காஞ்சி பெரியவா –நம்மிடையே நடமாடிய கடவுள்

காஞ்சி பரமாச்சாரியார்

காஞ்சி பரமாச்சாரியாரின் அடியார்களில் ஒருவர் ஒருமுறை கல்கத்தாவைச் சேர்ந்த
சேட்டு ஒருவரை அவரிடம் கூட்டிவந்தார்.
அந்த சேட் மிகவும் வசதிபடைத்தவர். பக்தியும் பணிவும் கொண்டவர்.
அவருக்குக் கடுமையான நோயொன்று சிரமம் கொடுத்தது. இரைப்பைக்கு மேலேயுள்ள உணவுக்குழாயின் இயக்கத்தில் பாதிப்பு. அதன் விளைவாக உணவை வயிற்றில் துவாரம் போட்டு
அதன்மூலம் உணவு செலுத்தப்பட்டு வந்தது.
இருப்பினும் அதையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தார். எந்த விதமான வைத்தியமோ, கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனையோ, மாந்திரீகமோ எதுவுமே அவருக்குப் பலிக்கவில்லை.
அவர் பரமாச்சாரியாரைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே அவரைப் பார்க்க அழைத்துச்செல்லுமாறு அவருடைய நண்பராகிய அடியாரை வற்புறுத்தினார்.
பரமாச்சாரியாரிடம் சொன்னபோது அவர் முதலில் பார்க்க மறுத்துவிட்டார்.
அதனால் சொல்லாமல் கொள்ளாமல் அந்த அடியார் அந்த சேட்டை அழைத்துக்கொண்டுபோய் பரமாச்சாரியாரின் முன்னிலையில் நின்றார்.
அந்த அடியார் என்ன சொல்லியும் பரமாச்சாரியார் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.
இரவு வெகுநேரமாகிய பின்னர் அதைப் பற்றி பேசினார்.
ஆனால், இதற்கெல்லாம் ஒன்றும் செய்யமுடியாது; பக்தியுடன் இருந்து நல்ல காரியங்களை நிறையச்செய்யுமாறும் சொல்லிவிட்டார்
அடியார் விடவில்லை. எப்படியும் இதற்கெல்லாம் விமோசனம், பரிகாரம் இருந்துதான் ஆகவேண்டும் என்று பணிவுடன் வாதிட்டு பரமாச்சாரியரை மிகவும் உரிமையுடனும் நம்பிக்கையுடனும் வற்புறுத்தினார்.
சிறுது நேரம் மௌனமாக இருந்த பரமாச்சாரியார், அந்த சேட்டிடம் தாம் சொல்வதை அப்படியே செய்யுமாறு வாக்குறுதி கேட்டார்.
சேட் ஒத்துக்கொண்டார்.
இந்து சமயத்திலுள்ள பதினெட்டுப் புராணங்களையும் பதினெட்டுத் தனித்தனிப் புத்தகங்களாக சமஸ்கிருதத்தில் அச்சிட்டு, தகுதியுடையவர்களாகிய வேத நூல் படிப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று பரமாச்சாரியார் ஆணையிட்டார்.
பரமாச்சாரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சேட் அந்த நற்காரியத்தைத் தாம் செய்வதாக ஒத்துக்கொண்டார். பரமாச்சாரியர் அந்த சேட்டை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கச்செய்தார்.
கல்கத்தாவுக்குச் சென்ற சேட், தம்முடைய ஐந்து மாடிக்கட்டடத்தின் மேல்மாடி முழுவதையும் புராண வெளியீட்டிற்காக ஒதுக்கினார். பல சாஸ்திர விற்பன்னர்களை கூட்டுவித்தார். அவர்களின்மூலம் தரமான காகிதத்தில் சுத்தமாக அச்சிட்டுப் பெரிய பெரிய புத்தகங்களாக வெளியிட்டுக் கொடுத்தார்.
‘பக்தியே விலை’ என்றும் குறிப்பிடச் செய்தார், சேட்.
பதினேழு புராணங்கள் அச்சிடப்பட்டுவிட்டன.
ஆனால் சேட் வழக்கம்போல் குழாய்மூலமே உணவு செலுத்தப்பட்டு வந்தார்.
ஆனாலும்கூட சேட் அதைப் பற்றி கவலையும்படவில்லை. அவர்பாட்டுக்கு புராண வெளியீட்டை நம்பிக்கையுடன் ஒரு கர்மயோகமாகச் செய்தார்.
கடைசியாக ஸ்காந்த புராண வெளியீட்டு வேலை தொடங்கியது.
அவ்வளவுதான்.
திடீரென்று ஒருநாள் சேட் சாப்பாட்டை வாயால் மென்று விழுங்கி சாப்பிடத் துவங்கினார்.
நன்றாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்.
அதுவரை தீராமல் இருந்த நோய் பரமாச்சாரியார் பேரருளால் நீங்கியது.
பரமாச்சாரியாரைப் போய்ப் பார்த்து விபரத்தைச் சொன்னார்கள்.
பரமாச்சாரியரின் ஆற்றலை வியந்து அவர் தந்த வரத்தால் சேட்டின் நோய் நீங்கிப் பிழைத்துக் கொண்டதாக அந்த அடியார் சொல்லி, ‘பரமாச்சாரியார்தான் கடவுள’் என்றும் சொன்னார்.
ஆனால் பரமாச்சாரியாரோ ரொம்பவும் ‘கூலாக’ச் சொல்லியிருக்கிறார்.
“நம்ம நாட்டோட தர்ம சாஸ்திரங்களோட சக்தியல்லவா அவரக் காப்பாத்தியிருக்கு?”


