வாரம் ஒரு கவிதை …” இழந்தது கிடைக்குமா எனக்கு ? “

 

இழந்தது  கிடைக்குமா  எனக்கு ?
===================================
வீடு இருந்தது… வீட்டை சுற்றி மரம் இருந்தது
மரம் நிறைய பறவைகள் கூட்டுக்குள்ளும்,
மரத்தின் கிளைகளிலும்!!! …வீட்டுக்குள்ளே
கிணறு  இருந்தது … கிணறு நிறைய தண்ணீர்!
வீட்டின் பின்னால் தோட்டம் .  தென்னம்
பிள்ளையும் வீட்டின் பிள்ளைகளோடு
பிள்ளைகளாக !
என் வீடு ,தோட்டம் இருந்த இடம்
இப்போ ஒரு பெரிய அடுக்கு மாடி
குடியிருப்பு ! என் ஒரு வீடு இருந்த
இடத்தில் இருக்கு இப்போ ஒரு நூறு வீடு !
பறவைக்கூடு போல நானும் ஒரு வீட்டுக்குள் !
தொலைத்து விட்டேன் என் பெரிய வீட்டை
கை நிறைய காசு , அடுக்கு மாடி சொகுசு
என்னும் மாய வலையில் சிக்கி !
தாத்தா நான் புலம்புகிறேன் இப்போ
தொலைத்து விட்டேனே ,தெரியாமல்
தொலைத்து விட்டேனே என்று !
என் புலம்பல் கேட்ட பேரன் கேட்டான்
தொலைந்தது என்ன என்று சொல்லுங்க
தாத்தா …நான் தேடி எடுத்துக் கொடுக்கிறேன்
உங்களுக்கு  என் கூகுள்  தேடல் வழியே !
நான் என்ன பதில் சொல்ல என் பேரனுக்கு ?
K.Natarajan
25/04/2019