படித்ததில் பிடித்தது !!!…சுந்தரவல்லியும் , அமிர்த வல்லியும் !!!

சுந்தரவல்லியும் அமிருதவல்லியும் மகா விஷ்ணு மற்றும் லஷ்மி தேவியின் மகள்கள். லஷ்மி தேவி விஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்திருந்தபோது திருவிக்கிரம அவதாரத்தில் இருந்த நாராயணரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் பிறந்தவர்களே அந்தப் பெண்கள்.

அவர்கள் இருவரும் தமக்கு கோபமே வராத கணவனே கிடைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

சுந்தரவல்லியும் அமிருதவல்லியும் அவர்களுடைய தந்தை விஷ்ணுவிடம் அதற்கான வரத்தைக் கேட்க அவரும் முருகப் பெருமானை வேண்டிக் கொண்டு விரதம் இருக்குமாறு அறிவுரை கூறினார்

கண்ட வீரப்பு எனும் இடத்தில் சுப்பிரமணியர் தங்கி இருந்தபோது அவருக்கு மனைவியாக வேண்டும் என ஆவல் கொண்டிருந்த சுந்தரவல்லியும் அமிருதவல்லியும் சரவணப் பொய்கைக்குச் சென்று அங்கு கடுமையான விரதம் இருக்கலானார்கள்.

அவர்களுடைய விரதத்தை மெச்சிய சுப்பிரமணியர் அவர்கள் முன் தோன்றி கூறினார்’:

அமிர்தவல்லி இந்திரனின் மகளாக தெய்வானை எனும் பெயரிலும், சுந்தரவல்லி வெத்தாஸ் என்பவர்கள் இனத்தில் வள்ளி எனும் பெயரில் பிறக்க வேண்டும் என்றும் அந்தப் பிறவியில் அவர்களை மணப்பதாக உறுதி கூறினார்

‘அமிர்தவல்லி, நீ இந்திரனால் அவருடைய மகளாக வளர்க்கப்பட்டப் பின் நான் உன்னை மணம் புரிந்து கொள்வேன்’.

அமிர்தவல்லியும் ஒரு பெண் குழந்தை வடிவில் மேரு மலையில் இருந்த இந்திரனிடம் சென்று அவரிடம் கூறினால் ” நான் மகா விஷ்ணுவின் பெண். என்ன வளர்ப்பது உன் கடமை என்பதால் என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார்”. அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை வெள்ளை யானையான ஐராவதத்திடம் கொடுத்தார்.

அந்த யானையும் அந்தக் குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தது. அதனால்தான் அவளை இந்திரனின் தெய்வீக யானை வளர்த்ததினால் தெய்வானை என்ற பெயர் ஏற்பட்டது.

சூரபத்மனை திருப்பரம்குன்றத்தில் சுப்பிரமணியர் வதம் செய்தப் பின் அவளுக்கு முருகனுடன் திருமணம் நடந்தது.
அவளுடைய இளைய சகோதரியான சுந்தரவல்லியும் அந்த அருளை பெற்றாள். அவள் சிவமுனி எனும் துறவிக்குப் பிறந்து வேடர்களின் தலைவனான நம்பி என்பவரால் வளர்க்கப்பட்டாள்.
முருகப் பெருமான் அவளை காதலித்து தன்னிடம் இழுத்து வந்து வள்ளி அம்மாவை (சுந்தரவல்லி) மணம் செய்து கொண்டார்.
அதன் பின் அவர்கள் மூவரும் திருத்தணிக்குச் சென்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.

முருகனின் இரண்டு மனைவிகளும் ஒரு எளிமையான வேடனின் மகளும், தேவர்களின் அதிபதியான இந்திரனின் மகளும் ஆவர். முருகன் அவர்கள் இருவருக்குமே பாரபட்சமற்ற  ஒரே நிலையிலான அன்பைக் காட்டுகிறார். இது காட்டுவது  என்ன என்றால் ஏழை மற்றும் பணக்காரர் என்ற பேதத்தை கடவுள் பார்ப்பது இல்லை.

source:::::Dr.Ganesh Narasimhan and N.R.Jayaraman in murugan.org

natarajan

Leave a comment