நடராசன்
—

கணிப்பொறியா இல்லை கம்பன் வீட்டு கட்டு தறியா?

“”” பாட்டொன்று  கேட்டால்  நான்  என்ன பாரதியா கேட்டவுடன்  பட்டென்று  ஒரு பாட்டு எழுத !!!

பாட்டுக்கு  ஒரு பாரதி —நல்ல கவிதைக்கு ஒரு கம்பன் –அந்த  கம்பன்

வீட்டுக் கட்டு  தறியும்  கவி  பாடுமாம்!!!!!!   ——என்னில்  ஒரு ஆசை

பாட்டு எழதும் ஆசை — விட்டேனா  பார் என்னும்  வேகம் !!!!

எடுத்தேன் ஒரு தாளை  !!! கொட்டினேன்  அதில் என்  பாட்டை!!!!!!

படித்து  படித்து ப்  பார்த்தேன் … தேன்  என  இனித்தது என் கவிதை !!!!!

விண்ணில்  பறந்தேன்  நான்  —- இந்த  மண்ணில் இல்லை  என்  கால் !!!!!!

நான்  செதுக்கிய  கவிதையை   பதுக்க  என்  கணிப்பொறி    நோக்கி ஓடினேன் !!!!!

கணிப்பொறி  உதவி நாடினேன்  என்  கவிதை பதுக்க—–

பதுக்க  வேண்டிய  கணிப்பொறி  என்னிடம்  கேட்டது —

இது  என்னப்பா கவிதை — எதுகை இல்லை -மோனை இல்லை- ஒரு

கவிதைக்கு  சொந்தம் சொல்ல   சந்தமும்   இல்லை !!!!

இது  ஓதுக்க   வேண்டிய கவிதை —பதுக்க முடியாத பாட்டு!!!!!—

இதை எடுத்துக்கொண்டு  நீ  உன்  நடையை  கட்டு !!!!!–

இது  என்  அருமை  கணிபொறியின்  தீர்ப்பு !!!!!

இது கவிதை  அது கவிதை என்னும்  இந்த புது கவிதை யுகத்தில்

இதுவா  கவிதை என்று கேட்கிறதே  என்  கணிப்பொறி ___

இது கணிப்பொறியா    இல்லை   கம்பன்  வீட்டு    கட்டுத்தறி யா !!!!!!!!!!!!!!!!!!!

