துளி …1
சிறகடிக்கும் பறவைக்கு வேண்டாமே பாஸ்போர்ட் …
உறவு தேடி பறக்கும் மனிதனுக்குதான் தேவை பாஸ்போர்ட்டும்
நுழைவு சீட்டும் !!! .
துளி…2
வலையின் அலையால் சுருங்கியது உலகம் இது உண்மை !!!
சுருங்கியது உலகம் மட்டுமா ? இல்லை
இறுக்கமான உறவுகளுமா !!!
துளி …3
ஒரு போஸ்ட் கார்டு அன்று உறவை வளர்த்தது …. இன்று
ஒரு நூறு கார்டு நம் சட்டை பையில் !!!….ரேஷன் கார்டு முதல்
ஆதார் கார்டு வரை…..நம் உறவுகள் யார் யார் என்று சொல்ல !!!
துளி …4
நம் உறவுடன் உரையாட , உறவாட தேவை
ஒரு பாஸ் வோர்ட் !!!….. வலையின் வலிமை அது !!!
நமக்கு நாமே பின்னிக்கொண்ட வலையும் அதுதான் !!!
துளி …5
நம்மை உலகுக்கு அடையாளம் காட்டிய நம்
அம்மா அப்பாவுக்கு மட்டும் தேவை இல்லை நம்
அடையாள அட்டை !
நடராஜன்
14 .12.2013
Thought-provoking poetic lines….Thanks!