“அண்ணனுக்கும் ஆறு எழுத்து ” !!!!

அண்ணனுக்கும் ஆறெழுத்து :

முருகப்பெருமானுக்கு “சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, அவரின் அண்ணனான விநாயகருக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. “ஓம் வக்ர துண்டாய ஹும்’ என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப்பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.

அப்பா பிள்ளை :

தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகர் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.
1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4)தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5)இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6)தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7)இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8)பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.ஐந்து சுவாமி பூஜைபிள்ளையார்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில்விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

 

 

“ஓம்கார நாயகர்’:

“விநாயகர்’- என்ற பெயரிலேயே, வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர் என்ற பொருள் உள்ளது. வினைகளைக் களைபவர், வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை – வினைகளை – சோகங்களை – தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து, அவர்களுக்கு நிம்மதியை அளிப்பவர் என்பதே, விநாயகர் என்பதன் பொருள். தவிர விநாயகரின் உருவமே ஒரு விசித்திரத் தோற்றம் கொண்டது.யானையின் முகத்தை உடையவர். பொன்னிறத் தோற்றத்துடன் கூடிய மனித உடலில், தர்ப்பரி நூல் மார்பு, பேழை வயிறு. (மிகப்பெரிய பூதம் போன்ற வயிறு). துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகள். செந்தூரம் பூசிய முகம். சிலம்பு அணிந்த இரு கால்கள். இதுபோன்ற அனைத்து உருவங்களும் சேர்ந்ததே விநாயகப் பெருமானின் மொத்த வடிவம். விநாயகரின் உருவமே, ஒரு ஐக்கியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது “ஓம்கார ஒலி’ என்றால், அநத “ஓம்காரமாய்’ திகழ்வது விநாயகர் என்றால் அது மிகையில்லை. எனவே தான், விநாயகப் பெருமானை “ஓம்கார நாயகர்’ என்றும் அழைக்கிறோம்.

விநாயகர் ஜாதகம் :

சனிபகவான் ஒரு முறை, விநாயகரைப் பார்த்து, உங்களை நாளை வந்து பிடிக்க வேண்டும்; வருகிறேன் என்றார். சனீஸ்வரனே… எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம்; உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள், “என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள்’ என்று முதுகைக் காட்டினார். நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது, முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். “என்னை வணங்குபவர்களைப் பிடித்தால், உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும்’ என்றார்.

 

source::::: Dinamalar…Tamil Daily

natarajan

Leave a comment