நடராசன்

அந்தி மாலை பொழுது

” தாவு அலைகடல் உதித்த  இளங்கதிரோன்  முகில் 

மேவி வரும் மலையுநூடு மறைந்து விட –

மன்னனவன்  பிரிகின்ற துயரத்தால் மங்கை கமல (ம்)

முகம்  கூம்பி கடன் முடித்த கதிரவனுக்கு விடை   கொடுக்க 

உடன் வந்து பணியேற்கும் வெண்  மதியமதை –

குவிந்திருந்த குமுத  மலர் அமுதமது கண்டாற்போல்

பாவித்து தன் முக மலர்ந்து புன்னகைக்க

வெண்ணிலவு  தண்ணென்று காய்ந்ததுவே !!!!!! ”

 

நடராசன்

பூங்கொடி ….தமிழ் தாய் வாழ்த்து !!!!!!

பூ உலகில் கல் தோன்றி மண் தோன்றா  காலத்தே

நா உலகில் நன்குதித்த நற்றமிழே —மேவு புகழ்

நூலேந்தி கற்கும் நுவல் மொழிகள் நாயகியாய்

கோலேந்தி  நிற்கும் கொடி!!!!!!!

 

நடராசன்

 

 

என்னுடைய முதல் கவிதை !

நன்றி என்னுடைய தமிழ் ஆசிரியர் சிதம்பரம் சுவாமிநாதனுக்கு …நான்  பத்தாம் வகுப்பு  படிக்கும்போது அவர்  சொல்லிக்கொடுத்தபடி  எழதிய  முதல்  கவிதை

ஆட்டுக்கல்லில் ஆட்டி  நாம்  அதனை ஈட்டுகிறோம் அவித்தெடுத்து  இட்டிலியை

சட்டினியும் சாம்பாரும் சேர்த்து மட்டிலா மஹில்வுடன்  நாம் உண்ணும்  அந்த

இட்டிலிக்கு  உண்டோ இணை !!!!!!

 

நடராசன்

LAUGHTER THE BEST MEDICINE…..

Laughter relieves boredom, eases tension and brightens the atmosphere. Laughing at oneself is a good way to keep one’s ego in check. Yet `serious’ spiritual seekers tend to think that humour and spirituality are poles apart. This is far from the truth.

Evolved masters have a sense of humour, and they often use humour to drive home a point. Gurus like Kanchi Paramacharya, Ramana Maharshi, Swami Chinmaynanda and Swami Dayananda Saraswati sprinkled their talks liberally with humour.

Swami Chinmayananda was once scouting for a suitable venue in Chennai to hold his Geeta Gyana Yagna. Most temples, under the dominant influence of Brahmins, were reluctant to help out. Finally, one of his disciples rushed to him with the news that a Muslim was ready to make available his empty bungalow for the purpose. “But there is a problem,” said the disciple, “the house is believed to be haunted.” On hearing this, the Swami quipped: “What a wonderful opportunity! I’ve never seen a ghost in my life!”

Every morning, Ramana Maharshi would walk up the Arunachala hill. Once a stranger spotted him all alone, and wishing to have darshan, he walked faster and managed to overtake the Maharshi and stood in front of him, blocking his way. With folded palms he said “Swamiji, this is a great day for me. You have blessed me with your darshan.” The Maharshi responded: “This is really funny. What darshan you’re talking about? It is you who have come before me and given me your darshan.”

On another occasion a group of American devotees who were seated at a distance from Maharshi because of the crowd, asked him whether they could move forward so that Maharshi’s grace will be upon them. Maharshi replied that he has no objection to their moving forward but his grace was always there for everyone irrespective of proximity. The group, nonetheless, pushed forward and almost came near him. After some time the devotees requested Maharshi to place his palms on their head so that they can receive the grace in full measure. An amused Maharshi said: “next you might ask me to sign a bond and take me to court if you imagine that the grace has not worked!” The entire gathering burst into laughter.

