புறத்தோற்றம் ஒரு அளவுகோள் அல்ல !!!

[image]

மகான் கர்நாடாகாவில் 1979 – ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். பயணித்தப்பிறகு, மாலை நேரத்தில் ஓர் இடத்தில தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம்போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது, மகானை பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன் , குளிக்காத தோற்றத்தோடும் , படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களை போல் காட்சியளித்த அவர்களை பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானை பார்க்க வரும்போது குளித்துவிட்டு, சுத்தமான அடைகளை அணிந்துகொண்டு வரவேண்டாமோ?

மகானை வழங்கி எழுந்த அவர்களை கணிவுடன் பார்த்து, மகான் கேட்டார்,

“அத்யயனம் முடிந்தாகி விட்டதா?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

“ரிக்வேதம்” சொல்லுங்கள்” என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தை சொல்ல தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதை கேட்டு கொண்டிருந்தவர் – பிறகு அவராக கையமர்த்தியபின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

“எங்கிருந்து வருகிறீர்கள்?” – மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தை சொன்னார்கள் இளைஞர்கள்.

“அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?

“நடந்துதான் வந்தோம்”

“திரும்பி போகும்போது?

“நடந்துதான் போகவேண்டும்”

மகானை பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே கடந்து வந்து இருகிறார்கள்.

உடம்பில் அழுக்கு ஏன் சேராது?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளை கொடுத்து, உண்ண உணவு கொடுத்து அனுப்பினார், மகான்.

அவர்களை பற்றி தவறாக நினைத்துகொண்டிரு;த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவர்.

“மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது”, என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படி தெரியும்? டாக்டர் மெய்சிலிர்த்தார்…

source::::www.perivaa.proboards.com

Natarajan

Read more:http://www.periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3141#ixzz2FJUawOXb

Leave a comment