
மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் கோலம் போட்டு, அதன் நடுவில்சாணம் வைத்து, அதில், பறங்கி பூவை வைப்பது, தமிழர்களின் வழக்கம். மஞ்சள் வண்ணத்தில் பறங்கிப்பூ இருப்பதால், அதை வைக்கும் இல்லங்களில், மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. பூமலர்ந்திருப்பது போல், வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மாட்டுச் சாணம் கிருமி நாசினி என்பதால், இல்லத்தில் உள்ளோருக்கு ஆரோக்கியம் தரும். பூ மலர்ந்திருப்பது போல, வீட்டில் உள்ளவர்களும் மலர்ச்சியோடும் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
கன்னி பெண்கள், இவ்வாறு மார்கழி மாதத்தில் கோலமிட்டு பூ வைத்து வழிபட்டால், நல்ல வாழ்க்கை அமையும் என்பது ஐதிகம்.
source::::::DINA MALAR..Tamil Daily
Natarajan