While delivering a discourse on the Gita Swami Dayananda Saraswati narrated the following story: There were three terminally ill patients and the doctor asked them to express their last wish so that he could arrange to fulfill them. The first patient said that he would like to meet the priest and confess. The second said that he would like to meet his entire family. The doctor took care of the requests. He turned to the third patient who muttered: “I’d like to see another doctor.”

A scholar approached Kanchi Paramacharya and boasted that he was an expert on the Gita. The seer asked him if he could spare some time to hold a 10-day discourse at the local temple. The scholar assented. On the first day 50 people had come to hear him and the attendance dwindled on subsequent days. The scholar said to Paramacharya: “What sort of a town is this? No one seems to be interested in the Gita. On first day there was a crowd of 50, second day 25 and on the third day there were only two persons to listen to me!”

With a twinkle in his eye the seer remarked: “Why fret? When Krishna spoke the Gita there was only one person to listen to him!

ATHITHI BHOJANAM….WHICH PARAMACHARYA APPRRECIATED

Author: Sri S. Ramani Anna (in Tamil)
Source: Sakthi Vikatan issue dated Jan 18, 2007

It was the time when Kanchi Maha SwamigaL was staying in Kalavai, many
years before. It was a Sunday. A large crowd had gathered for darshan.
One by one the devotees prostrated to the sage, received his blessings
and moved away. A middle-aged couple prostrated to AcharyaL and stood
up with folded palms. Keenly looking at them, SwamigaL said, “adede…
who (is this)… Palur Gopalan! You came a year back. That time you
spoke about some problems. Aren’t you fine now?” and laughed.

That Palur Gopalan replied, “We are very fine Periyavaa. As directed
by you, from the time we started feeding an atithi in the noon time
everyday, only good things are happening, Periyavaa! Good harvest in
(my) fields. The cows don’t die as before! The money that dripped out
of hands without control for expenses stays in hands now. All that is
(due to) the greatness of the atithi bhojana you have asked us to do,
by your anugraha. I am doing it daily. Nothing else (is the reason for
the prosperity).” Tears filled his eyes as he spoke. His wife who was
standing by his side was also in tears of joy.

AcharyaL said, “besh, besh. It is fine if you have understood that
good things happen due to the act of atithi bhojana. Alright. Today
both of you have come over here. There in Palur–who will do the
atithi bhojana?” AcharyaL inquired worriedly. Gopalan’s wife replied
promptly, “We have made alternative arrangements for that Periyavaa.
atithi bhojana will not be missed even for a day.”

Maha SwamigaL was very happy to hear it. “That’s the way you should do
it. You must have a resolution to feed the hungry. Doing atithi
upacAra will give such an anugraha and safeguard the family! One day
[i]sAkSAt Parameshvara himself will come in the form of an atithi,
will sit and eat, you know that?”

SwamigaL was talking with kutUhala. To listen to these anugraha words,
the people standing in the queue surrounded him. He asked everyone to
sit down on the floor. The crowd of devotees sat down.

A devotee asked SwamigaL: “Is there such greatness in doing atithi
bhojana, Swamy?”

SwamigaL replied immediately. “Yes yes! It is a maha puNya dharma that
could lead to mokSa! It has benefited a number of people! Only when
you ask people like this Gopalan who have experienced it, they will
tell you. Such a lofty dharma is this one!”

A devotee got up and prostrated to the sage. He said with humility,
“My name is RamaSethu. Tiruvannamalai is my native place. We all pray
together to AcharyaL. We desire to listen more elaborately about the
greatness of this atithi bhojana in a way we can understand it.
Periyavaa should take mercy on us!”

SwamigaL asked him to be seated. The devotee complied. Everyone was
watching the walking God in silence. That parabrahmam started talking
after sometime.

“My memory is that it was (the year) thousand nine hundred and thirty-
eight or thirty-nine. SriSankara MaTham was doing its administration
from KummoNam (Kumbakonam). I am going to tell (you about) an incident
that happened at that time. If you listen to it devotedly, the
greatness that lies in this (incident) can be understood! I shall tell
you (now), listen (carefully).”

