இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மிகச் சரியாகப் பயன் படுத்தி வருவது “போன்ல யாருங்க ?” எனக் கேட்கும் மனைவிகள் மட்டும்தான்!
ஆபீசுக்குள்ள, பார்க்கிறவன் எல்லாம் சும்மா இருக்கிற மாதிரி உங்களுக்குத் தோணிச்சுன்னா மேனேஜர் ஆகுற தகுதி வந்துரிச்சுன்னு அர்த்தம்.
எப்ப தம்பி கல்யாணம் பண்ணப் போறீங்க? னு விசாரிக்கிறவங்க யாருக்கும் மகளே இல்லை! விவரமாத்தான்யா இருக்கீங்க!
சரி வாழ்ந்தே தொலைப்போம் என்பதைத் தாண்டிய தற்கொலை எது?
பிரிட்ஜ் இருக்கும் வீடுகளில் அதற்கும் சேர்த்தே சமையல் செய்யப் படுகிறது
மாநகரில் இப்போது யாராவது ஜாயிண்ட் பாமிலியாக இருந்தால் அது பெரும்பாலும் மனைவியின் பெற்றோர் எனக்கொள்!
ஒரு கூட்டத்தில இருக்கற எல்லோரும் உன்னை மட்டுமே பார்க்கணும்னா நீ அவங்களை போட்டோ எடுக்கிறவனா இருக்கணும்
உபயோகமான ஒரு வேலை மற்றும் உருப்படாத நாலு வேலைகளைச் சேர்ந்து பார்ப்பதுதான் “மல்டி டாஸ்கிங்” எனப் படும்
source::::input from a friend of mine
Natarajan