வாரம் ஒரு கவிதை …” சூரிய தாகம் “

 

சூரிய தாகம்
————–
சுள்ளென்று எரிக்கும் சூரியனின் தாக்கம் தெரியும்
அது என்ன சூரிய தாகம் ? சூரியனுக்கே  தாகமா !
இல்லை  தாகம்,  சூரிய வெப்பம் தாக்கும் பூமிக்கா ?
தாகம் பூமிக்கு மட்டும் அல்ல …  சூரியனுக்கும் இருக்கு !
மண்ணில் உள்ள நீர் மனிதனுக்கு மட்டுமல்ல சொந்தம் !
விண்ணில் உள்ள மேகத்துக்கும் அதுதானே நீராகாரம் !
மண்ணிலிருந்து நீர் உறிஞ்சி வெண் மேகம் நெய்து
கொடுக்கும் கரு மழை மேக புத்தாடை  சூரியனுக்கு
ஒரு பட்டாடை ! கதிரவன் அவன் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தலும் அதுவே !
விண்ணின் தண்ணீர் பந்தல் அள்ளி வழங்கும்
கொடையே இந்த மண்ணுக்கு துள்ளி வரும் மழை !
மண்ணுக்கு துள்ளி வரும் மழை நீரை வரவேற்க
ஏரி குளம் ஒன்றும் இல்லையே நம் மண்ணில் இன்று !
மண்ணுக்கு குடை பிடித்து கருமேக மழைப்
பொழிவை வழி காட்டி வரவேற்கும் மரம்,
கானகமும் கண்ணில் படவில்லையே இன்று !
வரிசை கட்டி வானம் தொடும் கட்டிடங்கள்தான்
தெரியுது கண்ணுக்கு எட்டும் தூரம் மட்டும் !
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ! ஏரி குளம்
அருமை புரிந்து நம்  மண்ணின் நீர் வளம்
காப்போம் !
மரம் வளர்த்து நீர் வளம் பெருக்கினால்
தீரும் அந்த சூரிய தாகம் !
சூரிய தாகம் தணிந்தால்  தீரும் இந்த மண்ணின்
தண்ணீர் தாகம்  தன்னால் !
Natarajan  in http://www.dinamani.com  dated 17th April 2017
Natarajan

Real story behind a King Cobra from Karnataka drinking water from a water bottle…!!!

The media is fired up about a video showing a 12-foot-long, parched King Cobra drinking water from a water bottle. The video first uploaded by a YouTube channel called ‘Uttara Kannada News’  shows a man in khaki giving water to the snake.

Mashable India, was one of the first to put the video out and said that severe drought prevailing across Karnataka had resulted in the cobra straying into a village and desperately looking for water.

Huffington Post, in its article, Thirsty King Cobra sips water from a bottle amid debilitating drought, draws much sympathy for the poor lost snake, being offered drinking water by a sympathetic man.

One of the men seen in the video giving water to the snake is CN Naykka, the Deputy Range Forest Officer of Karwar forest range. He had rescued the cobra along with snake expert Raghavendra

Though Naykka is surprised that the video has gone viral, he refuted claims of drought in the region and also said that such instances were common during summer months.

“The Kaiga Power Plant is located near the forest range. The snake had wandered into the Kaiga Township, located near the plant sometime in the morning. We spotted the King Cobra at around 12.30 pm and it was dehydrated due to the extreme heat. Hence, I offered it some water and took it to a rescue centre,” Naykka said.

The forest officer also said that this is the mating season and cobras wandering around the area was a common occurrence, which happens almost every year.

“Whenever a snake wanders into civilian-populated areas, we first offer it water. There is nothing sensational about it. The Kali River, which runs through the Karwar Forest Range is flush with water and so are the backwaters located near the Kaiga Power Plant. During summer, many different birds and animals come for water including cobras,” Naykka added.