Swamigal stopped for a brief while and then continued: “There was a
large house on the western bank of the Kummonam Maamaanga (Mahamaha)
kulam. A grocer by name Kumaresan Chettiar was living in that house. I
remember very well… The name of his dharma patni was Sivakami Achi.
They belonged to Pallathur near Karaikudi. That couple had no
children. They had brought a dependable boy from their native place
and kept him with them for taking care of the grocery shop.

“At that time, the age of Kumaresan Chettiar was perhaps fifty or
fifty-five. That Achi’s (age was) perhaps within fifty. At all times
only the nama smaraNa ‘Shiva Shiva… Shiva Shiva’ would be issuing
out of the mouth of those two people. There was no other talk!
Chettiar had in his house a singlebullock cart. Seating Achi in the
cart, Chettiar himself would drive! Every day both them would arrive
in their cart at the banks of Kaveri to take bath.

Finishing (their) bath, they would come to our MaTham, prostrate,
receive the blessings and go back. They were such an intimate couple.
About them, I am going to tell (you now) something that will
overshadow all these, look (listen)!”

He took to silence to keep them in suspense for sometime. The devotees
were waiting with eager expectations. AcharyaL started speaking again:
“You know what work that couple had been doing for many years? To
serve and feed the atithis! Don’t be surprised! They would entertain
the Shiva disciples with food, every day at noon in the hall of their
house, without shrinking a face, whatever the number of disciples they
received as guest. They would seat the disciple in the thinnai at the
entrance (of their house), wash his feet with water, wipe with a
cloth, apply sandal paste and vermillion to them and lead them to the
hall and seat them there.

“They did not have any cook in their house! That amma would cook with
her own hands, whatever number be the guests of Shiva disciples!
Another important thing–if you ask what it is–is that they would
inquire from the Shiva disciples the details of the vegetables and
dishes they like, go and get them, cook and serve them! Such an
elevated mind! Do you think how SwamigaL knew about all these
things… There is no sort of secrecy about it. (One Sri) Sundaram
Iyer, who was close to the MaTham, was looking after the accounts of
Kumaresan Chettiar. Only he would tell me these things when he was
free. Understand now?”

AcharyaL stopped for sometime and relaxed. None of the seated moved an
inch. They were all looking with fixed eyes at Maha SwamigaL.

That walking God continued: “One day it was raining very well. (It
was) noon time. Kumaresan Chettiar came to the entrance (of his house)
and looked (here and there). No atithi was in sight! Holding an
umbrella, he descended the steps of the Mahamaham pond and surveyed
the scene. A Shiva disciple was seated after bath in a small building
there, wearing vibhUti (all over his body). Chettiar prayed to him and
brought him for dining (at his home). He seemed somewhat like a well-
read Shiva disciple. He came singing Thevaaram. Washing his feet,
Chettiar led him to his hall and seated him. The couple prostrated to
the Shiva disciple.

Chettiar’s dharma patni went to the disciple and asked, ‘What
vegetables are the favourite of Swamy? Please tell me, so I can go to
the shop, get and serve them after cooking.’ “It seemed that the Shiva
disciple was in good hunger. He got up and went to the backyard and
looked around. He saw sprouts of tender spinach there. He came inside,
called the mother and said that he needed nothing except the tender
spinach in koottu and their stems in sambar and that it would be
sufficient for him.

Chettiar went to pluck the spinach with a bamboo plate in his hand.
The rain had stopped by then. Since it was becoming late, the Shiva
disciple who was very hungry, decided to give a helping hand for
plucking the spinach, so he asked for a bamboo plate and went to the
backyard. “Sivakami Achi was standing at the backyard entrance,
watching the two men pluck the spinach. Both of them placed their
plates inside the house after enough spinach was plucked. You know
what that amma did immediately? She washed the two spinach plates
separately. She lit two furnaces, kept the spinach in two separate
pans on the furnaces and started cooking.

The Shiva disciple who was looking at her act was surprised! He was
confused: ‘What is this? Both the plates has the same spinach sprouts.
Without using a single vessel to cook them why this mother lights two
furnaces and cooks them separately?’

