படியுங்க ….கடிதான் ….இருந்தாலும் சிரியுங்க …!!!

பல் டாக்டரை பார்க்க போனேன் ,
அங்க லேடி டாக்டர் இருந்தாங்க…
திரும்பி வந்துட்டேன்
.
.
ஏன் என்றால் நாம் எந்த
பொண்ணுகிட்டயும்
பல்லைகாட்டி நிற்க
கூடாது பாருங்க…!

…….


நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் … – எடிசனின் நெருங்கிய நண்பன்

…….

****** கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன்
எழுதிய கவிதை *********

“உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது”

“வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது”


வாழைப்பழம் என்ன‌ விலை?
ஒரு ரூபா சார்!
60 பைசாவுக்குத் தரமாட்டிங்களா?
(நக்கலாக‌) ” அதுக்கு வெறும் தோல் தான் கிடைக்கும் ”
“அப்ப‌ இந்தா 40 பைசா,, பழத்தை கொடு ! தோல‌ நீயே வச்சுக்கோ


எந்த ஆம்பிளையையும் பொய் சொல்ல வைத்து விடும் ..மனைவியின் இந்த கேள்வி?
.
“.ஏங்க நான் அழகா இருக்கேனா?”

…………

ஜட்ஜ் : “கூண்டில் ஏறாமல் எதற்காக நடந்துகொண்டே சாட்சி சொல்கிறாய்..?”

குற்றவாளி: “நீங்கதானே எஜமான் நடந்ததை நடந்தபடி சொல்லச் சொன்னீங்க.

……..

Source…input from a friend of mine…

Natarajan

 

Leave a comment