நந்தி காதுகளில் ரகசியம்****************
நந்திஸ்வரர் காதுகளில் நாம்
சொல்லலாமா ? அப்படி சொல்லுவது
என்றால் என்ன சொல்ல வேண்டும்……..
நம் நாட்டில் சிலை வழிபாடு மிக மிக
முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது.
என்பதனை நாம் அறிவோம். எந்தனை
அற்புதங்களை கண்ட சித்தர்கள் இதில் எந்த
வித குழப்பமும் இல்லாமல் நமக்கு கற்களை
தேர்ந்து எடுத்து கொடுக்க காரணம் நாம்
அறிந்து கொள்ளவேண்டும் . கற்கள் , பாறை
என்று மட்டும் அவர்கள் நினைக்க வில்லை,
இவைகள் ஒளியும் ஒலியும் சேர்ந்தது என்று
அவர்கள் புரிந்து கொண்டனர். ஆம் கற்களை
தேர்வு செய்வதில் மிக மிக வல்லமை
படைத்தவர் கருவுரார் சித்தர்.. போகர்
இவரிடம் தாம் சிலைகளை செய்ய
சொல்வார். ஒரு கல்லை (பாறை )
(பாறை ) பார்த்து
அதில் 32 லக்ஷணம் அமைந்து இருந்தால்
அவை வழிபாட்டிற்குஉகந்தது என்று முடிவு
செய்வார் இவர் . பாறையின் உள்ளேதேரை
இருந்தால் அவைகள் ஒச்சம் என்று
விட்டுவிடுவார்.