததா இல்லையா என்னிடம் ?
பிரியும் தருணத்தில் மட்டும் இந்த பாசமும் நேசமும்
போட்டி போட்டுக் கொண்டு ஒரு ஓட்டப் பந்தயம்
நடத்திக் காட்டுதே என் கண் முன்னே ! ஒன்றும்
புரியவில்லை எனக்கு …!
ஒருவரை ஒருவர் பிரியும் தருணத்தில்
மட்டும் பாச மழை பொழியாமல் ஒருவர் வாழ்வின்
எந்த தருணத்திலும் பாசமும் நேசமும் அவர்
இரண்டு கண்களாக இருக்க வேண்டும்
என்னும் ஒரு முக்கிய செய்தி கிடைக்குதா
எனக்கு என் அலுவலை பிரியும் தருணத்தில் ?
K.natarajan
3rd july 2018