Source…..http://www.thenewsminute.com/

Natarajan

வாரம் ஒரு கவிதை …” நிலா விடும் தூது “

 

நிலா  விடும்  தூது
——————
நிலா சோறு சாப்பிட்ட நீ கால் பதித்தாய் என் மண்ணில்
ஒரு நாள் … நிலவு எனக்கு அன்று ஒரே பெருமை !
 பூமித்தாயின் பிள்ளைகள் வருவார்கள் என் வீட்டுக்கு !
 ஆட்டமும் பாட்டமும் இருக்கும் என் வீட்டிலும் ! நான் அவருக்கு
ஊட்ட வேண்டும் சோறு பூமி காட்டி என் நிலவு வீட்டில்!
இந்த நிலவின் கனவு அது !இலவு காத்த கிளி போல ஆனதே
இந்த நிலவின் கனவு !நானும்  தூது விட்டுப் பார்க்கிறேன்
என்னைத் தாண்டி செல்லும்  விண்கலத்தில் எல்லாம்!
வழி மேல் விழி வைத்து தேடுகிறேன் உன்னை
மனிதா  என் மேலே வட்டமிடும் விண்கலத்தில் ! இரக்கமே
இல்லையா உனக்கு ? என் மண்ணில்  இறங்க மறுப்பது ஏன் ?
உயர உயர பறப்பதுதான் உன்  இலக்கா ? புதுப்புது
மண்ணை விண்ணிலும் தொட்டு முத்தமிட்டு உன் வீட்டுக்கே
திரும்பி செல்வது மட்டும்  உன் அறிவியல் விளையாட்டா ?
உன் மண்ணில் நீ விளையாட இடம் இல்லாமல் இந்த
விண்ணில் நீ விளையாட நானும் இந்த விண்மண்டலமும்
ஒரு விளையாட்டு திடல் மட்டுமா  உனக்கு ?
புதுப்புது அறிவியல் செய்தி உன் வசம் கொண்டு  சேர்க்கும்
உன் விண்கலம்  இந்த நிலா விடும் தூதை மட்டும் உன்னிடம்
கொண்டு சேர்க்காத காரணம் என்ன சொல்லு மனிதா?
நிலா நான்  காத்திருக்கிறேன் உன் கால் என் மண்ணை
மீண்டும் முத்தமிட்டு  என் மண்ணில் நீ ஓடி ஆடும்
அந்த நல்ல நாளுக்காக !
Natarajan  in http://www.dinamani.com dated 27th Feb 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” சுனாமி சுவடுகள் ” …

 

ஆழிப் பேரலை இங்கு பதித்த சுவடுகள் என்றும் 
அழியாத வடுக்கள் அன்றோ ! ஆண்டு பன்னிரண்டு 
ஆனாலும் மறக்க முடியுமா அந்த நாளை இன்றும் ?
சுனாமியின் சுவடுகளில் கால் பதித்து மரம் பல பலி 
கொண்டு ஒரு நகரின் வாழ்வு முடக்கி " வார்தா "
ஆடிய ஆட்டம் ஆழிப் பேரலையின் மற்றுமொரு 
அவதாரமா ? பஞ்ச பூதங்கள் வரிசை கட்டி கொஞ்சமும் 
இரக்கம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக  அசுர ஆட்டம் போடுவது 
ஏன் இந்த இசை விழா மாதத்தில் மீண்டும் மீண்டும் ?
வசை பாடவில்லை நான் உங்களை பஞ்ச பூதங்களே! 
அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உங்கள் மீது !
எங்களைக் காக்கும் தாய் அல்லவா நீங்க ...பிள்ளைகள் 
எங்களை நீங்க தண்டித்தது போதும் ...உங்க அடிகளின் 
வடுக்கள் கட்டாயம் தடுக்கும் எங்களை உங்கள் கண்டிப்பான 
நெறி முறை விதி முறை மீறாமல் இனிமேல் ! நம்புங்க எங்க வாக்கை !
நம்பி எங்களை வழி நடத்துங்க ஒரு தடங்கல் இல்லா 
பாதையில் நாங்கள்  எங்கள் பாத சுவடு பதிக்க

Natarajan

www.dinamani.com ---26th Dec2016

 

படித்து ரசித்தது …” குட்டி பறவைக்கு வந்த தைரியம்!”

