காஞ்சி மஹா பெரியவாள் ஒரு முறை, தரிசனத்துக்கு வந்தவாளை பாத்து…..
“இப்போ இங்கேந்து போறானே, அவன் பேர் என்ன தெரியுமோ ? ஸ்ரீ கண்டன். ஆனா, அப்படிச் சொன்னா, சர்க்காருக்கு விரோதமா ஆயிடும்…..
ஏன்னா, இனிமே “ஸ்ரீ”ன்னு சொல்லபடாது, “திரு”ன்னு தான் சொல்லணும்னு சர்க்கார் உத்தரவு…..
ஸ்ரீன்னா, லக்ஷ்மி-ன்னு மட்டும் நெனச்சுண்டு, அத திருன்னு மாத்தறா….ஆனா, பாம்புன்னு ஒரு அர்த்தம் உண்டு, அதனால தான் ஸ்ரீகண்டன் ன்னு பேரு…
ஸ்ரீகண்டன்னா, லக்ஷ்மிய மார்ல வெச்சுண்டிருக்கற பெருமாள் இல்ல…. அத கழுத்துல போட்டுண்டு இருக்கும் சிவன் தான் …அது தெரியாம, ஸ்ரீன்னாலே லக்ஷ்மி தான்னு மாத்தீருக்கா….”
சற்று அமைதிக்குப் பின், சிரித்தபடி…..
“இவன் ஸ்ரீ கண்டனோ …. திருக்கண்டனோ தெரியாது….
ஆனா இவன் திருடன்…..”
சற்று இடைவெளி விட்டு…..
“இவன் மட்டுமில்லே, நீங்க எல்லாருமே திருடர்கள்…. [ ]
ஸ்ரீமான் ஸ்ரீநிவாசன் இப்படி எல்லாத்தையுமே, சீமான் சீனுவாசன்னு தானே தமிழ்ல சொல்றோம்? அப்போ, ஸ்ரீ – சி எல்லாம் ஒண்ணு தானே? அதனாலே நீங்கள்ளாம், என் சீடர்கள்….. அதாவது, திருடர்கள்…..”
source:::::input from a friend of mine…
Natarajan