ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?
பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்.
பிச்சக்காரன்: ‘பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்’ என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்
.
ஒருத்தன்: பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சக்காரன்: அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..
“தலைவரே என்ன யோசனை…?”
“மெட்ரோ ரயிலை மறியல் பண்ண முடியுமா…முடியாதா…?”
“தலை எல்லாம் பாரமா இருக்கு… காது ரெண்டும் அடைக்குது டாக்டர்…!!”
“மொதல்ல உங்க ஹெல்மெட்டைக் கழட்டிட்டுப் பேசுங்க…!!
டாக்டர் : உங்க மாமாவுக்கு, உடல் எடை குறைய ஒருமாதம் நடக்கணும்னு சொன்னேனே, இப்ப எப்படி இருக்காரு?
மற்றவர்: இப்போ தான் திருச்சி பக்கமா நடந்து போய்க்கிட்டிருக்கேன்னு ஃபோன் பண்ணிச் சொல்றாரு சார்..!
ஒருவர்: எவ்வளவுதான் விலைவாசி உயர்ந்தாலும் “சீப்’பாத்தான் வியாபாரம் செய்வேன்னு சொல்றீங்களே… நஷ்டம் வராதா..?
மற்றவர்: நான் செய்யறது வாழைப்பழ வியாபாரம்..!
வெள்ளிக்கிழமை
என் அம்மா வெள்ளிக் கிழமை மட்டும்தான் வறுவல் பண்ணுவாங்க!
ஏன் அப்படி?
அன்னைக்குத் தானே “ஃப்ரை” டே!”
Source….input from a friend of mine
Natarajan