• அவர்: பட்டப் பகல்ல அவர் ஏன் லைட் போட்டுக்கிட்டு மியூசிக் பிராக்டீஸ்
பண்ணுகிறார்?
இவர்: அவர் பிராக்டீஸ் பண்றது “லைட் மியூசிக்’!
• மகன்: இன்னிக்கு சாம்பார் செம டேஸ்டா இருக்கும்மா..!
அம்மா: உனக்கு அப்பாவைப் புகழலைன்னா தூக்கம் வராதே!
• டாக்டர்: எக்ஸ்ரே எடுக்க சீட்டு கொடுத்தேனே… எடுத்தாச்சா..?
நோயாளி: நீங்க கொடுத்த சீட்டை ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம்… எக்ஸ்ரே எல்லாம் எடுக்க முடியாதாம்..!
• நண்பர்: உங்களுக்கு ஏதாவதுன்னா, தெருவில் உள்ள எல்லோரும் உதவிக்கு ஓடி வருவாங்களா..! பரவாயில்லையே…. இவ்வளவு பாசமா இருக்காங்களே..?
மற்றவர்: நீங்க வேற… எல்லோரும் எனக்கு கடன் கொடுத்திருக்காங்க…!
• ஒருவர்: எலிப் பொறிக்குள்ள என்ன சீட்டு?
மற்றவர்: ‘மசால் வடை டேஸ்ட்டா இருந்துச்சு, நன்றி’ன்னு எலி எழுதி வச்சிருக்குது..!
• டாக்டர்: பேஷண்ட் ஏன் பில்லை தூக்கிப் போட்டுட்டுப் போறாரு?
நர்ஸ்: மனதுக்கு அதிர்ச்சியைத் தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைத் தூக்கிப் போட்டுடனும்னு நீங்கதான் சொன்னீங்களாமே, டாக்டர்..?
source::::Dinamani Tamil Daily
natarajan
