படித்து ரசித்தது …ஆபிரகாம் லிங்கன் சொன்ன கதை !!!

அமெரிக்க ஜனாதிபதி ஆனார் ஆபிரகாம் லிங்கன். தேர்தல் சமயத்தில், அவர் வெற்றி பெற உதவிய சிலர், தங்களுக்கும் பதவி கேட்டு, அவரை நச்சரித்து வந்தனர். இது சம்பந்தமாக ஒரு பொது மேடையில் லிங்கன் பேசும்போது, ஒரு கதை கூறினார்…
‘ஒரு மன்னன் வேட்டை யாடப் புறப்பட்டான்; தன் அமைச்சரிடம், ‘இன்று மழை பெய்யுமா?’ என்று கேட்டான். ‘பெய்யாது…’ என்றார், அமைச்சர். அதை நம்பி பரிவாரங்களுடன் புறப்பட்டு சென்றான். வழியில், கழுதை மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தான் ஒரு விவசாயி.
அவனிடம் மன்னன், ‘என்ன குடியானவரே… இன்று மழை பெய்யுமா?’ என்று கேட்டான்.
‘கட்டாயம் பெய்யும்…’ என்றான்.
சற்று தூரம் சென்றதும், கடும் மழை பெய்தது. தொப்பலாக நனைந்து விட்டான் அரசன். திரும்பும் வழியில் அதே குடியானவனைக் கண்டார். ‘மழை பெய்யும் என்று எப்படி உறுதியாக சொன்னாய்?’ என்று அவனிடம் கேட்டார்.
‘மழை பெய்யுமா, பெய்யாதா என்று எனக்குத் தெரியாது; என் கழுதைக்குத் தெரியும். அவை தன் காதுகளை முன்பக்கம் நீட்டிக் கொண்டிருந்தால், அன்று மழை பெய்யும்…’ என்றான் குடியானவன்.
அரண்மனை திரும்பிய அரசன், அமைச்சரை பதவி நீக்கம் செய்து, குடியானவனின் கழுதையை அமைச்சராக்கினான். அதன்பின் தான் பிரச்னை. ஊரில் உள்ள எல்லா கழுதைகளும், தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று நச்சரிக்க துவங்கின…’ என்றார் லிங்கன்.

Source….www.dinamalar.com

Natarajan

Leave a comment