யாருக்கு யார் சேவகர் ?
+++++++++++++++++++++++
அரசாங்க வேலையோ தனியார் கம்பெனி
வேலையோ …கீழ் மட்ட ஊழியர் முதல்
மேல் மட்ட அதிகாரி வரை அனைவருக்கும் இருக்கு
“திறன் காணும் சோதனை ” காலம் (“Probation”)
பணியில் சேர்ந்தவுடன் அங்கு!
திறனில் குறை இருந்தால் அரை குறையாக
முடிந்து விடும் சேவகரின் பணிக் காலம்!
பணியில் அமர்த்தியவருக்கும் தெரியும்
பணியில் சேர்ந்தவருக்கும் தெரியும்
பணி நியமனம் ஒரு “பணிக் கொடை “
அல்ல என்று !
திறன் இருந்தால் மட்டுமே பணி
தொடரும்! இல்லையேல் மீண்டும்
வேறு வேலை தேடும் பணி தொடரும்
அந்த ஊழியருக்கு !
ஊழியருக்கு எல்லாம் “திறன் காணும்
சோதனை ” காலம் இருக்கு !
மக்கள் உங்களுக்காக ஊழியம் செய்கிறேன்
என்று சொல்லி ” மக்கள் சேவகர் “
நாற்காலியில் அமரும் நம் “மக்கள்
சேவகர்களுக்கு” இன்று வரை இல்லையே
ஒரு ” திறன் காணும் சோதனைக் காலம் ” ?
அது ஏன் ?
திறமை இல்லையேல் சேவகரை பதவி
நாற்காலியில் இருந்து உடனே கீழே இறக்கும்
அதிகாரம் இருக்க வேண்டாமா அவரை
வேலையில் நியமித்த மக்களுக்கு ?
“மக்கள் சேவகருக்கு ” மட்டும் அப்படி என்ன
ஒரு விதிவிலக்கு … உத்திரவாதம் (Guarantee )அவர்
“பணிக்கு” ஐந்து ஆண்டு என்று ?
நடராஜன்
10/05/2019