“After sometime, that amma took the pans out of the furnaces, took the
disciple’s spinach only to the puja room and offered it as nivedana to
Swami. The disciple who was watching it was pleased with immense
pride! Know what he had thought? He decided, ‘I am a big Shiva bhakta.
Sannyasi. So this mother has understood that Lord Shiva would accept
only the spinach I plucked and offers it as nivedana. Still I would
ask the mother herself after my meal about the offering.'”

Stopping here briefly, SwamigaL watched the devotees sitting opposite
him.

Nobody lowered a jaw. He continued: “The Shiva disciple, who had
finished his dining, asked that Achi about his doubt. You know what
reply did the Achi give? (She said ‘Ayya, when the spinach was plucked
in the backyard, I was watching. My husband chanted the name ‘Shiva
Shiva…’ and plucked the spinach. So it became ShivArpaNa then and
there. There was no need to offer it again. You plucked (the spinach)
without chanting any name. That is why, I lit a furnace, cooked your
spinach separately and offered it to the Lord.’ The disciple was
embarrassed to hear this.

The couple then prostrated to the disciple. He appreciated the Achi’s
bhakti and wisdom and started on his way. They were a couple who
served annam in such a way…”

AcharyaL stopped. The crowd of devotees was sitting with amazement.

Nobody lowered a jaw. SwamigaL continued: “You know what was the phala
prApti that was given to them for such incessant atithi bhojana? Some
years later, they celebrated their shashti apta pUrti (completion of
60 years of age). On a Maha Shivaratri day they sat for darshan of the
four sessions of puja in the Kumbeswarar temple. When they returned
home, that amma, who sat in the puja room complaining of exhaustion,
stretched out and breathed her last. Shocked, the Chettiar called her
by name and went inside, but he too fell down and breathed his last.
That was all. On that very day of Maha Shivaratri both of them
attained the Shiva sAyujya together. Did you see the position that
couple attained because of their act of incessant atithi bhojana?

Even now, on every Maha Shivaratri day, I would remember the couple.
They are the couple who served food in such a lofty manner.” AcharyaL
finished.

Tears seeped from the eyes of those who heard the story.

The walking God stood up and said, “Seems it is almost two o’ clock.
Everyone will be hungry. Go inside and dine well”, and bade them
farewell with compassion.

NANDRI MARANDHU VITTOM!!!!!!

Vanakkam…an interesting &at the sametime  A message with a clear Point to make,….  from my son senthil natarajan this morning… i am sharing with you with a request to share it inturn with your contacts pl.
Nandri..
–
Not in a literal sense, but we dont consider saying Nandri as polite and fashionable anymore… sayingThanks is considered more fashionable. Can we all start saying Nandri to start with…of all the people i shouldnt be saying this!!!!!… but I think we should start using simple Tamil words in our day to day life

This is what i have felt we should try and do
In the malls – speak to the staff in Tamil
Speak to relatives in Tamil not in English
Say Vanakkam and Nandri where and when possible

 

malarum ninaivugal…..

நினைவுகள்—சுஜாதாவின் ஒரு அருமையான கட்டுரை.
Hi All,
A very lovable piece.
Whenever I read Sujatha, I catch his ” Oh, This is Sujatha’s signet phrase.
Any guess what will be in this write-up?

சுஜாதாவின் ஒரு அருமையான கட்டுரை.
       பழைமை நினைவுகள்—சுஜாதாவின் ஒரு அருமையான கட்டுரை. 

  
சுஜாதாவின் ஒரு கட்டுரை.
 
