இது சரியில்லை!
மும்பை வேதரக்ஷண அறக்கட்டளைக் குழுவினர் மஹாபெரியவா ஜயந்தியையும் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
சுப்ரமண்யம் என்ற பொறுப்பாளர் ஜயந்திக்குப் பின் பெரியவா தரிசனத்துக்குச் சென்றார்.
”இதோ பார் – இந்த நோட்டீஸை – இது நீங்கள் போட்டது இல்லை. வேறொரு சபையினர் போட்டது. இந்தமாதிரி நோட்டீஸ்களில் ஆதிசங்கரர் – வ்யாஸர் – ஆசார்யாள் படம் போடக்கூடாது. நோட்டீஸைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள், பின்னர் தெருவில் எறிவார்கள். காலால் மிதிப்பார்கள்; குப்பைத் தொட்டியில் போடுவார்கள்! இது சரியில்லைதானே?”
இந்த அறிவுரை ஒரு சுப்ரமண்யத்துக்கு மட்டுமில்லை – எல்லா சுப்ரமண்யன்களுக்கும்தான்! கல்யாணப் பத்திரிகையில் மிக அழகாக ஸ்வாமி படங்களைப் போடுகிறார்கள். கல்யாணத்துக்கு மறுநாள் இந்த ஸ்வாமிகள் எல்லாம் எந்த இடத்தில் பூஜிக்கப்படுவார்கள்?
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4104/advice#ixzz2QpS94JPq