காகிதங்கள்
………..
காகிதக் கப்பலாக விளையாடும் ஒரு காகிதம், கதை ,
கவிதை, பூத்துக் குலுங்கும் புத்தகமாகவும் உருவெடுக்கும் !
செய்தி சொல்லும் ஒரு செய்தித் தாளாகவும் பிரகாசிக்கும் !
ஒரு நல்ல ஓவியனுக்கு காகிதமே ஓவிய அரங்கேற்ற மேடை !
இணைய தள தகவல் பரிமாற்றம் இன்று இருந்தாலும் இரு
இதயங்களின் அன்பை அழகாக சொல்லும் ஒரு அஞ்சல் அட்டைக்கும்
வாழ்த்து அட்டைக்கும் இணையாகுமா இணைய தளம் ?
ஒருவர் வாழ்வின் முக்கிய முடிவுகளும் நிகழ்வுகளும் ஒரு பத்திர
வடிவில் “பத்திரமாக ” இருப்பதும் அந்த காகித உருவில்தானே !
புத்தம் புது “கரன்ஸி ” நோட்டுக்கு இணையாக கசங்கிய
நோட்டும் மதிக்கப் படுவதும் அந்த காகித ரூபாய் நோட்டே !
குப்பைக்கு செல்லாத ஒரே காகிதம் அந்த காகித நோட்டே !
வெற்று காகிதத் தாள் வெற்றித் தாளாவதும் , அல்லது
வெறும் குப்பையாக மாறுவதும் காகிதத்தின் கையில் இல்லை !
வாழ்க்கை என்னும் காகிதத்தில் நாம் வரையும் வரைபடம்தான்
தீர்மானிக்கும் நம் வாழ்க்கை காகிதம் ஒரு வெற்றித் தாளா ?
இல்லை … வெறும் குப்பையா…? என்று !
Natarajan….My Kavithai in http://www.dinamani.com ….published on 1st August 2016