ரமண கீதை !!!!

பாரத கண்டம், இந்த உலக மக்களின் தெளிவுக்காக, எத்தனையோ மகான்களை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், ஞானியர் வரலாற்றுப் பேரேட்டில் உலகு முழுதும் தேடிப் பார்த்தாலும், அதிகம் பேசாதிருந்த ஒரு மகரிஷியைப் பற்றியே, அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறது ஆன்மிக உலகம். அவர், அருணாசல தீபமாய் இன்றும் ஜொலிக்கும் பகவான் ரமணர்.

அவரது விழிகள் வழியே பொங்கிப் பிரவகித்து வழிந்தோடும் கதிர் வெள்ளத்தில் நீராடிச் சிலிர்த்துப் போனார்கள், குடியரசுத் தலைவர்களும், சாம்ராஜ்ய இளவரசர்களும்.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனின் மகள் அருணாசல ஆசிரமத்துக்கு வந்தாள். ஓர் இரவு தங்கல். ஒரு பகல் பொழுது முழுக்க ரமணரை தரிசித்தாள். அவளும் கேள்வி கேட்கவில்லை. ரமணரும் பேசவில்லை. தன் வீடு திரும்பிய அந்தப் பெண் எழுதினாள்: ‘இயேசு கிறிஸ்துவின் போதனைகள், பகவான் ரமணரை தரிசித்த பின்பு புரிய ஆரம்பித்து விட்டது’ என்று.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

source …..RAMANA GEETHAI….DEEPAM …TAMIL BI MONTHLY
Natarajan

Leave a comment