அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்
இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க வேண்டும் .
அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில் அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர் விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .
அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில் அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.
அடுத்து அஞ்சிலே ஒன்றை தாவி இந்த கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு அஞ்சிலே ஒன்று ஆறு ஆக எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு? ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்
கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்
அஞ்சிலே ஒன்று வைத்தான் இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று முடித்திருக்கிறார் கம்பர் …

கம்பன் எப்போதும் வாழ்வான்