தண்ணீர் …
+++++++++++++
தண்ணீர் …தண்ணீர் நாடகமும்
திரைப்படமும் பார்த்த நேரம் புரியவில்லை
தண்ணீரின் அருமை பெருமை !
திரை இயக்கத்தின் பெருமை பேசி
அப்போதே மறந்து விட்டோம் தண்ணீரின் அருமை !
தண்ணீர் தண்ணீர் என்று கலங்கினான்
இந்த மண்ணின் விவசாயி வாடிய அவன்
பயிர் பார்த்து ….அப்போதும் தெரியவில்லை
நகரவாசி நமக்கு தண்ணீரின் அருமை !
காற்று மட்டும் வரும் தண்ணீர் குழாய் ,
வறண்டு கிடைக்கும் குளம் குட்டை ஏரி,
அரண்டு மிரண்டு இருக்கு நம் நகரமே இன்று !
“தண்ணீர் இல்லை எங்க வீட்டிலும் ” என்னும்
ஒரே ஓரு வார்த்தையில் இணைந்துவிட்டோம் நகர
வாசிகள் அனைவரும் இன்று! சாதி ,மத ,மொழி
இனம் பேதம் ஏதும் இல்லை இந்த ” இணைப்புக்கு ” !
“தண்ணீர் இல்லை” என்னும் விதியால் இணைந்த
நாம் சாதி ,மதம் , மொழி பேதம் பாராமல்
மனதாலும் இணைவது எப்போது ?
K.Natarajan