வாரம் ஒரு கவிதை …” சத்தம் போடும் சட்டம் “

சத்தம் போடும் ஒரு  சட்டம்

+++++++++++++++++++++++

குடியுரிமை திருத்த சட்டம் …இந்த சட்டம்
போடும் சத்தம் அதிகம் இன்று !
வாதம் விவாதம் தினம் தினம் இந்த
சட்டம் பற்றி !
குடியுரிமை கொடுக்கும் சட்டமா இல்லை
உரிமை பறிக்கும் சட்டமா என்று —
வாதம் விவாதம் தாண்டி விதண்டா வாதமும்
ஒரு தனி ஆவர்த்தனம் இந்த சட்ட திருத்தத்துக்கு !
இந்த சட்டம் போடும் சத்தத்தில் நம்ம
ஊர் “குடிமகன்” ஒருவர் சத்தம் போட்டு
கேட்கிறார் …என் “குடி” உரிமையை
இந்த சட்டம்  பறித்து விட்டதாம்
என் ” குடி  ” உரிமை கேட்டு நானும்
போராடுவேன் …என் உரிமைக்கு
குரல் கொடுப்பேன் என்கிறார் அந்த
“குடி” மகன் !

கந்தசாமி  நடராஜன்

22/12/2019