இன்ஸ்டன்ட் கவிதை ….பிள்ளையாரப்பா !!!!!

தகப்பன் சாமிக்கு அண்ணனே என் அப்பன் பிள்ளையார்

அப்பனே ….அப்பமொடு அதிரசம் அவல் பொரியும்

உன் மனம் மகிழ மோதகமும் தப்பாமல் உனக்கு

நான் தருவேன் அப்பா …..

தப்பு என் மீது எது இருந்தாலும் …. நீ

தப்பாமல் என் வீடு வந்து அப்பமெல்லாம் சப்பு கொட்டி

சாப்பிடு அப்பா !!!!! என் அப்பனே பிள்ளையாரப்பா !!!!!!        pillayaru

A poetic welcome to Pillayar on this DAY of GANESH CHATURTHI….

Natarajan

இன்ஸ்டன்ட் கவிதை …..September Eleven…..

பாட்டு எடுத்து கொடுத்த பாரதியை நினைவு கூறும் நாள் இன்று …..

பதினொன்று செப்டம்பர் ….அவன் என்ன கோலி வுட் நடிகனா !!!!….இல்லை ..

வானமே எல்லை இனிமேல் எனக்கு முடிவே இல்லை என வசனம் பேசும்

நம்ம ஊர் அரசியல் வாதிகளில் ஒருவனா ?

சும்மா அடிக்க முடியுமா நினைவு நாள் போஸ்டர் அவனுக்கு !!!!

நம்ம ஊரிலேய நம்மில் பலருக்கு 11 செப்டம்பர் என்றால்

அந்த பாரதி ஞாபகம் எங்கே அய்யா வருது!!!!……இடையில்

வந்து மறைந்த இரட்டை கோபுரம்தானே நம் மனதை வருத்துது……

Natarajan.

இன்ஸ்டன்ட் கவிதை ….4…..சொந்த ஊர் !!!!!

நமக்கு சொந்தமான ஊர் எது ????

“சொந்த ஊர் !!! சொந்த ஊர் !!!! என்று எந்த ஊரை சொல்லுகிறோம்

நாம் ???….நாம் பிறந்த ஊரையா !!! வளர்ந்த ஊரையா !!!!…இல்லை

நாம் பிழைக்க வந்த ஊரையா ???

பிறந்து வளர்ந்த ஊர் பாதி மறந்து விட்டது நம்மில் பலருக்கு !!!!

மீதியும் மறக்காமல் இருக்க பாஸ்போர்ட் இல் இருக்கவே இருக்கு

பிறந்த ஊர் பெயர் !!!!!

சிந்தித்து பார்த்தால் அம்மாவின் கருவூர் மட்டுமே நமக்கு சொந்தமான ஊர்!!!!

பந்தமும் சொந்தமும் கூட இருந்தால் மற்ற எந்த ஊரும் சொந்த ஊர் போலதான்!!!!!

சும்மாவா சொன்னார்கள் அன்று …… “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று !!!!

அன்று சொன்னதின் அர்த்தம் புரியுது அய்யா இன்று !!!!”

natarajan.

கவிதை பயணம் தொடர்கிறது !!!!!!

மதியம் போல் வெண்மை  பொதிய மலை தம்ழின் தன்மை

விதி முறையால் சட்டினியும் சாம்பாரும் சார சுவை அளிக்கும்

அந்த இட்டிலுக்கு உண்டோ  இணை  !!!!!!!

 

நடராசன்