 

கடற்கரையோர மணல் பரப்பில் தவ்வித் தவ்வி ஓடிக்கொண்டிருக்கின்றன சில அலை உள்ளான் பறவைகள் (Sanderlings). மணலுக்குள் தன் அலகைச் செருகி இரை கிடைக்குமா என்று கிளறிப் பார்க்கின்றன. அலை பக்கத்தில் வந்தால் கரைக்கு ஓடுகின்றன; உள்வாங்கினால் போன வேகத்தில் திரும்பவும் வந்து மணலைக் கிளறுகின்றன. பெரிய அலை வந்தால் விருட்டெனப் பறந்து கரைக்கே வந்துவிடுகின்றன. இதெல்லாம் செய்யத் தெரியாத ஒரு குஞ்சு ‘அலை உள்ளான்’ கடலைக் கண்டாலே நடுநடுங்கித் தன் அம்மாவிடம் பதுங்கிக்கொள்கிறது.

தன்னுடைய அம்மா, இரையை எடுத்துவந்து ஊட்டிவிடும் என நினைத்து வாயைத் திறந்து பசியோடு காத்திருக்கிறது அந்தக் குஞ்சு. ஆனால், அம்மா ஊட்டிவிடுவதாக இல்லை. இரையைக் குஞ்சே தேட வேண்டும் என்று அம்மா நினைக்கிறது. இப்படி அம்மா-குஞ்சு பறவையிடயே நடக்கும் செல்ல சேட்டைகள்தான் ‘பைப்பர்’ என்ற அனிமேஷன் குறும்படம்.

குழந்தைகள் பயத்தை விட்டு ஒவ்வொரு செயலையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சுவாரசியமாகக் குஞ்சுப் பறவை மூலமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், குட்டி நண்டைப் பின்தொடர்ந்து செல்கிறது குஞ்சு. அப்படிப் போகும்போது அலை பாய்ந்து வருகிறது. அலையைப் பார்த்ததும், மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது குட்டி நண்டு. இதைப் பார்த்துத் தன் உடலையும் மணலில் புதைத்துக்கொள்கிறது குஞ்சுப் பறவை. ஆனால், பயத்தில் தன்னுடைய கண்களை இறுகப் பொத்திக்கொள்கிறது.

அப்போது அந்தப் பறவையின் அலகைத் தன்னுடைய கொடுக்கால் தட்டுகிறது நண்டு. கண்களைத் திறக்கும் பறவைக்கு நீருக்குள் இருக்கும் அழகு அற்புதக் காட்சியாகத் தெரிகிறது. அந்த நொடிப் பொழுதில் அதனிடமிருந்து பயம் விட்டு விலகிப்போகிறது. உடனே ஓடியாடி குதிக்கிறது. பெரிய அலை வந்தால்கூட தைரியமாகப் போய் இரையை எடுத்து வருகிறது குஞ்சு பறவை.

ஒரு விஷயம் தெரியாதவரைதான் பயம். அது என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டால் அச்சம் எல்லாம் போயே போச்சு என்பதை அழகாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை உங்களுக்குப் பார்க்க ஆசையா?

வழக்கமான அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் பறவைகள் பறவைகளாகவே நடந்துகொள்வதுதான் ‘பைப்பர்’ குறும்படத்தின் தனிச் சிறப்பு! சாண்டர்லிங்க்ஸ் என்றழைக்கப்படும் ‘அலை உள்ளான்’களின் இயல்பை ஆராய இப்படத்தின் குழுவினர் வாரக் கணக்கில் கலிபோர்னியாவின் கடற்கரைகளில் அப்பறவைகளைப் பின்தொடர்ந்தார்கள். அவற்றின் இயல்பை அருகிலேயே இருந்து கவனித்து அதற்குப் பிறகுதான் அனிமேஷன் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆலம் பரிலரோ மூன்றாண்டுகள் இப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்.

ம.சுசித்ரா in http://www.tamil.thehindu.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …” பட்டதாரி ” !!!

