“செவ்வாயில் செவ் வாய்க்கு மங்கல்யான் ” !!!

செவ்வாயில் செவ்வாய்க்கு.. களம் தேடும் கலம்

 

 

marsதேடல் தேடல் தேடல்

தேடல் ஒன்றையே
ஜீவனாய் கொண்டு வாழும்
மானுட இனம்!

தேடித்தேடி பெற்றது
ஏராளம்- இருப்பினும்
இன்னொரு தளம் தேடி
வேற்றொரு கிரகத்துக்கு
கலம் விடுகிறோம்…!

செங்கடலில் தோன்றி
செங்கடலில் மறையும்
நீலவானின் சூரியன் போல்

செவ்வாயில் புறப்பட்டு
செவ்வாய்க்கு சென்றது
மங்கள்யான்..!

பூமியில் சேர்த்தது
பூமியில் படித்தது
பூமியில் கண்டுபிடித்தது
எல்லாவற்றையும்..
முடிந்தால் இந்த பூமியையும்
செவ்வாய்க்கு கொண்டு சேர்ப்போம்..!

நாளைய தலைமுறைகள்
செங்கோலாட்சி செய்யட்டும்
செவ்வாயில்…!
அதற்கான வாயில் வகுக்கட்டும்
மங்கள்யான் !

source ::::  -கவிஞர். திருமலைசோமு  In Dinamani …Tamil daily

natarajan

Leave a comment