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். 
“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ” என்றேன். “எதுக்குப்பா?” “தொடுங்களேன்!”  சற்று வியப்புடன் தொட்டார்.
“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!” என்றேன். ‘‘இதிலிருந்து
கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார். 
“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…” “இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார். “உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!” என்றேன். அசந்து போய், “கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?” “ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து
உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!”
என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே… அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. 
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். “ரம்யா கிருஷ்ணன்” என்றாள்.
இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள்
ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில்
அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் “ஜகதலப்ரதாபன்” சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது… இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்! 
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி’யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது. மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு
பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் “ஆபிச்சுவரி” பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை… நாம தப்பிச்சோம்!’
என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை… இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்… ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God! 
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல்
இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், “சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில் எங்கோ இருக்கிறது!”. 
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல… வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன். இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive
compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது). 
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்…
முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது. 
தி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில்
இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன். 
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்…
“நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே… என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?” என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்… “நாற்பது வருஷம் உங்களைத்
தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ அதேதான்!” என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க
வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த
சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். “ஆ” கதையைப் படித்துவிட்டு, “என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த
நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்! 
—

__._,_.___
RECENT ACTIVITY:

Yahoo! Groups

.

__,_._,___

hara hara sankara

Respected Friends,
Pleased to share an interesting forward from other group
———————————————-
பெரியவா எப்போதுமே மற்ற மதங்களை பற்றி விமர்சனம் பண்ணியது கிடையாது. அவரவர் மதக் கொள்கைகளில் அவரவருக்கு பிடிப்பு இருக்கவேண்டும் என்றுதான் சொல்லுவார். இந்த நிகழ்ச்சி இந்திய ஸ்வதந்த்ரத்துக்கு முன்னால் நடந்த மிக முக்யமான ஒன்று.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஸ்வதந்த்ரம் பற்றி விரிவான அறிக்கை தயார் பண்ண, ஒரு பார்லிமெண்டரி டெலிகே ஷனை இந்தியாவுக்கு அனுப்பியது. இதற்கு கிட்டத்தட்ட ஏழெட்டு மாசம் முன்பே பெரியவா அவருடைய பரம பக்தரும், பரம வைஷ்ணவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சார்யாரை “இந்தியாவில் மத விஷயங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது” என்பது பற்றி பல தந்திகள், கடிதங்கள் அரசுக்கும், பார்லிமெண்டரி டெலிகே ஷனுக்கும் அனுப்பச் சொல்லியிருந்தார். இவைகள் ஒன்றுக்குக் கூட பதில் வந்ததில்லை.

ஏழெட்டு மாசத்துக்கப்புறம் ஒருநாள் பெரியவா கும்பகோணம் பக்கத்தில் உள்ள மேலூரில் முகாம். அன்று வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், வந்திருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் வக்கீல்கள்!  பெரியவா அவர்களை ஒன்றாக அழைத்திருந்தார்.

“ஒங்களையெல்லாம் இங்க ஏன் வரச்சொன்னேன்னு தெரியுமோ?”

“பெரியவா சொன்னா தெரிஞ்சுக்கறோம்”

“நம்மளோடது எல்லாத்தையும், அதாவது சமுதாயத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு வக்கீல்களுக்குத்தான் இருக்கு. செய்வேளா?” எல்லாரும் உணர்ச்சிமயமானார்கள். பெரியவா சொல்லி ஏதாவது செய்ய முடியாமல்  போகுமா?

“வெறுமே செய்யறோம்..ன்னு சொன்னாப் போறாது. இதோ….எதிர்ல இருக்காரே சந்திரமௌலீஸ்வரர்! அவர் முன்னால சத்யப்ரமாணம் பண்ணுங்கோ..நிச்சியம் செய்யறதா!” எல்லோரும் அப்படியே ப்ரமாணம் பண்ணினார்கள். எதற்கு?

“ஒங்க எல்லாரோட முக்யமான கடமை என்ன தெரியுமா? நம்ம constitution ஐ நீங்கள்ளாந்தான் காப்பாத்தி ஆகணும்”

constitution ஆ? அப்படீன்னா? அப்படி ஒன்று இந்தியாவில் அப்போது இல்லவே இல்லையே! இல்லாத ஒண்ணை எங்கிருந்து காப்பாற்றுவது? இதுவரை கேள்விப்படாத வார்த்தை.