 

பட்டதாரி …
………..
பட்டங்கள் பலப் பல …வாங்கிய பட்டம் தேனாய் இனிக்கும் பட்டதாரிக்கு  வேலை
ஒன்று  கட்டாயம் கிடைத்தால் ! வேலை  இல்லாவிட்டால் “வேலையில்லா “
என்னும் ஒரு புதிய பட்டம் மட்டும் கிடைக்கும்  அந்த பட்டதாரிக்கு !
சட்டம் ஒன்றும் இல்லையே பட்டம் வாங்கினால் வேலை உண்டு என்று !
சட்டம்  படித்த  பட்டதாரிக்கே  வேலை இல்லையே இன்று !
“வேலையில்லா பட்டதாரி” என்னும் ஒரு  வட்டத்தில் சுழலாமல்
திட்டம் போட்டு தன்  கையே தனக்கு உதவி என ஒரு தொழில்
செய்ய நீ முனையும் நேரம்  “வேலையில்லா ” பட்டதாரி உன்
வாழ்வில் ஒரு நல்ல நேரமாக மாறும் !
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்  கவலை உனக்கு
இல்லை இனி என ஒத்துக்கொள் என்னும் ஆன்றோர்
வாக்கு  இன்றும்  பொய்யா வாக்குதான் ! மறவாதே இதை நீ
தம்பி ! உனக்கு ஒரு வேலை நீ தேடுவதை விடுத்து “செயலி “
எத்தனை  எத்தனை  “செயல் ” படுத்த முடியும் உன்னால்   என்று
சற்றே மாற்றி யோசி தம்பி ! மாறலாம் நீ  ஒரு தொழில் முனைவோனாக !
உன் கணினியும்  கைபேசியுமே  உனக்கு மூலதனம் ! உன் தொழில்
நுட்ப அறிவும்  , “செயலி ” உருவாக்கும்  திறனும் மாற்றும்
உன்னை,  நீ  பலருக்கு வேலை கொடுக்கும் தொழில் பட்டதாரியாக !
வேலை இல்லா  பட்டதாரி இல்லை இங்கு இனிமேல் என்னும் ஒரு
நாளை மலர செய்வதே இனி உன் வேலை ! மாற்றி யோசிக்கும்
யாருக்கும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் உண்டு கட்டாயம் !
Natarajan
8th nov 2016

மீனாட்சி அம்மாள்: சமையல் குறிப்புகளின் முன்னோடிக் கலைஞர்!

samayal_3062043f

இது என்ன அநியாயம்? சமையல் கலையைப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டுமா? சமையல், பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றுதானே நினைத்திருந்தோம். சமையல் தெரியாத பெண்களும் இருக்கிறார்களா என்று அதிர்ந்துபோனார்கள் அன்றைய மக்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பு வைத்து விளையாடும் பருவத்திலேயே சிறுமிகள், சமையலைக் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிச் சமையலைக் கற்றவரில் ஒருவர்தான் மீனாட்சி அம்மாள்.

19 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். தனியாளாகக் கைக்குழந்தை, மச்சினர், மாமியார் என்று குடும்பத்தைப் பராமரித்துவந்தவர், சமையலிலும் பிரமாதப் படுத்தினார். மீனாட்சி அம்மாளின் கைப்பக்குவத்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் பரவியிருந்த அவரது உறவினர்கள், மீனாட்சி அம்மாளிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சளைக்காமல் எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

இவரது உறவினர் கே.வி.கிருஷ்ண சாமி ஐயர், இப்படி ஒவ்வொருவருக்கும் சமையல் குறிப்பு எழுதிக் கொடுப்பதற்குப் பதில், ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் எல்லோருக்கும் பயன்படுமே என்று ஆலோசனை வழங்கினார். மீனாட்சி அம்மாளும் புத்தகம் எழுதினார். சமையல் புத்தகம் என்றதும் பலரும் இதை யார் வாங்கப்போகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். பதிப்பகங்கள் எதுவும் புத்தகம் வெளியிட முன்வரவில்லை. தானே புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தார் மீனாட்சி அம்மாள். தன் நகைகளை விற்றார். தானே புத்தகத்தைப் பதிப்பித்தார்.

