வீணையின் நாதம்
——————–
இசைப்பவர் இசைத்தால் வீணையின்
நாதம் கீதமாக ஒலிக்கும் !
வீணையை அசைப்பவர் கையில்
அது கிடைத்தால் வெறும் ஓசை
மட்டுமாவது கேட்கும் !
இசைப்பவரும் இல்லாமல் அசைப்பவரும்
இல்லாமல் பூசை அறையில் தூங்கும்
ஒரு வீணையைப் பார்த்து கேட்டது
அந்த வீட்டு குழந்தை தன் அம்மாவிடம்
இது என்ன உன் காலத்து கணிப்பொறியா ?
Natarajan …in http://www.dinamani.com dated 6th Jan 2018