: இது ‘ஆப்பிள்’ ஒன்று ‘ஆம்’ ஆன கதை.ஆதர்ஷ் சாஸ்திரி என்பது அவர் பெயர்.
மிகப் பிரபலமான ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மேற்கிந்திய தீவுகள் பகுதியின் விற்பனை பிரிவு தலைவர் அவர். கோடிக்கணக்கில் சம்பளம். அவர் பெயரை அறிமுகமாக்கிக் கொள்ள இப்படியும் சொல்லலாம்: ‘இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான லால்பகதூர் சாஸ்திரியின் பேரன்’.
இந்தியாவில், டெல்லியில், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய ஆம் ஆத்மி அவரைக் கவர்ந்தது. இந்தியாவும் தானும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்று அரசியல் கட்சி இதுதான் என்று மனதார நம்பியவர், கோடிக்கணக்கில் சம்பளம் தரும் பணியை உதறிவிட்டு, இந்தியா வந்து ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
“ஆம் ஆத்மியினால் நிறைய சாதிக்க முடியும்; தாத்தா லால்பகதூர் சாஸ்திரியைப் போன்ற தூய்மையாளர்கள் இக்கட்சியில் உள்ளனர்” என்கிறார் ஆதர்ஷ். ஆதர்ஷின் தந்தையும், லால்பகதூரின் மைந்தருமான அனில் சாஸ்திரி இன்னமும் காங்கிரஸ்ஸில் தான் இருக்கிறார். தந்தையின் சம்மதத்துடனேயே தான் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதாக ஆதர்ஷ் கூறுகிறார்.
source::::inneram .com
natarajan