வாரம் ஒரு கவிதை ….” வர்ண ஜாலம் ” 2

வர்ணஜாலம்
++++++++++++++
வானவில் காட்டும் விண்ணில் வர்ணஜாலம் !
நாட்டிய மேடையில் வர்ணம் படைக்கும் அந்த
நாட்டியமேடைக்கே  ஒரு வர்ணஜாலம் !
ஒரு கலைஞனின் கையில் தூரிகை
இருந்தால் அது படைக்கும் திரையில்
வண்ண ஜாலம் !
இசைக்கலைஞரின் இசை கேட்டு மெய்
மறந்து இசையை அசை போடும் அவர்
ரசிகர் கூட்டம் …அது இசையின் தனி
ஒரு மந்திர ஜாலம் …இசையின் வர்ணஜாலம் !
இது எதுவுமே இல்லாமல் வெறும்  வாய்ப்
பந்தல் மட்டுமே போடும் ஒரு கூட்டம் !
இதை செய்வேன் அதை செய்வேன்
திரிப்பேன் மணலைக் கயிறாக நான்
என்பார் சிலர் !…வெறும்  வார்த்தை ஜாலம் !
வார்த்தை ஜாலத்தை  வர்ண ஜாலமாக
நம்பி வாக்கும் அளிப்பார் வாக்காளர்
வாய் சொல் வீரருக்கு !
நம்பி வாக்களித்த வாக்காளர் கண் முன்னால்
திரும்பி வரவே மாட்டார் அந்த வேட்பாளர்!
அது அவர் செய்யும் மாயா ஜாலம் !
கந்தசாமி  நடராஜன்
07/08/2019

வாரம் ஒரு கவிதை …” வர்ணஜாலம் ” 1

வர்ணஜாலம்
+++++++++++++
விண்ணில் ஒரு வண்ணக்கோலம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
வானவில் ! அது ஒரு வர்ணஜாலம் !
என் வீட்டு வாசலில் ஒரு மாக்கோலம்
வெள்ளை மாக்கோலம் செம்மண் கட்டி !
அதுவும் ஒரு வர்ண ஜாலம் !
கோலம் போடுவது எப்படி? …தேடுகிறார்
சிலர் ” கூகிளில் ”  !
அது இந்த காலத்தின் கோலம் !
கோலம் போடும் கலை  சிலருக்கு
இன்னும் ஒரு மாயாஜாலம் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  07/08/2019
07/08/2019

வாரம் ஒரு கவிதை ….”கருப்பு “

கருப்பு
++++++
தாயின் கருவறையில் துயில் !
தெரியாது அப்போது உலகம்
கருப்பா இல்லை சிவப்பா என்று !
மண்ணில் பிறந்ததும் இந்த குழந்தை
கருப்பு இந்த குழந்தை சிகப்பு என்பார்
அதன் முகம் பார்த்து !
குழந்தைக்கு அப்போதும் தெரியாது தான்
கருப்பா சிகப்பா என்று !  மற்றவர்
குழந்தையை மட்டும் கருப்பு சிகப்பு என்று
அடையாளம் காட்டும் அவர் குழந்தை
மட்டும் கருப்பாய் பிறந்தாலும் கருப்பில்லை !
என் குழந்தை மா நிறம் என்பார் !
காக்கைக்கு தன் குஞ்சு மட்டுமே
பொன் குஞ்சு!
K.Natarajan   in http://www.dinamani.com  dated  1st August 2019

வாரம் ஒரு கவிதை …” அதி ரூபன் தோன்றினானே …”

அதிரூபன்  தோன்றினானே …
++++++++++++++++++++++++++++
அதி ரூபனாகத்  தோன்றி அருளும்
அத்தி வரதன் சொல்லும் செய்தி
என்ன தெரியுமா ?
இந்த மண்ணில் நான் வாசம் செய்யும் சமயம்
நான் முடிக்க வேண்டிய பணியோ ஏராளம் !
உடன் முடிக்க வேண்டும் அந்த அருட்பணி
அத்தனையும் மீண்டும் என் ஜல வாசம்
தொடங்கும் முன்!
என் மண்ணின் வாசம் எத்தனை நாள்
தெரியும் எனக்கு ! இந்த மண்ணில்
உன் வாழ்க்கை  எத்தனை நாள் இன்னும் ?
தெரியுமா உனக்கு  மனிதனே ?
புரிந்து நடந்து கொள்  மனிதா நீ !
அத்தி வரதன்  எனக்கே இந்த மண்ணில்
வாழ்வு  ஒரு சில நாட்களே என்றால்
என்னைப் பார்க்கத் துடிக்கும் உனக்கு
நீ காணும் ஓவொரு காலையும் உனக்கு
மறு பிறவியே !
நாளை  நாளை என்று நாளைக் கடத்தாமல்
இன்றே இப்போதே உன் கடமையை
செய்து முடித்துவிடு மனிதா நீ !
நிரந்தரம் என்று எதுவும் இல்லை எனக்கும்
உனக்கும் !
K .நடராஜன்
in http://www.dinamani.com  dated 24/07/2019
24/07/2019

