“படிக்க …சிரிக்க …படிக்க ….சிரிக்க…” !!!

 

ஆசிரியர்: உன்னுடைய வயதில் ஜனாதிபதிகள் அனைவரின் பேரையும் வரிசை கிரமமாகச் சொல்வேன்.

மாணவன்: உங்கள் வயதில் அப்போது மூன்று நான்கு ஜனாதிபதிகள்தான் இருந்திருப்பார்கள் டீச்சர்!

******************************

தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்டார்: “”ஏன் லேட்?”

மாணவன்: வழியில் ஒரு தகவல் பலகை இருந்தது டீச்சர். அதில்…

இடையே குறுக்கிட்ட ஆசிரியர்: நீ லேட்டாக வர்ற அளவுக்கு அந்த பலகையில் என்ன எழுதியிருந்தது.

மாணவன்: பள்ளிக்கூடம் வருகிறது. மெதுவாகச் செல்!

******************************

புதிதாக சேர்ந்த வேலைக்கார பெண்ணிடம் வீட்டுக்காரி கேட்டாள்: “”மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு இன்று புதிதாக தண்ணீர் மாற்றினாயா?”

வேலைக்காரப் பெண்: “”இல்லையம்மா! நேற்று ஊற்றிய தண்ணீரையே அவை இன்னும் குடித்து முடிக்கவில்லையே!”

******************************

டிராபிக் போலிஸ்: மேடம்! நீங்கள் மணிக்கு 70 மைல் வேகத்தில் காரை ஓட்டி வந்திருக்கிறீர்கள்

பெண்: வாவ்! இது மிகவும் ஆச்சரியமில்லையா? நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதே நேற்றிலிருந்துதான்!

******************************

வீட்டுப் பெண்மணி: எப்போதும் எங்கள் வீட்டிற்கே வந்து பிச்சை எடுக்கிறாயே ஏன்?

பிச்சைக்காரன்: டாக்டர்தான் சொன்னார்

வீட்டுப் பெண்மணி: டாக்டர் என்ன சொன்னார்?

பிச்சைக்காரன்: உன்னுடைய உடல் நலனுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து சாப்பிடு என்றார்.

******************************

டாக்டர்: உங்கள் மனைவிக்கு “லோக்கல்’ அனஸ்தீஷியா கொடுக்கலாமா?

கணவன்: நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.

******************************

டாக்டர்: என்னிடம் வருவதற்கு முன் நீங்கள் வேறு டாக்டர் யாரிடமாவது சென்றீர்களா?

நோயாளி: இல்லை டாக்டர். இந்தத் தெருவில் உள்ள மருந்து கடைக்காரரிடம்தான் சென்றேன்.

டாக்டர்: அந்த மடையன் என்ன சொன்னான்?

நோயாளி: அவர்தான் உங்களிடம் போகச் சொன்னார்!

 

source::::Dinamani …TamilDaily  Blogsite

natarajan

Leave a comment