“ரோஜாப்பூ இன்று குழந்தைகளுக்கு”….மகாபெரியவர் !!!

நாலைந்து கூடைகள் நல்ல ரோஜா மலர்கள் ஒரு தினம் ஸ்ரீமடத்தில் ஸமர்ப்பணமாயிற்று. ஸ்ரீசந்திர மெளளீச்வரர் பூஜா விமானம் அற்புதப் புஷ்பாலங்காரம் பெறும் எனப் பணியாளர்கள் எண்ணினர்.

அப்போது ஒரு பள்ளிக் குழந்தை கோஷ்டி வந்தது. அவர்களுக்குத் தரிசனம் அளித்த அருட் தாத்தா ரோஜாக் கூடைகளைக் கொண்டுவரப் பணித்தார்.

”இன்று என்ன, வழக்கமில்லா வழக்கமாகக் குழந்தைகளுக்குப் புஷ்ப விநியோகம்?” என்று பாரிஷதர்களுக்குப் புரியவில்லை.

குழந்தைகளின் வாயாலேயே அவர்களுக்கு குருநாதன் புரிய வைத்தார்.

“இன்னிக்கு என்ன விசேஷம்:” என்று அவற்றைக் கேட்டார்.

“நேருஜி பிறந்த நாள்” என்று அவை ஒருகுரலில் கூறின.

“அவருக்கு ரொம்பப் பிடிச்சது என்ன?”

“ரோஜாப்பூ, ரோஜாப்பூ!”

“ஒங்களுக்கெல்லாமும் அவர் ஞாபகமா இன்னிக்கு ரோஜாப்பூ!”

இப்படியாகத்தானே ‘குழந்தையும் தெய்வமும்’ என்ற வாக்குப்படி, பூஜைக்கு என எண்ணப்பட்ட மலர்களை அரும்புப் பருவத்தினருக்கு விநியோகித்தவர், அருள் பழுத்த கனியான ஸ்ரீசரணர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4947/maha-periyava-children-9/#ixzz2dQQwyZXF

Leave a comment