அந்நாளே திருநாள் …
————————-
“உங்க வாக்கு எனக்கு தேவை …
என் சேவை உங்களுக்கு தேவை ..”
என்று சொல்லி யார் கொடுக்கும்
இலவசமும் வேண்டாம் எனக்கு…அது எனக்கு விஷம்
என்று நீ உறுதிபட சொல்லும் அந்த நாளே
ஒரு திருநாள் தம்பி !
என் தேவை என்ன என்று புரிந்து நீ
எனக்கு சேவை செய்வாயா …இல்லை
வெற்றி முகம் பார்த்தவுடன் யார் நீ என்று
உனக்கு வாக்களித்த என்னையே நீ திருப்பிக்
கேட்பாயா ?…என் வாக்கு உனக்கு நான்
அளிக்கும் முன் நீ தர வேண்டும் எனக்கு ஒரு உறுதி மொழி !
” நான் உண்மை ஊழியன் என்றும் உனக்கு ” என்று !
மக்கள் ஊழியரிடம் உறுதி மொழி இதை நீ
கேட்டு பெறும் அந்த நாள் …ஒரு திருநாள் தம்பி !
வெற்றிக்கனி பறித்து ஆட்சியில் அமர்ந்து அதிகார
மமதையில் மக்களின் தேவை என்ன என்பதை
மறந்து தங்கள் தேவை என்ன என்றே குறி
வைத்து காய் நகர்த்தும் உன் ” ஊழியரை “
அடையாளம் கண்டு அவர் செய்யும் வேலைக்கு நீ
கொடுத்த உத்தரவைத் திரும்பப் பெறும் அதிகாரம்
உனக்கு கிடைக்கும் அந்த நாள் …ஒரு திருநாள் !
தன் பதவி நிரந்தரம் அல்ல … ஜன நாயக
மன்னன் நீ நினைத்தால் “மக்கள் ஊழியன் “
என்னும் பதவி , பதவிக் காலம்
முடியும் முன்பே கூட பறி போகும் என்னும்
அச்சம் உன் ஊழியனுக்கு வரும் அந்த நாள்
எனக்கும் உனக்கும் மட்டும் அல்ல …நம்
ஜன நாயகத்துக்கே ஒரு திருநாள் !
வரவேண்டும் விரைவில் அந்த திருநாள் !
பெற வேண்டும் நம் ஜன நாயகம் ஒரு
மறு மலர்ச்சி !
Natarajan
18th Feb 2018
