படித்து ரசித்தது ….இழப்பின் மறுபக்கம் !!!!!

SOURCE::::UNKNOWN… an wonderful conversation between GOD and a person ..what an apt reply from GOD to the appeal of the person….That is why it is said..”count your blessings and not the troubles”!!!!!

Input recd. from one of my contacts …worth sharing with you all…

Natarajan

இழந்ததெல்லாம் திரும்பத் தா
இறைவா!

இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன்

இழந்த தெவை என இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன்,கணக்கில்லை

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா
இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்

கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்

காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்

காணாமல் போனாளே அவளை இழந்தேன்

வயதாக ஆக உடல் நலமிழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்

இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

இறைவா !!!!!!

மகாபெரியவா சொன்னது …மாமர தத்துவம் …..

* பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழிவழியாக பல மரங்கள் வளரும். இதைப்போலவே உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நல்லவர்களாகவும், இறைபக்தி கொண்டு முழுமையடைந்தவர்களாகவும் இருப்பதில்லை. ஏதாவது, ஒருசிலர்தான் அத்தகைய மேன்மையான நிலையை அடைகிறார்கள். இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு விதையால் பல மாமரங்கள் உருவாவதைப்போல, அந்த ஒருவரால், பல நல்ல ஆன்மா உடையவர்கள் உருவாவார்கள்.

* உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் ஒருவர் அடையும் நன்மையும் அனைவருக்கும் கிடைத்ததாகிறது.

soure:::: “Dinamalar”… Tamil Daily..

மகாபெரியவா சொன்னது…..எது சிறந்த ஆசீர்வாதம் ?

source:::: input recd from one of my friends who is a staunch devotee of Mahaperiavaa…. being shared with you all…

Natarajan

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி பெரியவாளிடம் வந்து, ” என் பையன் காலேஜுக்குப் போய் விட்டு திரும்பும் போது, மின் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். என்ன பாபம் பண்ணினானோ தெரியலை! அவன் அல்பாயுசுல போய்விட்டதனால பேயா, பிசாசா அவன் அலையக் கூடாது.அதற்கு ஏதாவது ஹோமம், பரிகாரம் செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்றாங்க. பெரியவா என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்யணும்னு நான் ஆசைப்படறேன். பெரியவா ஏதாவது சொல்லணும்”னு சொல்லிவிட்டு அழுதாள்.
பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, “அழாதே அம்மா !

உங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யற குடியானவ ஜனங்களுக்கு வெயிலில் குடிக்க மோர் குடு, உன் பிள்ளை நல்ல கதிக்குப் போயிடுவான்,ஹோமம், பரிகாரம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்றார். இதமான அறிவுரை இது என்று கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போயினர். வயிறு குளிர்ந்து வாழ்த்துவது ஒன்றுதான் மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரிந்தது.

படித்ததில் ரசித்தது ….ஆன்மிக சிந்தனை …..

source:::: ” Dinamalar”….Tamil daily…மஹா பெரியவாவின் ஆன்மிக அறிவுரை ….

Natarajan

1..மனநிறைவே தரமான வாழ்க்கை……

* அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான்.
* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், அசையான ஸ்தாணு பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான்.
* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் தூண்டுகிறது.
* மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம்.
* அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்தமாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் பிசகு.
* ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.
* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.
* எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடி யும் …..

2..எல்லா ஊரிலும் செல்லுபடியாகும் பணம் …..

நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.

நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்’ இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.

இது தெரியுமா உங்களுக்கு … நம் .தலையில் குட்டு ஏன்? …விநாயகர் முன் ..

இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகப் பெருமானே எழுதி அருள் செய்தார்.

“அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே’ என்று இவர் முன் நின்றவுடன் தலையில் குட்டிக்கொள்வது மரபு. ஏன் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும் என்பதற்கு புராணக்கதை ஒன்று உள்ளது.ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் கையுமாக வந்து கொண்டிருந்தார். அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஓடிவந்தது. காகம் தட்டியதும் விரிந்து பரந்து ஓடியதால் “காவிரி’ என்ற பெயர் அந்நதிக்கு உண்டானது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் திரும்பிப் பார்த்தார்.அதைக்காணவில்லை. காகம் நின்ற இடத்தில் “கொழு கொழு’ என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் தான் தொப்பைக் கணபதி. செய்வதையும் செய்துவிட்டு முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். ஆனால், அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றான். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்

source::::: “DINA MALAR ” TAMIL DAILY.

இது தெரியுமா உங்களுக்கு … வேப்ப மரம் பிறந்த கதை !!!!

SOURCE:::: “Dina Malar”…Tamil Daily…

Natarajan

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.
வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

Do You Know ?….History Behind the “QWERTY ” Keyboard layout

Source::::GOOGLE SEARCH…

Have you ever wondered as to why the keyboard is arranged in this particular fashion? I was curios and found the following reason. The layout is called the QWERTY layout, the first 6 letters of this layout make up Q W E R T Y and hence the name.

