” குறை ஒன்றும் இல்லை , கண்ணா ..”

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீட்டில் விளக்கேற்றி இதைப் படிப்போருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.
* வசுதேவர், தேவகி தம்பதியின் தவப்புதல்வனே! தாமரை மலர் போன்ற சிவந்த திருவடி கொண்டவனே! கருட வாகனனே! கோவர்த்தன கிரியைக் குடையாகப்
பிடித்தவனே! யசோதை இளஞ்சிங்கமே! நந்தகோபன் குமாரனே! கருணைக் கடலே! எங்களுக்கு செல்வ வளத்தை தந்தருள வேண்டும்.
* மதுரா மன்னனே! துவாரகையை ஆட்சி புரியும் கண்ணனே! ராதையின் நாயகனே! கோதை சூடிய மாலையை ஏற்பவனே! கோவிந்தனே! காளிங்க
நர்த்தனனே! யானையின் கொம்பினை ஒடித்தவனே! கோபியர் உள்ளம் கவர் கள்வனே! நாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருள்புரிய வேண்டும்.
* ஆழ்வார்கள் போற்றும் அமுதனே! ஆதி நாராயணனே! கேசவனே! மாதவனே! பசுக்களை மேய்த்தவனே! ஆல இலையில் துயில்பவனே! பாற்கடல் வாசனே! பக்தவத்சலனே! அச்சுதனே! பாம்பணையில் துயில் கொள்பவனே! பரந்தாமனே! உன்னருளால், மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும்.
* திவ்ய தேசங்களில் வீற்றிருக்கும் திருமாலே! கார்மேக வண்ணனே! துளசிமாலையில் மனம் மகிழ்பவனே! கீதையை உபதேசித்த கண்ணனே! மாயம்
செய்வதில் வல்லவனே! பக்தர்களின் தலைவனே! எல்ேலாரும் என்றென்றும் நலமுடன் வாழ இந்த நன்னாளில் அருள்புரிவாயாக.

Source::::Dinamalar.com

Natarajan

Leave a comment