வாரம் ஒரு கவிதை ….” அன்பே சிவம் “

அன்பே  சிவம்
+++++++++++++++
ஆசை அன்பு  அச்ச அன்பு இறை அன்பு
என்று அன்பு எடுக்கும் பல அவதாரம் !
இது ஒரு  மஹரிஷியின் வாக்கு !
எல்லா உயிரையும் இறைவனாகப்
பார்த்து பாவித்து இறை அன்பை
வேண்டி நின்றால்  இறைவன் பொழிவான்
அவன் அன்பை உன் மேல் தம்பி !
அன்பே சிவம் என்னும் உண்மை நிலை
உனக்கு புரிந்து விட்டால் , இறை அன்பு
தவிர்த்து , ஆசை அன்பும், அச்ச அன்பும்
துச்சமாகத்  தெரியும் மிச்ச வாழ்வில் உனக்கு !
இறை அன்பு ஒன்றுதான் நிலையானது
என்னும் உண்மை  உனக்கு தெரிய வரும் நேரம்
அன்பே சிவம் என்பதின் அர்த்தமும்  புரியும்
உனக்கு  தம்பி !
K.Natarajan
in www. dinamani.com dated 17th July 2019

வாரம் ஒரு கவிதை ….” இனிமேல் மழைக் காலம் “

 

இனிமேல் மழைக் காலம்
+++++++++++++++++++++++
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம்
பொறக்குது …இனிமேல் மழைக் காலம்
இனிமேல் மழைக் காலமே !அத்திப்
பூத்தாற்போல் பெய்யும் வான் மழை
போல்  வீட்டு வாசலில் நின்று குரல்
கொடுக்கும்  குடுகுடுப்பைக் காரன் !
அசரீரி மாதிரி குரல் கொடுக்கும் அந்த
மனிதரின் கையில் இருக்கும் குடுகுடுப்பை
என் கண்ணுக்கு வானிலை நிலைய
“ரேடார்” ஆகாவே  தெரியுது அய்யா !
மழைக்காலம் அது ஒரு கனாக் காலம்
என்று எண்ணிக்கொண்டிருந்த  எனக்கு
குடுகுடுப்பையின் குரல் இடி மின்னல்
மழையின் முன்னோட்டமாகவே  தெரியுது
அய்யா !
இனிமேல் மழைக் காலம் என்றால் அதை
விட வேறு எந்த காலம் நல்ல காலம் ? !
K .நடராஜன்   in http://www.dinamani.com dated 10/07/2019
10th July 2019

வாரம் ஒரு கவிதை ….” ஆட்டுக்குட்டியை நனைத்த மழை ” 2

ஆட்டுக்குட்டியை நனைத்த  மழை ….2
++++++++++++++++++++++++++++++
அணிவகுத்து வந்தீங்க …திரண்டு வந்து
“குண்டு  மழையும்”  பொழிந்தீர்கள்  எங்கள்
மண்ணில் நீங்க !
ஆயிரம் ஆயிரம் நன்றி உங்களுக்கு எங்க
மண்ணையும் முத்தமிட்டு எங்க மனதையும்
குளிர வைத்த மேகக் கூட்டங்களே !
எங்க மண்ணை நீங்க தொட்டு முத்தமிட்ட
நேரம் மறந்து விட்டோம் எங்க வீட்டு
ஆட்டுக்குட்டியை !
எங்க வீட்டுக் கடைக்குட்டி பொழிந்து தள்ளி
விட்டாள் ஒரு “அழுகை மழை” எங்க
வீட்டுக்கு உள்ளே !
” என் செல்ல ஆட்டுக்குட்டியை நனைத்து
விட்டதே இந்த மழை  என்று ! எங்க
வீட்டுக் கடைக்குட்டிக்கு தெரியாதே   அவள்
செல்ல ஆட்டுக்குட்டிக்கும் தேவை இந்த மழை என்று !
K.Natarajan
04/07/2019

வாரம் ஒரு கவிதை … ” ஆட்டுக்குட்டியை நனைத்த மழை “

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை
+++++++++++++++++++++++++++++++
வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி  ஆடாகவே இருக்கும் !
மழையில்  அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும்  மகிழ்ச்சியில் !
ஆட்டுக்கு தெரியும் மழை  அதை
நனைக்குமே  தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று …! மழை  ஒரு  ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !
ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில்  நம்  வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !
எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத்  தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !
நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல …நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
K.Natarajan
 in http://www.dinamani.com  dated 03/07/2019

வாரம் ஒரு கவிதை ….” நெடு வாழ்வின் நினைவு “

நெடு வாழ்வின் நினைவு
+++++++++++++++++++++++
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்தது இந்த பூமி !
சில நாள்  வாழ்ந்தாலும்  பல நாள் வாழ்ந்தாலும்
பதிக்க வேண்டும் நான்   ஒரு நல்ல முத்திரை !
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நானும்
படைக்க வேண்டும் சரித்திரம் !
ஆயிரம் பிறை காண ஆசை எனக்கு  என் நெடு
வாழ்வில் ! அந்த நெடு வாழ்வின் நினைவலைகள்
மீது விடாது தொடர வேண்டும் என் படகுப்
பயணம் …நெடு வாழ்வின் இனிய பயணம் !
என் பயணம் முடிந்தாலும் தொடர வேண்டும்
என் பிள்ளைகள் பயணம் அதே படகில்
என் நெடு வாழ்வின் நினைவலைகள் மீது !
படைக்க வேண்டும் அவரும் ஒரு சரித்திரம்
அவரவர் நெடு வாழ்வில் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  26/06/2019