Natarajan

Fascinating facts about the invention of the “QWERTY” Keyboard by Christopher Latham Sholes in 1875.
QWERTY KEYBOARD AT A GLANCE:

In 1875, Christopher Sholes with assistance from Amos Densmore rearranged the typewriter keyboard so that the commonest letters were not so close together and the type bars would come from opposite directions. Thus they would not clash together and jam the machine. The new arrangement was the “QWERTY” arrangement that typists use even today.

Invention: “QWERTY” keyboard

Function: name / QWER·TY
Definition: A standard typewriter keyboard — called also QWERTY keyboard . Name derived from the first six letters in the second row on English language computer and typewriter keyboards.
Patent: 207,559 (US) issued August 27, 1878
Inventor: Christopher Latham Sholes

Criteria; First practical.
Birth: February 14, 1819 in Mooresburg, Pennsylvania
Death: February 17, 1890 in Milwaukee, Wisconsin
Nationality: American
Milestones:
1868 Christopher Sholes, Carlos Glidden and Samuel Soule patent type writing machine
1873 Remington & Sons mass produces the Sholes & Glidden typewriter
1875 Sholes and Amos Densmore redesign keyboard layout
1878 Sholes awarded patent for QWERTY keyboard improvement.
CAPS: Sholes, Christopher Latham Sholes, Amos Densmore, James Densmore, QWERTY, ARY, qwerty, typewriter keyboard, computer keyboard, universal keyboard, qwerty keyboard, SIP, history, biography, inventor, invention.

The Story:

Look at the keyboard of any standard typewriter or computer. “Q,W,E,R,T and Y” are the first six letters. Who decided on this arrangement of the letters? And why?
The first practical typewriter was patented in the United States in 1868 by Christopher Latham Sholes. His machine was known as the type-writer. It had a movable carriage, a lever for turning paper from line to line, and a keyboard on which the letters were arranged in alphabetical order.

But Sholes had a problem. On his first model, his “ABC” key arrangement caused the keys to jam when the typist worked quickly. Sholes didn’t know how to keep the keys from sticking, so his solution was to keep the typist from typing too fast.

He did this using a study of letter-pair frequency prepared by educator Amos Densmore, brother of James Densmore, who was Sholes’ chief financial backer. The QWERTY keyboard itself was determined by the existing mechanical linkages of the typebars inside the machine to the keys on the outside. Sholes’ solution did not eliminate the problem completely, but it was greatly reduced.
.
The keyboard arrangement was considered important enough to be included on Sholes’ patent granted in 1878, some years after the machine was into production. QWERTY’s effect, by reducing those annoying clashes, was to speed up typing rather than slow it down.
The new arrangement was the “QWERTY” arrangement that typists use today. Of course, Sholes claimed that the new arrangement was scientific and would add speed and efficiency. The only efficiency it added was to slow the typist down, since almost any word in the English language required the typist’s fingers to cover more distance on the keyboard.
The advantages of the typewriter outweighed the disadvantages of the keyboard. Typists memorized the crazy letter arrangement, and the typewriter became a huge success.

இது தெரியுமா உங்களுக்கு ?….3

Source:::: “DINA MALAR”…Tamil daily…

Natarajan

ஸ்வாமி நிவேதனம் …வெற்றிலை , பாக்கு ஏன் அவசியம் ?

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள். வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

கோயிலுக்கு கிளம்பும் முன் இதை வாசியுங்க!

கோயிலில் மூலவருக்கோ, பிரகாரத்திலுள்ள மற்ற சுவாமிகளுக்கோ அபிஷேகம் செய்யும் போது உட்பிரகாரத்தில் வலம் வருவது கூடாது. அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி நாளில் வில்வ இலைகளைப் பறிக்கக்கூடாது. அங்கவஸ்திரம், துண்டு ஆகியவற்றை தோளில் இருந்து எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். கொடி மரம், நந்தி, பலிபீடம், கோபுரம் நிழல்களை மிதிப்பது கூடாது. நந்திக்கு குறுக்கே செல்லக்கூடாது. பிரகாரத்தை வலம் இடமாகச் சுற்றிக் கொண்டு போகக் கூடாது. கோயிலுக்குள் வீண்கதைகளையோ, தகாத வார்த்தைகளையோ பேசக்கூடாது. கோயிலுக்குள் தூங்குவது கூடாது. விளக்கில்லாத போதோ, திரையிட்டிருக்கும் போது தெய்வங்களை வணங்குவது கூடாது. கோயிலுக்குச் சென்று திரும்பியதும் கால் கழுவக் கூடாது. சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி முன்பு அமைதியாக வணங்க வேண்டும். கைதட்டுதல், நூலைப் போடுதல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.

இது உங்களுக்கு தெரியுமா ? ….2

SOURCE:::::” DINA MALAR “…TAMIL DAILY…

Natarajan

சிவபூஜையில் கரடி’ என்பதன் பொருள் என்ன?

