“யாசகம்” … ஒரு புது கவிதை …

“யாசகம்”  … ‘வாசகர்  கவிதை’  கேட்பது  நம்ம கவிதை மணி
தினமணி …
யோசித்து  யோசித்து பார்த்தேன் … வாசகர்  ரசித்து வாசிக்க
ஒரு கவிதை கிடைக்குமா என்று…ஒரு சிறு பொறி தட்டியது !
மறு நிமிடம் என்னில் பிறந்தது  இந்த கவிதை !
பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காக  யாசிப்பது இல்லை
அது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு !
வளரும் குழந்தை தன் தந்தையிடமும்  எதுவும் யாசிப்பது இல்லை !
எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை தன்  குழந்தைக்கு
தருவது  பாசமும்  நேசமும் …!  ஒரு நல்ல
ஆசானும் தந்தையே அந்த குழந்தைக்கு !
யாசிக்கத் தேவை இன்றி வளர்ந்து விட்ட அந்த ” குழந்தை “யிடம்
இன்று யாசிப்பது யார் ?
வேறு யாருமில்லை… அந்த வளர்ந்த “குழந்தையின்”
பாசமிகு  தந்தை… இப்போ அந்த முதியவர் தன்  ” குழந்தையின்”
பாசத்தையும் , நேசத்தையும்  யாசிக்கிறார் …அவருக்கு இப்போ
அதுதானே தேவை ….
பணம், காசு   வேண்டி தன் கையேந்தவில்லை  அந்த பெரியவர் …
உங்க அன்பையும் , அரவணைப்பையும்  அள்ளி அள்ளி கொடுங்க ! 
SOURCE ….” யாசகம்”  என்னும் தலைப்பில்  தினமணி…  கவிதைமணி வாசகர் கவிதை  பகுதியில் வெளியான  என்  கவிதை
நடராஜன்

Leave a comment