முதல் முத்தம்
++++++++++++++
சுட்டெரிக்கும் வெயில் … அனல் பறக்கும் காற்று
தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் என் நகர மக்கள் !
வாடும் பயிர் பார்த்து வானம் பார்த்தான் விவசாயி
அன்று ! வறண்டு கிடைக்கும் குடிநீர் ஏரி கண்டு
கதி கலங்கி மிரண்டு கிடக்கிறான் நகரவாசி இன்று !
மிரட்டியது போதும் ! இயற்கை அன்னையே !
கரு மேகம் திரட்டி ஒரு கோடை மழை என் நகருக்கு
பெரு மழை யாய் பொழிந்து விடு அம்மா !
உன் அருள் மழை என் மண்ணை முத்தமிடும்
நேரம் நானும் என் மண்ணில் மண்டியிட்டு குனிந்து
என் மண்ணை முத்தமிடுவேன் ! என் நகர மண்ணுக்கு
நான் கொடுக்க இருக்கும் முதல் முத்தம் அதுவே !
சீக்கிரமே உன் அருள் மழை ஒரு பெரு மழையாய் மாறி
முத்தமிடவேண்டும் என் மண்ணை மாரி தாயே !
Natarajan.K