சிலருக்கு நல்லதே பிடிக்காது. நாலுபேர் மகிழ்ச்சியாய்ப் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் வகையில் ஒருவர் வலிய சண்டைக்கு வருவார். இந்தச் சூழலில் அவர் கரடிக்குச் சமமானவர். ஏன் கரடியை மட்டும் குறிப்பிடுகிறார்கள் என்றால் கொடிய மிருகங்களாகிய சிங்கமும், புலியும் தமது இரையைத் தாமே போரிட்டுக் கொன்று தின்னும் சிறப்புடையது. கரடி அப்படி கிடையாது. பிற மிருகங்கள் இரை உண்ணும்போது அவற்றை விரட்டி விட்டு தின்னும் குணமுள்ளது. பசி அடங்கி விட்டால் சிங்கமும், புலியும் யாரையும் தொந்தரவு செய்யாது. ஆனால், கரடி எந்த நேரத்திலும் கொடூரமாக உயிர்களைத் துன்புறுத்தும். சிவபூஜை செய்பவர்கள் தம்மைச் சுற்றி எது நடந்தாலும் கவலைப்படாமல் பூஜையிலேயே கவனமாக இருப்பார்கள். சிங்கம் புலியைக் கூடக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவற்றால் உயிருக்கு மட்டும் தானே ஆபத்து என்று கவலையில்லாமல் இருப்பார்கள். ஆனால், கொடூரகுணம் கொண்ட கரடி பூஜை செய்யும் சூழலையே கெடுத்து, விக்ரஹங்களையும் சேதப்படுத்திவிடுமே என்று அஞ்சுவார்கள். எதிரிகளைச் சமாளிப்பது வேறு. அசிகைப் பிடித்தவர்களை சமாளிப்பது என்பது வேறு. இரண்டாவதாகக் கூறப்படுபவர்கள் எங்கு வந்தாலும் சிவபூஜையில் கரடி தான்.

எல்லாம் அவன் செயல் !!!!

ராமானுஜரின் சீடரான எம்பார் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து, காலட்சேபம் செய்து கொண்டிந்தார். பல பக்தர்கள் தினமும் வந்து கேட்பார்கள். ஒருமுறை, காஞ்சிபுரத்தில் இருந்து வந்த சில பக்தர்கள் காலட்சேபத்தைக் கேட்டு ரசித்தனர்.
தங்கள் ஊரில் நிரந்தரமாகத் தங்கி காலட்சேபம் நடத்த கேட்டுக்கொண்டனர். எம்பார் மறுத்து விட்டார். அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் திரும்பத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்து அவரைக் காஞ்சிபுரம் வரும்படி வற்புறுத்தியபடியே இருந்தார். பல ஆண்டுகளாக மறுத்துவிட்ட எம்பாருக்கு திடீரென காஞ்சிபுரம் போகும் எண்ணம் தோன்றியது. கிளம்பி விட்டார். அங்கே ஓரிடத்தில் தங்கி காலட்சேபம் செய்தார். அவரிடம் கூட்டத்தினர்,””இங்கே வர மறுத்தீர்களே! இப்போது எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
எம்பார் அவர்களிடம், “”இதோ! இந்த பக்தர் தொடர்ந்து ஸ்ரீரங்கம் வந்து என்னை அழைத்ததால் தான் நான் இங்கு வந்தேன் என்று நினைப்பவர்கள் கையைத் தூக்குங்கள்,” என்றார். ஒரு சிலர் கை தூக்கினர். அடுத்து, “”நானாகவே மனம் மாறி வந்தேன் என்று நினைப்பவர்கள் கை தூக்குங்கள்,” என்றார். அதற்கும் சிலர் கை தூக்கினர். இப்படியாக வந்திருந்தவர்கள் அனைவரும் கை தூக்கியாயிற்று. கை தூக்காதவர் எம்பார் மட்டுமே. “”நீங்கள் நினைப்பது போல் இல்லை. அந்த பக்தர் கூப்பிட்டதாலும் வரவில்லை, நானாகவும் வரவில்லை. பகவான் நினைத்தான், அதனால் வந்தேன், எல்லாம் அவன் செயல்,” என்றார்.

இது உங்களுக்கு தெரியுமா ?

SOURCE:::: ” DINAMALAR ” TAMIL DAILY…….

Natarajan

இறைவழிபாட்டில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிப்பது ஏன் தெரியுமா?

வாழைப்பழம், தேங்காய் ஆகிய இரண்டுமே நம்முடைய எச்சில் படாதவை ஆகும். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டையை ஊன்றினால் முளைக்கும்.ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியில்லாத நிலையான முக்தியை குறிக்கிறது. இறைவனிடம் நமக்கு மீண்டும் பிறவாத நிலைவேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி வாழைப்பழம் படைக்கப்படுகிறது. வாழைக்கன்று மரமாகி, அந்த மரத்திலிருந்து வாழைப்பழம் கிடைக்கிறது. அதே போலத்தான் தேங்காயும், தேங்காயை சாப்பிட்டுவிட்டு தேங்காய் ஓட்டை போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னை மரம் முளைக்கும். இப்படி எச்சில் படாத, மீதமாகாத பொருளான வாழைப்பழம், தேங்காயை இறைவனுக்கு படைத்து அவனது அருளைப்பெறும்படி முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர் ….