பொன் விழா ஆண்டு…..பொன்னான நேரம்
===========================================
பிரியா விடை பெற்றோம் நாம் ஒரு நாள்
அடுத்தது என்ன என்னும் கேள்விக்கு விடை
தெரியாமலே !
கல்லூரி வாழ்க்கையில் சேர்ந்து படித்த
நண்பர்கள் முகம் மட்டும் நினைவில் !
ஒரு கருப்பு வெள்ளை புகைப்படமும் கையில்
நண்பரை நினைவு படுத்தும் பெயருடன் !
அவரவர் வாழ்க்கை …அவரவர் பயணம் !
பறந்து விட்டது அரை நூற்றாண்டு !ஆனால்
மறக்கவில்லை நாம் கல்லூரி நாட்களை
மறக்கவில்லை நாம் நம் நண்பர்களை !
மாறி விட்டோம் நாம் வாழ்க்கையின்
ஓட்டத்தில் … ஆனால் மாறவில்லை நாம்
நம் நட்புணர்வில் …அன்பு பரிமாற்றத்தில் !
மூன்று வருட நட்பு முப்பது நாற்பது ஆண்டு
அலுவல் நட்பையும் தள்ளி விட்டதே பின்னுக்கு !
மூன்று வருட நட்பு ஆண்டு ஐம்பதுக்குப் பின்னும்
அன்றலர்ந்த மலராக மலர்ந்து மணம் வீசுதே இன்னும் !
கல்லூரி கால நட்புக்கு இத்தனை சக்தியா !
எண்ணவில்லை நாம் அன்று …பொன்விழா ஆண்டில்
மீண்டும் சந்திப்போம் கோவையில் என்று !
வாழ்க்கையின் ஆரம்பத்தில் அன்று நாம்!
வாழ்வின் நிஜங்களை பார்த்து விட்டோம் இன்று நாம் !
நிழலாய் மனதில் இருந்த நம் நண்பர்கள் இன்று
நம் கண் முன்னே இன்று நிஜத்தில் !
நிழலுக்கும் நிஜத்துக்கும் மாற்றம் இருக்கலாம்
அது காலத்தின் கட்டாயம் !
நிஜம் இன்று நிழலை மனதில் இதமாக அசை
போடுது..! இனிய நினைவுடன் தொடரட்டும்
நம் நட்பு பயணம் ! நிஜத்தை நிழல்
தொடரட்டும் ! நிழலும் நிஜத்தின் மடியில்
இளைப்பாறட்டும் என்றென்றும் !
பொன்விழா சந்திப்பு வைர விழா
சந்திப்புக்கு நுழை வாயிலாக
அமையட்டும் ! சேர்ந்து நடப்போம்
இனிமேலும் சோர்ந்து போகாமல் …
வைர விழா சந்திப்பு நோக்கி!!!
K .நடராஜன்
Kavithai dedicated to our B.COM 1969 Batch Friends Golden Jubilee Meet on
23/02/2019 and 24/02 /2019 at Coimbatore .