source:::::”:Dinamani”…..Tamil daily….
Natarajan
படி அளக்கும் கடவுள் …….
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரும் தமிழ்ப் பேரறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ஆலயமொன்றிற்குச் சென்றிருந்தனர். அப்போது அந்தி நேரம். ஆலய படிக்கட்டுகளில் இருவரும் ஏறிக் கொண்டிருந்தனர். புதிதாக வந்த நாட்டாருக்கு பழக்கமில்லாததால் கால் சில இடங்களில் இடறியது.படிகள் இல்லாத இடங்களிலெல்லாம்,””இங்கே படி இல்லை அய்யா! அங்கே படி இல்லை அய்யா…படியில்லை…படியில்லை…பார்த்து காலெடுத்து வைத்து வாங்க” என்று சொல்லிக் கொண்டே வந்தார் கதிரேசன் செட்டியார்.தமக்கு முன்னால் வழிகாட்டியாகச் சென்ற கதிரேசனை சிறிது நேரம் நிற்குமாறு சொன்னார் வேங்கடசாமி நாட்டார்.””பண்டித மணியாரே! இறைவன் திருச்சந்நிதியில் வந்து படி இல்லே…படி இல்லே என்று சொல்லாதீங்க. இறைவன் நமக்கெல்லாம் படியளப்பவர். அப்படியிருக்கையில் படி இல்லே…படி இல்லே…என்று கூறிக்கொண்டே செல்லலாமா? படி இருக்கு…படி இருக்கு என்று சொல்லிக் கொண்டே போங்கள்”-இவ்விதம் நாட்டார் இருபொருள் பட கூறிய நகைச்சுவையில் மகிழ்ந்து போனார் பண்டிதமணி.
விநாயகரில் தொடக்கம் அனுமாரில் முடிவு……
நான் சொல்லும் வேகத்திற்கு உங்களால் எழுத முடியுமா” என்று கேட்கிறார் வியாசர். “”நான் எழுதும் வேகத்திற்கு உங்களால் சொல்ல முடியுமா” என்று விநாயகர் பதிலுக்குக் கேட்கிறார். இப்படி இருவரும் போட்டி போட்டு நமக்குக் கொடுத்ததுதான் மகாபாரதம். இப்படி பிள்ளையாரோடு ஆரம்பித்த மகாபாரதம் அனுமாரோடு முடிகிறது. எப்படி தெரியுமா? போர் முடிந்ததும் என்ன நடைபெறுகிறது. முதலில் அர்ஜூனனை ரதத்திலிருந்து இறங்கும்படி சொல்லுகிறார் கிருஷ்ணர். அர்ஜூனன் இறங்குகிறார். அதன்பின் கிருஷ்ணர் ரதத்தை விட்டு கீழே இறங்குகிறார். அவர் இறங்கிய உடனே ரதத்தின் கொடியில் இருந்த அனுமார் மறைகிறார். ரதம் தீப்பிடித்து எரிகிறது. இப்படியாக மகாபாரதம் ஹனுமனுடன் நிறைவு பெறுகிறது!!!!
சமயோசிதம்…….!கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்துபோய், “உப்பை எடுத்தார்…உப்பை எடுத்தார்’ என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார். மக்கள் திருதிருவென விழித்தனர்.உடனே கலைவாணர்,””எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக “உப்பை எடுத்தார்’ என பலமுறை பாடிக் காட்டினார்” என்று போட்டார் ஒரு போடு.பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன
.சாமர்த்தியம்…….சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார் வி.பாஷ்யம் ஐயங்கார். அவர் தம்முடைய ஓய்வு நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து வந்தார். ஒருநாள் அந்த வெள்ளைக்காரர் இல்லத்துக்குள் ஐயங்கார் நுழைந்ததும் அங்கே இருந்த நாய் பாய்ந்து குரைத்தது. அதனால் ஐயங்கார் ஓட நேரிட்டது. அதைக் கண்ட வெள்ளையர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார்.””என்ன ஐயங்கார்! குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியை மறந்து விட்டீர்களோ?” என்றார்.””நண்பரே! அந்தப் பழமொழியை நீங்கள் அறிவீர்கள்; நானும் அறிவேன். ஆனால் நாய்க்கு அந்த பழமொழி தெரியுமா?” என்று சாமர்த்தியமாகக் கேட்டார் ஐயங்கார்.
Nice to see such anecdotes.