வாரம் ஒரு கவிதை….” ஓலைச்சுவடி முதல் …”

 

ஓலைச்சுவடி  முதல் ….
————————
செய்தி கொண்டு சென்ற ஓலை
குடவோலையாகவும் மாறி வாக்கு
சீட்டு தேர்தலுக்கும்   போட்டு விட்டது
அச்சாரம் அன்றே !
எண்ணத்தில் உதித்த முத்துக்கள்
அத்தனையும் எழுத்தில் வடிக்க
ஒரு ஓலையைத்தான் நாடி  ஓடினான்
அன்றைய  மனிதன் !
அன்றைய மனிதன்  வடித்த எண்ணற்ற
காவியம், செய்தி,  அத்தனையும் தன் சுவடியில்
தேக்கி வைத்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்கு அப்பாலும்
இன்றைய மனிதன் படிக்க அவனுக்கு கிடைத்த
ஒரு இணையில்லா இணையதளம் அந்த ஓலைச்சுவடி!
மெய்ஞ்ஞானம் முதல் இன்றைய விண்வெளி
விஞ்ஞானம் வரை ஓலைச்சுவடியில் சுவடியில் இல்லாத
செய்தி என்று ஒன்று இல்லையே !
இன்று நம் வாழ்வில் இரண்டறக் கலந்து  விட்ட இணையதளம்
நம் கேள்விக்கு எல்லாம் சொல்லுது பதில் !…ஆனால்
நமக்கு இன்னும் தெரியாத  கேள்விக்கும் புரியாத  புதிருக்கும்
கூட பதில் இருக்குதே ஓலைச்சுவடியில் !
ஒருவேளை அன்றைய ஓலைச்சுவடிதான் உலகின்
முதல் இணையதளமா  ? எது  எப்படியோ
ஓலைச்சுவடி முதல் இன்றைய இணையதளம் வரை
தொடருது தகவல்  பரிமாற்றம் என்னும் ஒரு நல்ல தொடர் கதை !
Natarajan …..in http://www.dinamani.com dated 3rd July 2017

2 thoughts on “வாரம் ஒரு கவிதை….” ஓலைச்சுவடி முதல் …”

  1. M Ramakrishnan's avatar M Ramakrishnan July 4, 2017 / 5:18 pm

    super reality. keep it up.

  2. Natarajan's avatar natarajan July 5, 2017 / 11:55 am

    Thanks for your feedback…Sir

Leave a reply to natarajan Cancel reply