பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிதை எழுத வரும். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இங்கே அவருடைய இரு கவிதைகள்.
நமது
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்
என் உடலும் உள்ளமும் பொங்குகின்றது
“தரணேதர்’ திருவிழா.
எவரிடமும் கொடுக்க – வாங்க
பரிமாறிக்கொள்ள எதுவுமில்லை
எனது உனது என்பதும் இருந்ததில்லை
இவ்வுலகில் இருப்பவை யாவையுமே என்னை
மனம் நிறைந்து அகமகிழச் செய்கின்றன.
எனது பாதை நேரானது நெரிசலற்றது
குறுக்கு நெடுக்குகள் கொண்டதுமில்லை
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்
ஒரு மதமுமில்லை;
சம்பிரதாயமுமில்லை மனிதன் மனிதன்தான்
வெளிச்சத்தில் வேற்றுமையும் உண்டோ?
லாந்தலானால் என்ன அகலானால் என்ன?
நிலைத்த இடத்தில் தொங்கும் சரவிளக்கல்லவே
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்.
இப்படிப்பட்ட மனிதர்கள்
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டா இடத்தில் பேசுவர்
இப்படிப்பட்ட மனிதர்கள்
எடை வைக்கோல் ஒத்ததே.
குரலின் கண்களைத் திற
சொல்ல வேண்டியதை சொல்லிவிடு
கபட மௌனத்தின் ஆடம்பரத்தை
வட்டோடு சுட்டுவிடு.
ஒருபொழுதும் முகஸ்துதியின்
மடியில் அமரவேண்டாம்
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டாத இடத்தில் பேசுவர்
எவருடைய நிந்தனை சொற்களையும்
கேட்டு வாய் திறவாமல் அமர்வதும் பாபமாகும்.
உண்மை பேசி ஏற்றுக்கொள்பவன்
எல்லா தவறுகளிலிருந்தும் விடுபடுகிறான்.
காற்றின் அலைகளில் மரத்தின் கௌரவம்
இணைந்து ஆடுகிறது.
பண்டுகாலந்தொட்டு இயற்கையில் எதுவுமே
பொய் பேசியதில்லை.
தமிழாக்கம்: ராஜலக்ஷ்மி சீனுவாசன்
திசை எட்டும்’ மொழிபெயர்ப்பு காலாண்டிதழ் வெளியிட்ட குஜராத்தி சிறப்பிதழிலிருந்து…
Source:::: Dinamani Kadhir… Tamil Weekly
Natarajan