“நம்ம தேசத்துக்கு constitution ன்னு ஒண்ணு வரும். அதுல என்னென்ன சேக்கணும்…ன்னு பேச்சு வரும். அப்போ…நம்ம மதத்தை காப்பாத்த எதெதை சேக்கணுமோ, அதை இப்போவே யோஜிக்கணும். அதுல முக்யமான விஷயம் என்னன்னா……..அரசாங்கம், மதத்தை control பண்ற விஷயம் இருக்கப்டாது. மதம்..ங்கறது அவாவா நம்பிக்கைக்கு ஏத்தாமாதிரி நடக்கறதுதான். அதுல அரசாங்கம் நுழையவே …..ப்டாது! இந்த மதவிஷயம் ஜனங்களோட “fundamental right “ஆ……. வரணும். இதை constitution ல சேக்கறதா promise பண்ணுங்கோ!……”

வக்கீல்கள் திகைத்து நின்றனர். பெரியவாளுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோன்றுகிறது? எப்படி இத்தனை நுணுக்கமாக யோஜிக்கிறார்?

அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் எதேச்சையாக ஒருநாள் “ஹிந்து” ஆபீசுக்கு வந்தபோது, ஏகப்பட்ட கூட்டம். “பார்லிமெண்டரி டெலிகே ஷேன் இந்தியாவுக்கு வந்திருக்கு. இங்க ஆபீஸ்ல அவர்களுக்கு “டீ” பார்ட்டி” என்றார்கள். அக்னிஹோத்ரம் அந்த வாய்ப்பை நன்றாக உபயோகித்து அவர்களை பார்த்து பேசி, ஏழெட்டு மாசங்களாக தாம் அனுப்பிய லெட்டர்கள், தந்திகள் எல்லாவற்றையும் பற்றி சொன்னார். மத விஷயத்தில் அரசாங்க தலையீடு இருக்கக் கூடாது என்று சொன்னார்.

“இது ரொம்ப புரியாத பெரிய விஷயமாக இருக்கே! எங்களோட நாட்டிலேயே அரசாங்கம்தான் சர்ச்சுகளை நிர்வகிக்கிறது. நீங்கள் டெல்லிக்கு வந்து cabinet ஐ பார்த்து பேசுங்கள்” என்று சொன்னார்கள்.  பெரியவா சொன்ன விஷயம். மடமடவென நடந்தது. டெல்லிக்கு மடத்து சார்பாக போன அக்னிஹோத்ரம், சர்தார் வல்லபபாய் படேல் ஐ சந்தித்தார். “unity in divecity ” தான் பெரியவாளோட கருத்து. “மேலேழுந்தவாரியா எல்லாரும் பிரிஞ்சு இருக்கறா மாதிரி இருந்தாலும், ஆழமாப் பார்த்தால், எல்லாரும் ஒண்ணாத்தான் இருப்பா” என்ற பெரியவாளுடைய கருத்தை சொன்னதும், படேல் அதிர்ந்து விட்டார்!

“யார் அது? இப்பேர்ப்பட்ட எண்ணங்களைச் சொல்லும் மதத் தலைவர்? வக்கீலுக்கு படித்தவரா?   பெரியவாளைப் பற்றி சொன்னார். கடைசியில் constitution இல் சேர்க்கவேண்டி பெரியவாளிடம் நகலைக் கொண்டுவந்தார் அக்னிஹோத்ரம். பெரியவா சொன்னது இதுதான்……….

“EVERY RELIGION ‘S DENOMINATIONS OR ANY RELIGION THERE OF ” என்ற வாக்குதான். படேல் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். “ஒரு பெரிய சட்ட நிபுணரால் மட்டுமே இந்த மாற்றங்களைப் பண்ண முடியும். ஒரு மடாதிபதி இவ்வளவு விவரம் தெரிந்தவரா!”

பெரியவா சாக்ஷாத் சட்டநாதன் இல்லையா? இன்றும் Indian Constitution article 26 எடுத்துப் பார்த்தால், இந்த வார்த்தைகள் “ஆம். தெய்வத்தின் குரல்” அதில் இடம் பெற்றுள்ளது!

————————————————————–
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
Best regards……natarajan