சித்திரை முதல் நாள் … தமிழ் புத்தாண்டு பிறப்பின் முத்திரை பதிக்கும் நன்னாள்
நித்திரை நீங்கி முக்கனி நாம் பார்க்கும் இனிய நாள் இந்த நாள் …
விஷேட வருடம் விஜய வருடம் ….நலம் பல கொடுத்த நல்ல வருடம்
நன்றியுடன் விடை கொடுப்போம் , நாம் அதற்கு ….இனிதே
வரும் ஜெய வருடமதை இரு கரம் கூப்பி வரவேற்ப்போம் நாம்
அருமையான ஒரு வருடமாக அது அமையட்டும் நமக்கு
பெருமையும் புகழும் சேர்க்கட்டும் நம் நாட்டுக்கு …இறைவன்
அருள் கிட்டட்டும் தொடர்ந்து நமக்கு !!!
நடராஜன்

Very nice Kavithi