நவராத்திரி கொலு சொல்லும் தத்துவம் …..

கொலுவுக்கு ரெடியாயிட்டீங்களா?

மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனித பிறப்பின் அடிப்படை தத்துவம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் நவராத்திரி விழாவில் கொலு வைக்கப்படுகிறது. இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகளில் வைக்கப்பட வேண்டிய பொம்மைகள்…

1ம் படி: ஓரறிவு உயிர் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்

2ம் படி: இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்

3ம் படி: மூன்றறிவு உயிர்களான எறும்பு, ஊறும் உயிரின பொம்மைகள்

4ம் படி: நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

5ம் படி: ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவை பொம்மைகள்.

6ம் படி: ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்.

7ம் படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்.

8ம் படி: தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூதங்கள், அஷ்டதி பாலகர் பொம்மைகள்.

9ம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்) இருத்தல்

வேண்டும்.

Source::::::DINAKARAN ….Tamil Daily..

Natarajan

One thought on “நவராத்திரி கொலு சொல்லும் தத்துவம் …..

  1. A V Ramanathan's avatar A V Ramanathan October 15, 2012 / 8:27 am

    A good message for the occasion. Thank you.

Leave a reply to A V Ramanathan Cancel reply