” உங்கள் செல் போன் நம்பர் என்ன என்று மறந்து விட்டால் ” !!!

செல்போன் வருவதற்கு முன்பு, பொதுவாக ஒருவர் அவருக்கு நெருங்கியவர்களின் தொலைபேசி எண்ணை நினைவில் வைத்திருப்பார். அவ்வாறு ஒருவருக்கு ஒரு சிலரது தொலைபேசி எண்களாவது நினைவில் இருக்கும்.

ஆனால், எப்போது லேன்ட் லைன் போன்களை கைவிட்டு நாம் செல்பேசிக்கு மாறினோமோ அப்போது விரல் நுனியில் இருந்த போன் எண்கள் எல்லாம் செல்போன் கீ பேர்ட் நுனிக்கு சென்றுவிட்டது.

இதனால், தற்போது பெரும்பாலானோர் செல்போன் எண்களை நினைவில் வைத்துக் கொள்வதே இல்லை. சரி இதனால் என்ன? எப்போதும் செல்போனை கையிலேயே தானே வைத்திருக்கிறோம், தேவையானவர்களின் எண்ணை போனில் பார்த்துக் கொண்டால் போகிறது என்று சொல்வது எங்களுக்குக் கேட்கிறது.

சரி மற்றவர்களின் செல்போன் எண்ணை மறந்துவிட்டால் செல்பேசியில் பார்த்துக் கொள்ளலாம். திடிரென ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் செல்போன் எண்ணே உங்களுக்கு மறந்துவிட்டால்…

அது எப்படி மறக்கும் என்று கேட்காமல்.. மறந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள். சிரமமே இல்லை. ஒவ்வொரு செல்போன் சேவையும், உங்களது செல்போன் எண்ணை அறிந்து கொள்ள வசதி செய்துள்ளது.

அதனை அறிந்து கொள்ள…

உங்கள செல்பேசி எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்…

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *

 

source:::::Dinamani….TamilDaily

natarajan

One thought on “” உங்கள் செல் போன் நம்பர் என்ன என்று மறந்து விட்டால் ” !!!

  1. A V Ramanathan's avatar A V Ramanathan September 11, 2013 / 5:40 pm

    Very useful and basic information. Thanks.

Leave a comment