1951-ம் ஆண்டு தமிழின் முன்னோடி சமையல் புத்தகம், ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது. புத்தகத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று மீனாட்சி அம்மாளே எதிர்பார்க்கவில்லை. புத்தகம் குறித்துப் பலரும் சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர். விற்பனை பெருகியது. திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள், விசாவை மறந்தாலும் மீனாட்சி அம்மாள் புத்தகத்தை மறக்கவில்லை. ஐந்தே ஆண்டுகளில் தன் புத்தக வருமானத்தை வைத்து, மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாங்கினார் மீனாட்சி அம்மாள்.

மிளகாய்த் தூள், சாம்பார்ப் பொடி என்று சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்குவத்தில் வைத்திருப்பார்கள். அவற்றால் மீனாட்சி அம்மாளின் சுவையைக் கொடுக்க முடியாது. அதனால் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த புத்தகத்தைக் கொண்டுவந்தார். அதற்கும் அமோக வரவேற்பு! விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு எப்படித் தயாராவது, பண்டிகைக் கால உணவுகள் போன்ற பல விஷயங்களை வைத்து, அவர் மறைவுக்குப் பின்பு மூன்றாவது புத்தகம் வெளிவந்தது.

அதற்குப் பிறகு சமையல் புத்தகங்களைப் பலரும் எழுத ஆரம்பித்தனர். விதவிதமான சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. சைவச் சமையல், அசைவச் சமையல், வட்டாரச் சமையல், கிராமத்துச் சமையல், மாநிலச் சமையல், அயல்நாட்டுச் சமையல், மைக்ரோவேவ் சமையல், சிறுதானியச் சமையல் என்றெல்லாம் தினுசு தினுசாக உணவு வகைகள் உருவாகிக்கொண்டும், புத்தகங்கள் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.

இன்றளவும் ‘சமையல் புத்தகமா?’ என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்டாலும் விற்பனையில் முதலிடம் சமையல் புத்தகங்களுக்குத்தான். சமையல் குறிப்புகளை இணைப்புப் புத்தகங்களாக வழங்கும்போது பத்திரிகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதால் சமையலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் என்று சமையல் கலை அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துவருகிறது. அதே போல மீனாட்சி அம்மாளின் புத்தகங்களும் மாற்றத்தை ஏற்று, நவீனமாகிக்கொண்டே வருகின்றன.

மீனாட்சி அம்மாள் காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ப அளவுகளை அவர் கொடுத்திருக்கிறார். கொட்டைப் பாக்கு அளவு புளி, குழிக் கரண்டி எண்ணெய், ஓர் ஆழாக்கு அரிசி போன்ற பதங்கள் எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான அளவுகள், தற்காலத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி, புத்தகங்களை நவீனப்படுத்தி, கொண்டுவந்திருக்கிறார் அவரது பேத்தி ப்ரியா ராம்குமார்.

“சமைத்துப் பார் ஆங்கிலத்தில் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் புத்தகங்கள் கொண்டுவந்தோம். நாங்கள் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூலமாகவே 65 ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இதுவரை 45 பதிப்புகளைக் கண்டுவிட்டன. அடுத்து மின்புத்தகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் ப்ரியா ராம்குமார்.

“சித்திரம், சிற்பம், சங்கீதம் போல சமையலும் உயரிய கலை. பல வண்ணங்களைக் குழைத்து, அற்புதமான சித்திரத்தைத் தீட்டுவது போல பல பொருட்களைச் சேர்த்து, பக்குவப்படுத்தி, ஒப்பற்ற உணவுப் பண்டத்தை உருவாக்குகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்” என்று சொன்ன மீனாட்சி அம்மாள், சமையல் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராwகவும் வெற்றி பெற்று, பிறருக்கும் வழிகாட்டியிருக்கிறார்.

மனிதர்களுக்குப் பசியும் ருசிக்கான தேடுதலும் இருக்கும் வரை சமையல் கலைக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டுவரும் மீனாட்சி அம்மாளின் புத்தகங்கள், இன்னும் பல தலைமுறை களுக்குச் சமையல் கலையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்!

Source….S.Sujatha…in http://www.tamil.thehindu.com

Natarajan